அனைவருக்கும் வணக்கம்,
அணைத்து வளங்களும், சிறப்புகளும் உள்ளடங்கிய பூமியில் நமது (மனிதர்கள்) வாழ்வு அரங்கேறி இருக்கிறது.
இயற்கையின் சிறப்புகளால் பூத்து குலுங்கும் இப்பூமியில் நமது வாழ்வு பூத்து குலுங்கவே உருவெடுத்தது விஞ்ஞானம். நமக்கும், நாம் வாழும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை நிறைவு செய்யவே விஞ்ஞானம் எனும் பேரறிவு நமக்குள் இருந்து வெளிப்படுகிறது.
நாம் வாழும் இப்பூமி, பஞ்ச பூதங்களால்* ஒருங்கிணைந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் உள்ளடங்கி இருக்கிறது. பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றும் தனித்தும், இணைந்தும் இயங்க கூடிய ஆற்றல் பெற்றவை ஆகும். பஞ்ச பூதங்களால் ஒருங்கினைந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் இயற்கை எனும் மாபெரும் சங்கம அமைப்புகளே மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை ஆகும்.
(*ஆகாயம், வெப்பம், காற்று, மண், நீர்)
இயற்கையில் தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வியலுக்கு உயிர் ஆதார சக்தியாக பஞ்ச பூதங்களின் சங்கம பரிணாம உள் கட்டமைப்பே மூல ஆதாரமாக அமைந்திருக்கிறது.
இதில் தாவரங்களும், உயிரினங்களும், இயற்கை அமைப்புகளும் இணைந்து இயங்குகிற முறைகளே மனித வாழ்வியலுக்கு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது.
தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதார அமைப்புகளை உற்று நோக்க, உற்று நோக்க நாம் எவ்வாறு வாழ்தல் எனும் வாழ்வியல் அனுபவ முறைகள் உருவெடுத்தது. இதுவே இயற்கை அமைப்பு முறைகளில் செயற்கை வடிவம் உருவெடுத்தலுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
அதாவது இயற்கை சக்திகள், தாவர சக்திகள், உயிரினங்களின் சக்திகளோடு தங்களது (மனிதர்கள்) சக்திகள் உடலிற்குள்ளும் – மனதிற்குள்ளும் – உயிருக்குள்ளும் ஊடுருவிய சக்திகள் வாழ்வாதார சக்திகளாக, இயந்திரவியல் சக்திகளாக, இயற்கையோடு இணைந்து இயங்கும் சக்திகளாக உருவெடுத்தது.
மனிதர்களின் வாழ்வியல் இணைந்து இயங்குகிற முறைகளில் தான் மனிதர்களின் சக்திகள் புதிய பரிணாம வடிவமைப்புகளுக்குள் புத்துயிர் பெறுகிறது. இதனால் இயற்கையில், இயற்கையோடு இணைந்த செயற்கை வடிவம் இயங்கும் முறைகள் உருவெடுத்து வெளி வருகிறது.
மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க, அதிகரிக்க வாழ்வாதார சிறப்பம்சங்கள் உருவாகிக்கொண்டே வருகிறது. மண் மீது, நீர் மீது, வெப்பத்தின் மீது, காற்றின் மீது, ஆகாய தொடர்புகள் மீது என துவங்கிய விஞ்ஞான அறிவு பிற கோள்களுக்கு சென்று வாழக்கூடிய வாழ்வாதார முறைகளுக்கு அஸ்திவாரம் போடுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
தனித்துவம் வாய்ந்த மனிதர்களின் வாழ்க்கைத் தரம் வானளவு உயர்ந்து நிற்க பஞ்ச பூதங்களின் தொடர்பு அறிவே மிக சிறப்பான முறையில் நமக்குள் இருந்து அனுபவ இயலாக வெளி வருகிறது.
இதுவே மனிதர்களின் வாழ்வை மலரச்செய்கிறது.
இவ்வாறு உயிரியல் வாழ்வியலுக்கு ஆதாரமாக அமைந்திருக்கும் அறிவின் தொடர்பு அமைப்பையே விஞ்ஞான மூலம் என்கிறோம்.
விஞ்ஞான மூலமே மனித சமுதாயத்தின் வாழ்வியலுக்கு ஆனி வேராக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.
ஆனந்தமாக வாழ்வோம்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply