சந்திரனில் வாழ விருப்பமா என்று யாரிடம் கேட்டாலும்……
“ஆம் என்று சொல்வார்களா, அல்லது இல்லை என்று சொல்வார்களா”
- ஆம் என்றும் சொல்வார்கள். ஏன் என்றால் சந்திரன் புதிய உலகம். புதிய உலகில் வாழ்வது புதிய அனுபவம். புதிய சிந்தனை, புதியதோர் பகிர்ந்து கொள்ளுதல், சந்திரனில் வாழ பூமியில் இருந்தே அனைத்து பொருள்களும் கொண்டு செல்ல வேண்டும். அதுவும் கொண்டு செல்லும் அனைத்து பொருள்களும் புதிய பொருள்களாகவே இருக்கும். புதிய பொருள்களை வைத்து வாழ்வாதாரத்தை உருவாக்குவது என்பது ஆக்கப்பூர்வமான அதேசமயம் சவாலான, சுவையான செயலாகும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பல ஆயிரம் ஆண்டுகளாக கனவு கண்ட விசயம் நடைமுறையில் அரங்கேற்றம் ஆகிற மகிழ்ச்சியில் இருப்பதாகும் என்பதை அறியலாம்.
- சந்திரனில் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும் சொல்வார்கள். ஏன் என்றால் சந்திரன் புதிய உலகம். புதிய உலகில் வாழ்வது பொருளாதார செலவுகள் அதிகமாகும். புதிய வாழ்வாதாரத்தை உருவாக்குவது மிகவும் கடினமான செயலாகும். புதிய உலகம் உருவாக்கப்படுகிற நிகழ்வில் நாமும் பங்கெடுப்பது, நமது வாழ்வாதாரத்தை நாமே உருவாக்கி வாழத்துவங்குவது என ஏராளமான விசயங்கள் உள்ளடங்கி இருக்கிறது என்பதை அறிவதில் ஏற்படுகிற ஆனந்தமே ஆகும்.
இதை எல்லாவற்றையும் விட பூமியில் வாழ்ந்த வாழ்வாதாரத்தை விட்டுச்செல்வது மிகவும் கடினமான, மன உலைச்சலுக்கு உரிய செயலாகும். அதற்கு மிகவும் முக்கியமான காரணமாக உறவுகள், பழகியவர்கள், தொழிற்கூட்டமைப்பில் கலந்து கொண்டவர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நிலம், தோட்டம், ………. என ஏராளமான விசயங்கள் உள்ளடங்கி இருக்கிறது.
சந்திரனில் வாழ விரும்புவது – விரும்பாமல் இருப்பது அவரவர் விருப்பம் என்பதை அறிந்து தான் செயல்படுவோம். வாருங்கள் ஒருங்கினைவோம்,
எங்கு வாழ்ந்தாலும் சிறப்பான வாழ்வாதாரத்தை உருவாக்குவோம்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply