அறிவின் உயர்நிலைக்கு சோதனை – சந்திரன்

அனைவருக்கும், வணக்கம்.

சந்திரன்: “அறிவின் உயர்நிலைக்கு (உச்சக்கட்டத்திற்கு) சோதனை – பரிசோதனை”.

மனிதனது வாழ்வியல் ‘அறிவை’ மையப்படுத்தியது ஆகும். “நடைமுறை வாழ்வியலின் நிகழ்வுகள், நிகழ்வுகள் வாயிலாக உருவாகும் அனுபவங்கள், அனுபவங்களால் உருவாகும் விளைவுகள், விளைவுகளின் கூட்டு முயற்சிகள், கூட்டு முயற்சிகளின் வெளிப்பாடுகள், வெளிப்பாடுகளின் ஆற்றல் மூலக்கூறுகள், மூலக்கூறுகளின் ஒருங்கிணைப்பு சக்தியும், அதன் கூட்டமைப்பால் இயங்கும் இயக்க சக்தியை அறிவியல் என்கிறோம்”.

பூமியில் மனிதர்களின் வாழ்வியல் அரங்கேற்றம், துவக்க காலம் முதல் இன்றைய காலம் தொடரும் விஞ்ஞான மூல அமைப்புகளின் ஒருங்கிணைப்பையே அறிவியலின் உச்ச கட்டம் என்கிறோம்.

இன்றைய அறிவின் உச்ச கட்டத்தால் பூமியை கடந்து பிற கோள்களுக்கு சென்று உயிரினங்களின் வாழ்வாதார அமைப்பை உருவாக்கிட செயல்படுகிறோம். பிற கோள்களுக்கு சென்று வாழ்வாதாரத்தை நிர்மாணிக்கும் முறைகளை அலசி ஆராய்கிற போதுதான் மனித அறிவிற்கு புலப்படாத, புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகளை சந்திக்கின்றோம்.

அதாவது

  • பிரபஞ்ச சுழற்சி இயக்க அமைப்போடு இணைந்து இயங்கும் “கோள் ஈர்ப்பு விசை,
  • கோளின் சுழற்சி இயக்க ஈர்ப்பு விசை,
  • வெப்பம் – குளிரின் தன்மைகள்,
  • அதன் கால அளவுகள்,
  • இரவு – பகல் கால அளவுகள்,
  • உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழ்நிலைகள் தென்படாது இருத்தல் ……

போன்ற இயற்கை இயங்கும் சூழ்நிலை அமைப்புகளை சீரமைக்கும் நிலைகள் எவ்வாறு என்ற “மகத்துவம் வாய்ந்த வினாவிற்கு” விடை தேடும் முயற்சியில் தான் மனிதர்களின் உச்ச கட்ட அறிவிற்கு சோதனை காலமாக அமைந்திருக்கிறது.

வாருங்கள், “விஞ்ஞான அறிவாற்றலை ஒருங்கிணைப்போம் சோதனை கலைவோம், சாதனை புரிவோம்”

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of