சீரமைக்கப்பட்ட கால அளவுகள்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் இயற்கை கட்டமைப்புகளை சீரமைக்கப்படுகிற பொழுது சந்திரனின் கோள் ஈர்ப்பு விசையின் தன்மையில் மாற்றங்கள் உருவாகிறது. மேலும் சந்திரனின் சுழற்சி இயக்கங்களில் மாற்றங்கள் உருவாகிறது. அதாவது தன்னை தானே சுற்றி வரும் கால அளவுகள், சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கால அளவுகள் என இரண்டிலும் மாற்றங்கள் உருவாகிறது.

சந்திரனில் வாழ்வாதாரத்திற்காக இயற்கை கட்டமைப்புகள் சீரமைக்கப்படுவதற்கு முன்பு வரை சந்திரனின் சுழற்சி இயக்கமானது மிக மிக மெதுவான (சுழற்சி காலம்) வேகத்தில் சுழன்று வருவதை அறிவோம். அதாவது தம்மை தாமே சுற்றி வரும் கால அளவும், சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கால அளவும் ஒரே அளவில் இருக்கிறது. இரு வகை சுழற்சி கால அளவுகளும் தோராயமாக 28 நாட்கள் என்பதை அறிவோம்.

சந்திரனின் சுழற்சி காலமான 28 நாட்களில் உருவாகும் கால அளவில் தான் பகல் – இரவு முறைகளும் நடைபெறுகிறது.

சந்திரனின் சுழற்சி முறையில் உருவாகும் பகல் – இரவு முறைகளில் எத்தனை மணி நேரம் பகல் என்பதும், எத்தனை மணி நேரம் இரவு என்பதும் (28 நாட்கள் சுழற்சி காலத்தில்) இது வரை எந்த ஆய்வுகளும் தெரியப்படுத்தவில்லை என்பதை அறிய வேண்டும்.

சீரமைப்பினால் உருவாகும் கால அளவு:
சந்திரனில் இயற்கை கட்டமைப்புகள் சீரமைக்கப்படுகிற நிகழ்வுகளில் இவ்விரு வகை சுழற்சி கால அளவுகளும் ஒரே அளவில் தான் இருக்கும் என்பதை அறிய வேண்டும். அதாவது சந்திரன் சுழன்று வரும் கால அளவானது 28 மணி நேரமாகிறது என்பதை அறிய வேண்டும். இதில் 14 மணி நேரம் பகல் கால நேரமாக அமைகிறது. அதுபோலவே 14 மணி நேரம் இரவு கால நேரமாக அமைகிறது என்பதை அறிய வேண்டும்.

சந்திரனின் சுழற்சி காலம் 28 நாட்களில் இருந்து 28 மணி நேரமாக மாறி அமைவதற்கு உரிய காரணம் யாதெனில் இயற்கை கட்டமைப்பில் உருவாகும் சீரமைப்பே ஆகும். இந்த சீரமைப்பு முறைகளை விரிவாக அறிந்தால் புரியவரும். எவ்வாரெனில்

  • மண் – நீர் சுத்திகரிப்பு முறைகளால் மின் காந்த அலைகளின் தாக்கம் குறைவது ஒரு காரணமாக அமைகிறது. அதாவது சந்திரனில் நிலவும் வெப்பம் சீராகிறது. வெப்பத்தாக்கம் சீராவதால் குளிரின் தாக்கமும் சீராகிறது.
  • வெப்பம் – குளிர் தாக்கம் சீராகிற போது தென்றல் காற்று உருவாகிறது.
  • வெப்பம் – குளிர் சீராகும் போது கோள் ஈர்ப்பு விசையின் தன்மையில் மாற்றங்கள் உருவாகிறது.
  • கோள் ஈர்ப்பு விசையின் தன்மையில் உருவாகிற மாற்றங்களால் கோள் மைய அச்சின் சுழற்சி இயலில் மாற்றங்கள் உருவாகிறது (திட – திரவ சுழற்சி இயல் இயக்கம்) என்பதை அறிகிற போது தான் சந்திரனின் சுழற்சி இயல் இயக்க மாற்றங்களை புரிந்து கொள்ள இயலும் என்பதை அறியலாம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of