உயிரியல் முறையில் வாழ்வு

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் ‘உயிரியல் முறையில் வாழ்வியல்’

ஒரு கோளில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாகிட / உருவாக்கிட வேண்டும் என்றால் அக்கோளில் இயற்கை கட்டமைப்பு முறைகள் சீராக அமைந்திருக்க வேண்டும்.

இயற்கை கட்டமைப்பு முறைகள்:
வெப்பம், குளிர், கோள் ஈர்ப்பு விசை, மைய அச்சு சுழற்சி, கோள் சுழற்சி இயல், பகல் – இரவு கால அளவுகள், நுண்ணுயிர்களின் வெளிப்பாடு, பாதுகாப்பு வளையம்.

“சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கிட வேண்டும் என்றால் முதலில் இயற்கை கட்டமைப்பு முறைகள் இயற்பியல், வேதியியல் முறையில் சீராக்கப்பட வேண்டும்”.

சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கிட இயற்கை கட்டமைப்பை சீராக்குதல் என்பது அவசியமாகிறது. விஞ்ஞான கட்டமைப்பு முறையோடு உயிரியல் வாழ்வாதாரம் அமைக்கப்பட இருப்பதால் சந்திரனில் நடைபெறும் ஒவ்வொரு இயக்கங்களையும் கூர்ந்து, கவனித்து, ஆராய்ந்து அறிய வேண்டும்.

உயிரியல் முறை:
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் என்பது முதலில் சந்திரனில் உள்ள உயிரியல் (நுண்ணுயிர்கள்) வாழ்வாதாரத்தை மேன்மைபடுத்த வேண்டும்.

சந்திரனில் உள்ள உயிரியல் (நுண்ணுயிர்கள்) வாழ்வியலை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தால் தான் பூமியில் இருந்து கொண்டு வரும் உயிரியல் அமைப்பு முறைகளை சந்திர மண் ஏற்றுக்கொள்ளும் என்பதை அவசியம் அறிய வேண்டும்.

இயற்கை
இயற்கை – உயிரியல் வாழ்வாதாரம்

சந்திர மண்ணில் மண் – நீர் சுத்திகரிப்பு முறையும், கோள் ஈர்ப்பு விசையும் ஒருங்கிணைகிற போது தான் மண்ணின் உட்பரப்பில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் மேற்பரப்பில் வாழ வருகை தரும். நுண்ணுயிர்களின் வாழ்வாதார வருகையால் சீரமைக்கப்பட்ட இயற்கை கட்டமைப்பு என்பது உயிரியல் வாழ்வாதார இயற்கை கட்டமைப்பாக அமையும் என்பதை அறியலாம்.

சந்திர மண்ணின் உட்பரப்பில் இருந்து வந்த நுண்ணுயிர்கள் சந்திர மண்ணின் மேற்பரப்பில் நிகழும் வெப்பம், ஈரப்பதம், காற்று, மண் அமைப்பு மற்றும் மண்ணின் மேற்பரப்பில், உட்பரப்பில் நிகழும் இடைவெளி இயக்கங்கள் எனும் பஞ்ச பூத அமைப்புகளோடு இணைந்து வாழ பழக வேண்டும். மேலும் நுண்ணுயிர்களின் பரிணாம வளர்ச்சியானது வெப்பத்திலும், ஈரப்பதத்திலும், காற்றிலும் மண் அமைப்போடு கலந்து பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். அப்பொழுது தான் சந்திர மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்
வெப்ப நுண்ணுயிர்களாக,
நீர் நுண்ணுயிர்களாக,
காற்று நுண்ணுயிர்களாக,
மண் நுண்ணுயிர்களாக என உருமாற்றம் கொண்டு உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் சந்திரனின் இயற்கை கட்டமைப்புகளோடு இணைவதற்கு உரிய சாத்திய கூறுகள் உருவாகும்.

