மனிதர்கள் பல காலம் கண்களால் பார்த்து ஏங்கியது. கைகளால் தொட்டு பார்த்து விட மாட்டோமா எனும் கற்பனையில் மிதந்தது. அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது என்ற எண்ணத்தில் இருந்து கொண்டிருந்த மனித சமுதாயத்திற்கு விடிவு காலம் வந்தது. சந்திரனுக்கு விண்கலம் சென்றது.
விஞ்ஞானிகளும் சென்றனர்.
சந்திரனில் பல ஆச்சரியங்களோடு தொடரும் ஆய்வில் வாழ வழி இல்லை எனும் கேள்வி தொடர்கையில் நாம் வாழ வழி உண்டு, அதற்கு நமது தேடுதல் முயற்சியை தொடருவோம். நீரை காண்போம். நிலத்தில் வாழ்வோம் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையில் தமது ஆய்வு பயணத்தை தொடர்கிறார். நம்பிக்கையோடு தொடரும் தங்களோடு நாமும் வருகிறோம். சந்திரனில் வாழ விஞ்ஞான வழிகள் அனைத்தையும் அலசி ஆராய்வோம். அனுபவ வழிகள் அனைத்தையும் தேடுவோம். தேடியதில் கிடைத்த அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம். வாழ்வாங்கு வாழ வழி சொல்வோம். வாழ்ந்திட முயற்சி செய்வோம்.
“வாழ்க்கையில் நம்பிக்கை நலம் தரும் முயற்சியின் ஆனி வேர்”
Leave a Reply