அனைவருக்கும் வணக்கம்,
“கோள் ஈர்ப்பு விசை மாறுமா”
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பிரமாண்டமானது என்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் பிரமாண்டமானது என்று தான் கூற வேண்டும். காரணம் பிரபஞ்சம் இயற்கையில் அமைந்திருக்கும் முறைகளே ஆகும்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும்
- நிற்கும் அமைப்பு முறை
- நின்று கொண்டே சுழலும் முறை
- தன்னை தானே சுற்றிக் கொள்ளும் முறை
- சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் முறை
- பிரபஞ்சத்திற்குள் சுற்றி வரும் முறை
- குறிப்பிட்ட கால அளவில் சுற்றி வரும் முறை
- கோளிற்குள் எத்தனையோ இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமது சுற்று வட்ட பாதையில் மாறாது சுற்றி வருதல்
- கோளிற்கு வெளியில் எத்தனையோ இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமது சுற்று வட்ட பாதையில் மாறாது சுற்றி வருகிறது.
இதுவே இயற்கையின் விதிகள்.
நியதிகளாக அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட பிரமாண்ட பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் அமைப்பில் நிகழும் ஈர்ப்பு விசை சக்திகளின் சங்கமங்களை அறிவோமா!
மாறாத ஒன்றில் மாற்றம் நிகழ்ந்தால் இப்பிரபஞ்த்தின் விதிகள் மாறுமா அல்லது அதற்கு உரிய விதிகள் வேறு விதமாக இருக்குமா என்பதை அறிவோம்.
அறிந்து கொள்வோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
மதிப்பிற்குறிய உங்களுக்கு எனது பணிவான வணக்கம். தங்களின் உன்னதமான ஆய்வுகள் பூவுலகத்தின்கு மிகவும் பயனுள்ளதாகவும், அவசியத் தேவையான ஒன்றாகவும் கருதுகின்றேன். தங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
இறைவா நன்றி
நன்றி, கண்ணன்.