பூமி நுண்ணுயிர்களை ஏற்றல்:
சந்திரனில் சந்திர நுண்ணுயிர்களின் வாழ்வாதாரம் மேலாண்மை அடைகிற போது பூமியில் இருந்து கொண்டு வரப்படுகிற நுண்ணுயிர்களை தாவரங்களை தமது வாழ்வாதார சூழ்நிலைகளோடு இணைத்து கொள்ளும். அதாவது பூமி நுண்ணுயிர்களை சந்திர நுண்ணுயிர்கள் தங்களது இயற்கை கட்டமைப்பில் உள்ள அனைத்து நுண்ணுயிர்களின் (சந்திரனில் உள்ள வெப்ப – நீர் – காற்று – மண் நுண்ணுயிர்கள்) சங்கங்களோடு இணைத்து கொள்ளும்.

பூமி – தாவரங்கள்:
சந்திரனில் சந்திர நுண்ணுயிர்களும், பூமி நுண்ணுயிர்களும் ஒருங்கிணைந்த வாழ்வியல் (உயிரியல்) பரிமாற்றத்திற்கு பிறகு தான் பூமியில் இருந்து கொண்டு வரப்படும் தாவர வாழ்வியலுக்கு வாழ்வு தரும் அமைப்பாக விளங்கும்.

பூமி – சிறு உயிரினங்கள்:
சந்திரனில் தாவரங்களின் வாழ்வியலை உருவாக்குவதற்கு சந்திரன் – பூமி நுண்ணுயிர்கள் துணையோடு சிறு வகை புழு, பூச்சி இனங்களின் தேவை அவசியமாகிறது. எனவே துவக்க நிலை தாவரங்களின் வாழ்வியலுக்கு தேவையான உயிரினங்களை சந்திரனுக்கு கொண்டு வரும் நிகழ்வுகள் நடைபெறுதல் வேண்டும்.

மனிதர்களின் துவக்க நிலை வாழ்வு:
சந்திரனில் துவக்க நிலையில் தாவரங்கள் அதற்கு துணையாக சிறு வகை உயிரினங்களின் வாழ்வாதார உருவாக்கங்களை உருவாக்க முயற்சி செய்கிற போது மனிதர்கள் வாழும் சூழல் உருவாகிறது. மனிதர்களின் வாழ்வாதாரம் என்பது புதியதோர் இயற்கை தாவர வளர்ச்சி இயலுக்கும், உயிரினங்களின் வாழ்வாதார இயலுக்கும் அவசியம் என்பதை அறிய வேண்டும்.

தாவரங்களும், உயிரினங்களும் வாழ்கின்ற வாழ்வாதார சூழ்நிநிலை அமைப்பில் மனிதர்கள் வாழ்வதற்கு உரிய அனைத்து சாத்திய கூறுகளும் அமைந்து இருக்கும் என்பதை அறியலாம்.

எனவே சந்திரனில் மனிதர்களின் வாழ்வாதாரம் அரங்கேற
இயற்பியல் வாயிலாக இயற்கை கட்டமைப்பு சுழற்சி இயல் முறைகளும்,
வேதியியல் வாயிலாக வாழ்வாதார சுத்திகரிப்பு முறைகளும்,
இயற்பியல் – வேதியியல் வாயிலாக சந்திரனின் நுண்ணுயிர்கள் வாழ்வாதார அமைப்பிலும்,
உயிரியல் முறைகள் வாயிலாக தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என உயிரியல் வாழ்வாதார வாழ்வியலை விஞ்ஞான ரீதியாக உருவாக்கித்தர இயலும் என்பதை அறிவோம்.

அறிவதை (மானிட சிறப்பு – பகுத்தறிவு) அறிந்து வாழ்ந்ததால் ஆனந்தம் என்றும் நமக்கே (உயிரியல் வாழ்வியலுக்கே) சொந்தம் என்பதை அறிவோம்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of