உடம்பில் உயிர் உள்ளவரை வெப்பம் தங்கும்.
இப்பூமியில் வெப்பம்(சூரியன்) உள்ளவரை உயிர் செழிக்கும்.
இவ்வுடம்பில் நீருள்ளவரை இயக்கம் சீராக அமையும்.
இப்பூமியில் நீர் அமைந்த காலம் வரை சீராக இயங்கும்.
இவ்வுடம்பில் காற்றுள்ளவரை உயிர் இயங்கும்.
இப்பூமியில் காற்றுள்ளவரை உயிரியல் இயங்கும்.
இவ்வுடம்பில்லை எனில் உயிர் இயக்கம் இல்லை.
இப்பூமியில் மண் இல்லையெனில் உயிரியல் இயக்கத்திற்கு வழி இல்லை.
நம் வாழ்வில் ஆகாயம் இல்லையெனில் அறிவியலுக்கு வேலை இல்லை.
இப்பூமியில் ஆகாயம் இல்லையெனில் எதுவும் நிகழவே இயலாது.
நீர் நெருப்பு காற்று ஆகாயம் மண் எனும் பஞ்சபூத கூட்டமைப்பில் ஆகாயத்தின் வாயிலாக என் அனுபவத்தை கேள்வி ஞானம் கலந்து வெளிப்படுத்துகிறேன், வாருங்கள் கலந்துரையாடுவோம்
“வாழ்வியலுக்கு ஆகாயம் வழியளித்தால் அது நெருக்கடியா அல்லது சுத்திகரிப்பா?
நமது வாழ்வியலில் சுத்திகரிப்பு செயல்களில் ஆகாயத்தின் பங்கீட்டை உணர்ந்தாள், ஆகாயத்தின் தனித்துவத்தை அறிய முற்பட இயலுமா?
அதாவது நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிற பொழுது. நம் உடம்பினுள் அமைந்த நீர், நெருப்பு, காற்றின் மீதுள்ள கழிவை சுத்திகரிப்பு செய்ய வேண்டியதுண்டு. இதில் ஆகாயத்தின் பங்கீட்டை உணர உணர சுத்திகரிப்பின் செயல் இயல்பாகிவிடுகிறது.
எவ்வாறு நம் வாழ்வு செழிக்க பஞ்சபூதங்களின் தனித்துவ மகத்துவத்தை அறிய வேண்டியதிருக்கிறதோ, அதுபோல் நாம் வாழும் இப்பூமியிலோ அல்லது சந்திரன் போன்ற பிற கோள்களிலோ சுத்திகரிப்பு செய்தலின் செயல், நம் வாழ்வியல் செழிப்படையவும், வாழ்வியல் உருவாக்குவதற்கும் அடிப்படை ஆகிவிடுகிறது.”
ஆகாயத்தின் தனித்துவத்தையும், தனித்துவ செயல்பாட்டையும் அறிய முற்பட வேண்டியதுள்ளது….
நன்றி, வணக்கம்.
அன்பு லிவின் அவர்களுக்கு வணக்கம்.
தங்களது ‘ஆகாயம் கற்றல் ‘ கட்டுரை ‘ வெளியீட்டில் சீரமைக்கப்பட வேண்டிய கருத்துக்களை பாருங்கள். புரிந்து கொள்ளுங்கள்.
“இவ்வுடம்பில் உயிருடன் இணைந்து இயங்கும் காற்றின் (உயிர் மூச்சு காற்று) தொடர்பு இணைப்பு இருக்கும் வரை உடம்போடு உயிர் இணைந்திருக்கும்”.
“உயிரின் இயக்கம் இரு வகையானது”.
1. ஜட உயிர்
2. ஜடமற்ற உயிர்.
“உயிரின் இயக்கத்தை அறிவோம்.
ஜடமற்ற உடலில் இணைந்து இயங்கும் உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் அவ்வுடலானது ஜட உயிரின் இயக்கத்துடன் (மரு பரினாம சுழற்சி) இணைந்து இயங்கும் நிலைக்கு உட்படுகிறது”.
“உடலை விட்டு பிரிந்த உயிரின் இயக்கம் அதன் மூலத்துடன் இணைந்து இயங்கும்”.
“பஞ்ச பூதங்களுடன் இணைந்து இயங்கும் ஆகாயத்தை தனித்து பிரித்து எவ்வாறு விளக்குவது என்பதை புரிந்து கொண்டீர்களா”…..
நன்றி, வணக்கம்.
உங்கள் அன்பு வழிகாட்டலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்,
* காற்றின் தொடர்பு இணைப்பு என்னும் கருத்தின் மகத்துவ மென்மையை புரிந்துகொள்ள இயலுகிறது.
* நுண்ணுயிர்களை ஜட உயிர் என்று குறிப்பிட முடியுமா?
*
-> “முயற்சிக்கிறேன், மேலும் முயற்சி செய்கிறேன். நீங்கள் இவ்வாறு வினவுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது”
நன்றி, வணக்கம்.