அனைவருக்கும், வணக்கம்.
அழகான நிலா – ஆபத்து இல்லா நிலா.
இயல்பான நிலா – இயற்கை பராமரிப்பு இல்லா நிலா.
கவிஞர்களின் இதயத்தில் வாழும் நிலா –
எவரும் சென்று வாழ இயலாத நிலா.
அறிஞர்கள் ஆறு முறை சென்று வந்த நிலா –
அவர்கள் ஆனந்தப்பட எதுவும் தராத நிலா.
குழந்தைக்கு சோறூட்ட.வாய்ப்பளித்த நிலா –
குழந்தை முதல் பெரியவர் வரை வாழ வாய்ப்பளிக்காத நிலா.
பூமிக்கு துணைக்கோளான நிலா –
பூமிக்கு அருகில் சுற்றிவரும் நிலா.
மனிதன் சென்ற முதல் கோள் நிலா –
மனித அறிவுக்கு புலப்படாத நிலா.
வளர்பிறையாய் ,தேய்பிறையாய் ஒளி தரும் நிலா –
அஞ்ஞானிகளின் அறிவுக்கு இருள் தரும் நிலா.
விஞ்ஞானிகள் சென்றுவர வாய்ப்பளித்த நிலா –
மெய்ஞானத்தில் வாழ வழிகாட்டும் நிலா.
என்னைச் சுற்றி வர, அறிந்துகொள்ள விண்கலம் அனுப்புகிறாய் ! என்னைச் சுத்தம் செய்ய மனிதர்களை அனுப்புவாயா!!
விவாதத்திற்கு வாய்ப்பளிக்கிறாய்,
விதண்டாவாதம் பேசவும் வாய்ப்பளிக்கிறாய்,
வதந்திகள் பேசுவோரின் வாயடைக்க, “சிவமதியின் வாயிலாக பேச வருகிறாய் “.
மண்ணை அறிந்தோம் – நீரை அறிவோம்.
வெப்பம் (மின்காந்த அலைகள்) அறிந்தோம் – அது தனிக்கும் வழி அறிவோம்.
காற்றை அறிந்தோம் – சுவாசிக்க ஏதுவாய் மாற்றி அமைப்போம்.
வறட்சித் தன்மையை அறிந்தோம் – வான் மழை பெய்திட வழி செய்வோம்.
நீரை அறிவோம் – மண் மாசுக்களை அகற்றிடுவோம்.
தாமதமாய் சுற்றிவரும் நிலவை – தயாள குணத்துடன் சுற்றி வர வழி செய்வோம்.
சந்திரனின் ஈர்ப்புவிசையை துரிதமாக்குவோம்.
சந்திரனின் கோள் காந்தத்தை – திட திரவ சுழற்சியை சுழல வைப்போம்.
விண் கற்கள் விழும் தாக்கத்தை – விண்ணிலேயே பஸ்பமாக்கிடுவோம்.
இரவு – பகல் மாற்றங்களை இயல்புநிலை ஆக்குவோம் …….
சந்திரனில் வாழ வாழ்வியல் ஜோதியை ஏற்றி வைப்போம்.
சந்திரனில் வாழ வாருங்கள் , வாருங்கள் – என வாழ்த்துச்செய்தியை அகில உலகமும் அனுப்பிவைப்போம்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply