சந்திரனில் நீர் சேகரம்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சீரமைக்கப்படுவதற்கும், உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்படுவதற்கும் உள்ள மகத்துவம் வாய்ந்த தொடர்களை அறிவது மிக மிக அவசியம் ஆகும். ஏனென்றால் சந்திரனில் மிக நீண்ட நெடுங்காலமாக மண்ணும், நீரும் பயன்படுத்தாமல் இருப்பதால் இயற்கை மாசு அடைந்திருக்கிறது. இயற்கை மாசுகள் கலந்திருக்கும் மண்ணையும், நீரையும் பூமியில் உள்ள மனிதர்களும், உயிரினங்களும், தாவரங்களும் நேரடியாக பயன்படுத்த இயலாது. ஆகவே சந்திர மண்ணையும், நீரையும் மண் – நீர் சுத்திகரிப்பு முறையில் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துதல் அவசியமாகிறது. அவ்வாறு சுத்திகரிப்பு செய்த மண் – நீர் அமைப்பில் தான் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும்.

சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக உருவாக்கிட நீர் சேகரிப்பு முறை என்பது அவசியமாகிறது.

நீர் சேகரம்:
சந்திரனில் நீர் சேமிப்பு முறைகளுக்கு மண் – நீர் சுத்திகரிப்பு செய்த பகுதிகளையே பயன்படுத்த வேண்டும்.

(படம்) மண் – நீர் சுத்திகரிப்பு செய்த பகுதி.

அவ்வாறு செய்கிற போது தான் சுத்திகரிப்பு செய்த நீராக உயிரியல் வாழ்வாதார அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் விதமாக அமையும்.

நீர் சேகர வாய்க்கால்:
சந்திரனில் நீர் சேமிப்பு முறைகளுக்கு பயன்படுத்தப்படும் வாய்க்கால் அமைப்புகளுக்கு மண் – நீர் சுத்திகரிப்பு செய்த பகுதிகளையே பயன்படுத்துதல் என்பது அவசியமாகிறது. அப்போது தான் சுத்திகரிப்பு செய்த நீரை முறையாக கொண்டு செல்லுதல் முறையாக அமையும். அதாவது இயற்கையால் பாதிக்கப்பட்ட மண் – நீரோடு கலக்காமல் நீர் சேமிப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்ல இயலும்.

(படம்) மண் – நீர் சுத்திகரிப்பு செய்த பகுதியில் வாய்க்கால்

நீர் சேகர வாய்க்கால் முறை என்பது துவக்க காலத்தில் இயற்கை கட்டுமான முறைகளாகவே அமைய வேண்டும். அப்போது தான் நீரை பயன்படுத்தி கொள்ளும் முறைகள் நமக்கு எவ்வளவு அவசியமோ அதுபோலவே பஞ்ச பூத சக்திகளும் மண் மேற்பரப்பிலும், உட்பரப்பிலும் முறையான செயலாகும். வாய்க்கால் கட்டுமான பணிகளில் இயற்கை கட்டுமான முறை என்பது இயற்கையோடு இணைந்து இயங்கும் முறையாகவும், மிக நீண்ட கால தேவைகளுக்கு ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ளும் முறையாகவும் அமையும். இதனால் மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள் என்பதோடு மாத்திரம் அல்லாமல் செயற்கை இயல் திட்டங்களுக்கும் முறையாகவும், ஆரோக்கியமானதாகவும் அமையும். இதனால் காற்று, நீர் மாசுக்கள் கலந்த கழிவுகள் உருவாவது குறையும். அவ்வாறு உருவாகிற கழிவுகளை சுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்வதும் எளிதாகும் என்பதை அறியலாம்.

குளங்கள், ஏரிகள் அமைத்தல்:

சந்திரனில் மனிதர்கள் தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதார தேவைகளுக்காக நீர் சேகரிப்பு முறைகளை உருவாக்குகிறோம். அவற்றில் இயற்கை சார்ந்த முறையாக அமைப்பது சாலச்சிறந்த முறையாகும். அதில் குளங்கள், ஏரிகள் என்பது பூமியில் பிரசித்தி பெற்ற முறையாகும்.
சந்திரனில் அவ்வாறு குளங்கள், ஏரிகள் உருவாக்கப்படும் போது மண் – நீர் சுத்திகரிப்பு செய்த பகுதிகளயே பயன்படுத்துதல் அவசியமாகும்.

(படம்) மண் – நீர் சுத்திகரிப்பு செய்த பகுதிகளில் குளங்கள், ஏரிகள்

அவ்வாறு குளங்கள், ஏரிகளை உருவாக்குகிற போது தான் சுத்திகரிப்பு செய்த நீரை, சுத்திகரிப்பு செய்த மண் பகுதியில் சேகரித்து பயன்படுத்தும் ஆரோக்கிய முறையாகும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of