சந்திரன் ஆராய்ச்சியாளர்

ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்

நிறுவனர் & தலைவர் – ஜீவயோகம்

ஆராய்ச்சியாளர், பிரபஞ்ச இயல் அறிவியல்

ஆராய்ச்சி

ஆராய்ச்சியாளர் உரை (about Researcher)

அணைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் வாழ நாம் அணைவருக்கும் விருப்பம் இருக்கிறது.

அதற்கு முதற் காரணம்

மனிதர்கள் பூமியில் வாழ துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை நாம் ஆகாயத்தில் – புற கண்களால் கண்கள் கூசாமல் பார்த்த ஒரு கோள் என்றால் அது சந்திரன் ஆகும். சந்திரனை வெள்ளை நிலா, பால் நிலா, பவல நிலா, குளிர் நிலா, இரவில் வழி காட்டும் நிலா, எல்லோர்கும் பிடித்த நிலா….. என்று பார்பவரை பார்க்க செய்தது, பரவசப்பட செய்தது.

சந்திரன் நாம் வாழும் சூரிய குடும்பத்தில் ஒன்றானது.

பூமிக்கு அருகில் சுற்றி வருவது.

பூமிக்கு துணை கோள் ஆனது.

மனிதன் முதன் முதலில் செல்ல ஆசைபட்டதும், சென்றதும் சந்திரனுக்குத்தான் என்பதை அறிவோம். சந்திரனில் தமது வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்ததில் – அதற்கு ஏற்ப சூழ்நிலை முழுமையாக இருக்கிறதா என்பதை அலசி ஆராய்வதற்குள் தங்களது எண்ணங்கள் செவ்வாய், சூரியன்…. என பிற கோள்கள் நோக்கி ஆய்வு பயணம் மேற்கொள்கிறது. அதே வேளையில் சந்திரனில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு முயற்சி செய்யவும் செய்கிறது. பூமியில் உள்ள நெருக்கடியான சூழ்நிலை கருதி வாழ்வாதாரத்தை அமைக்க முயற்சி செய்கிற போது,

ஈர்ப்பு விசை குறைவு,

சுவாச இயல் காற்று பற்றாக்குறை,

நீர் இருப்பு தெரியாத நிலை,

பகலில் வெப்பம் 130 டிகிரி செல்சியஸ்,

இரவில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ்

என பல்வேறு சிக்கல்களுக்கு விடை காண இயலாத சூழ்நிலையாக அமைந்திருக்கிறது.

இதே வேளையில் தான் சந்திரனில் வாழ்வதற்குரிய வழிமுறைகள் எது என்பதையும், அதை விஞ்ஞான ரீதியாக எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் எடுத்துரைத்து வழி காட்ட வருகிறேன்.

வாருங்கள் ஒன்று கூடுவோம்,

வாழ்வியல் ஜோதியை சந்திரனில் ஏற்றி வைப்போம்.

வாழ்வாதார கட்டமைப்புகளை உருவாக்கி வாழ்வியல் முறைகளை உருவாக்குவோம்.

நன்றி, வணக்கம்.