அனைவருக்கும், வணக்கம்.
“அமைதியான நிலா – ஆக்ரோஷமான செவ்வாய் “
பூமியில் வாழ இடப் பிரச்சனை,
இயற்கை பாதிக்கப்பட்ட பிரச்சனை,
இயல்பான, இயற்கையோடு இணைந்த வாழ்வியலை இழந்துகொண்டிருக்கும் நிலை,
இயற்கையில் மாசுகலை கலந்திடும் நாம் மனித நேயத்திலும் மாசுகளை கலந்திடும் நிலை,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை காடுகளை அழிப்பதால் அதில் வாழும் உயிரினங்கள் வாழ இடம் இல்லாமல் அழித்துக்கொண்டிருப்பது …..
என பல்வேறு பிரச்சனை, சிக்கல் காரணமாக வாழ்வதற்கு வேறு கிரகங்களை தேடி செல்கிறோம். அதில்,
அமைதியான நிலாவா – ஆக்ரோஷமான செவ்வாயா எனும் கேள்விக்கு இடையில் உள்ள சிக்கலை கவனிப்போம்.
அமைதியான நிலா என்றால் வெப்பம் – குளிர் கூடுதலானது.
இரவு – பகல் சுற்றி வரும் காலம் அதிகம். ஈர்ப்பு விசை குறைவு.
பூமியில் இருந்து சென்று வரும் தூரம் குறைவு.
ஆக்ரோஷமான செவ்வாய் ஏன்றால் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டிருக்கும் புயல் காற்று.
செல்லும் தூரம் அதிகம்.
தொடரும் புயல் காற்றில் வாழ்வாதாரத்தை தேடுவதை விட நிலவில் நீரை தேடுவோம்.
நீரினால் சுத்திகரிப்பு முறைகளும், வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு நிலவின் கட்டமைப்புகளை நமது பிரமாண்டமான அறிவின் துணைகொண்டு உருவாக்குவோம். அதாவது நிலவின் சுழற்சி இயக்கத்தையே மாற்றி அமைப்போம். நிலவில் வாழ்வாதாரத்திற்கு உரிய இயற்கை சுழற்சி இயல் மற்றும் இயற்கை வாழ்வியலை உருவாக்குவோம்.
வாருங்கள் ஒன்று கூடி நிலவில் வாழ்வை உருவாக்குவோம்.
நன்றி, வணக்கம்.
வாழ்வாதார அமைப்புகளை இயற்கை முறைகளின் துணைகொன்டும், விஞ்ஞான அமைப்பு முறைகளின் துணைகொன்டும் அலசி ஆராய்வோம்.
அறிந்து கொள்ளும் முறைகளில் தான் சூட்சுமம் அமைந்திருக்கிறது என்பதை அறிவோம். நன்றி.
வாழ்வாதார அமைப்புகளை இயற்கை முறைகளின் துணைகொன்டும், விஞ்ஞான முறைகளின் துணைகொன்டும், அலசி ஆராய்ந்தால் அறிய வேண்டிய சூட்சுமங்களை அறியலாம். நன்றி.
நமக்கு அருகில் உள்ள சந்திரனில் வாழ முயற்சி செய்வோம். நன்றி.