சந்திரனில் வாழ

 

விஞ்ஞானத்தின் இலக்கு மனித வாழ்வாதாரத்தை எளிமையாகவும், வலிமையாகவும், விசாலமானதாகவும், பாதுகாப்பானதாகவும், முறைபடுத்தப்பட்டதாகவும், வருங்கால வாழ்வியலுக்கு வழி காட்டுவதாகவும், காலத்திற்கு ஏற்ப அவசிய மாற்றங்களை உருவாக்கி தருவதாகவும் அமைந்திட வேண்டும். இவ்வாறு விஞ்ஞான உலகின் தார்மீக கருத்துடன் இயங்குகிற வேளையில் சந்திரனில் வாழ, வாழ்வாதாரத்தை உருவாக்கிட வேண்டிய அவசிய சூழ்நிலையில் இருக்கிறோம். 

  • சந்திரனுக்கு விஞ்ஞானிகள் சென்று வருகின்றனர். ஆகவே போக்குவரத்து தயாராகிவிட்டது.
  • மண்ணையும், கல்லையும் எடுத்தாகிவிட்டது. ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வாழ்வாதாரம் உருவாக்கிட மண் போதுமா?

  • சுவாசத்திற்கு ஏற்புடைய காற்று வேண்டும். 
  • வாழ்வாதாரத்திற்கு தேவையான நீர் வேண்டும். 
  • சந்திரனில் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய வெப்பம் – குளிர் போன்ற நிகழ்வுகள் இயற்கையில் அமைந்திருக்க வேண்டும். 

இது போன்ற அடிப்படை சூழ்நிலைகள் அமைந்திருக்கின்ற வேண்டிய நிலையில் சந்திரனில் உள்ள நிலைகளை அறிவோமா?

சந்திரனில்:

  • சுவாச இயல் காற்று பற்றாக்குறை,
  • நீரின் இருப்பு நிலை தெரிந்தும் – தெரியாத நிலையில் இருக்கிறது. 
  • வெப்பத்தின் அளவு பூமியை விட பலமடங்கு அதிகமாக இருக்கிறது. 
  • குளிரின் அளவு பூமியை விட பலமடங்கு அதிகமாக இருக்கிறது. 
  • பகல் – இரவு பூமியை விட 14 மடங்கு அதிகமாக இருக்கிறது …….

இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் முரண்பாடாக அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். 

சந்திரனில் வாழ சீரமைப்பு முறைகள் என்பது மிகவும் சிக்கலாவும், சூட்சுமம் நிறைந்ததாகவும் அமைந்திருக்கிறது என்பதை அறிவோமா?

“சீரமைப்புகளை அறிவோம் வாருங்கள்.
இணைந்து செயல்படுவோம் வாருங்கள். “

நன்றி, வணக்கம்.
ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of