உயிரினங்கள்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் என்பது மனித சமுதாய வரலாற்றில் மிகப்பெரிய, புதியதோர், வியத்தகு சாதனையாகும். ஏன் இவ்வாறு கூறுகிறோம் என்றால் மனிதனது துவக்க காலத்தில் இருந்து என்னில் அடங்காத முயற்சிகளுக்கு பிறகு விஞ்ஞானத்தின் வளர்ச்சி உருவெடுத்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வளர்ச்சி அடைந்த நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக விண் வெளி ஆய்வு திகழ்கிறது. பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய விண் வெளி ஆய்வு பயணத்தில் ஒன்றாகவே சந்திரனில் சேட்டிலைட் வாயிலாகவும், நேரடியாகவும் ஆய்வுகளை மேற்கொள்கிற விதமாக அமைந்திருக்கிறது. அவ்வாறு ஆய்வுகளை மேற்கொள்கிற போது மனித வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கின்ற முடிவாக எமது ஆய்வுகள் தொடர்கிறது. அவ்விதம் மேற்கொண்ட ஆய்வின் தொடர்ச்சியாக
* சந்திரனின் இயற்கை கட்டமைப்பு சீரமைத்தல், மேலும் நில வளம், நீர் வளம் அமைத்தல்.
* சந்திரனில் உள்ள நுண்ணுயிர்களின் வாழ்வாதாரம்,
* பூமியில் உள்ள நுண்ணுயிர்களின் வாழ்வாதாரம்,
* பூமியில் உள்ள தாவரங்களின் வாழ்வாதாரம்
என தொடரும் வாழ்வாதார முயற்சியில் தாவரங்களின் வளர்ச்சி இயலுக்கு துணையாக சிறு புழு, பூச்சி இனங்களை வாழ வைப்பது எனும் முடிவில் தொடரும் நிகழ்வுகளை கையாள வேண்டும்.. தாவரங்களின் வளர்ச்சியில் சிறு வகை புழு பூச்சி இனங்களின் துணை இல்லாமல் தாவரங்கள் வளர, வாழ இயலாது என்பதை அறிய வேண்டும்.

சிறு வகை புழு, பூச்சி இனங்களை தொடர்ந்து ஊர்வன, மிதப்பன, நடப்பன, பறப்பன எனும் நிகழ்வில் அமைந்திருக்கும் உயிரினங்களில் சிறு வகை உயிரினங்களை சந்திர மண்ணில் தாவரங்களுடனும், சிறு புழு, பூச்சி இனங்களுடனும் இணைந்து வாழும் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதாகும். மேலும் மனித வாழ்வாதாரத்தின் சீரமைப்பு பணிகளை தொடர சிறு, பெரு உயிரியல் கட்டமைப்புகளை உருவாக்கிடும் முயற்ச்சியில் ஈடுபாடு கொள்வதாகும். இதனை தொடர்ந்து பல்வேறு தாவர அமைப்புகளையும், இயற்கை வாழ்வியலுக்கும், உயிரியல் வாழ்வியலும் கும் தேவையான உயிரினங்களை சந்திரனுக்கு கொண்டு சென்று தாவரங்களுக்கு, உயிரினங்களுக்கு வாழ்வு தந்து சந்திரனில் இயற்கை முறைகளை மேன்மைபடுத்தி மனித வாழ்வாதாரத்தையும் நிலை நிறுத்துவோம்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of