வேதியியல் முறையில் சுத்திகரிப்பு

(சந்திரனில் வாழ விஞ்ஞான முறையில் தீர்வு)

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் உயிரியல் வாழ்வாதார முறை என்பது நமது ஆய்வில் விஞ்ஞான கட்டமைப்பு முறைகளில் உருவாக்கப்படுகிறது. இருப்பினும் (பூமியில்) நடைமுறை வாழ்க்கையில் அமைந்திருக்கும் அனைத்து வாழ்வியல் வழி முறைகளும் கையாளப்படுகிறது.

வாழ்வியல் முறைகள் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக இயற்கை கட்டமைப்பு முறைகளோடு இணைந்து உருவாக்கப்படுகிறது.

சந்திரனில் வாழ்வாதார முறைகளை உருவாக்கும் விஞ்ஞான முறைகளை அறிவோம்.

பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பு முறைகளை விஞ்ஞான இயல் ரீதியாகவே அறிகிறோம். அவ்வாறு அறிதலின் வாயிலாக நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம்.

பூமியில் மிக நெடுங்காலமாக நமது வாழ்வாதார பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு செல்கின்ற மனித வாழ்வியல் பயணமானது விஞ்ஞான ஆய்வியலை மையமாக கொண்டுள்ளது.

விஞ்ஞான மையத்தின் கட்டமைப்பு
1. இயற்பியல்
2. வேதியியல்
3. உயிரியல் எனும் மூன்று மாபெரும் பிரிவுகளாக உள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி விஞ்ஞான வளர்ச்சியின் பால் கொண்டு செல்கிறோம்.

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக மனித தேவைகள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் வாழ்வியல் இட பற்றாக்குறையும், பூமியில் மாசுகள் அதிகரிப்பால் இயற்கை வளங்கள் பாதிப்படைதலும் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் விளைவாகவே பூமியின் துணை கோளாக விளங்கும் சந்திரனில் மனித வாழ்வாதாரத்திற்கு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்திரனில் மனித வாழ்வாதார முறை என்பது

இயற்பியல் முறையில் தீர்வாகவும்,
வேதியியல் முறையில் சுத்திகரிப்பு முறையாகவும்,
உயிரியல் முறையில் வாழ்வாதாரமாகவும்
எமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

இயற்பியல் முறையில் தீர்வு:
இயற்பியல் முறையில் தீர்வு என்பது சந்திரனில் உள்ள இயற்கை கட்டமைப்புகளை இயல்பாக இயங்க – இயக்க (பூமியில் வாழும் உயிரியல் வாழ்வாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சந்திரனின் சுழற்சி இயக்கமும், பிர இயற்கை கட்டமைப்பு முறைகளும்) வடிவில் (முறையில்) சீரமைப்பதாகும்.

இயல்பு – இயக்க முறையில் சீரமைக்கின்ற ஒவ்வொரு முறைகளையும் வேதியியல் முறையில் ஆய்வுகளை மேற்கொள்கிறோம்.

வேதியியல் முறையில் ஆய்வு (சுத்திகரிப்பு) :

மனித வாழ்வாதாரத்திற்காக சந்திரனில் இயல்பு – இயக்க முறையில் இயற்கை கட்டமைப்பு முறையில் சீரமைத்தாலும் அதன் ஒவ்வொரு சீரமைப்புகளையும் வேதியியல் முறையில் ஆய்வுகளை மேற்கொள்கிறோம்.

சந்திரனில் இயற்கை கட்டமைப்புகளை இயல்பு – இயக்க முறையில் சீரமைக்கும் முதல் முயற்சியே மண் – நீர் சுத்திகரிப்பு முறையாகும். இம்முறையில் பாதிக்கப்பட்ட மண்ணையும் – நீரையும் சுத்திகரிப்பு முறையை மேற்கொள்கிற போது
நீர் – தெளிவில் தேர்ச்சி பெறுதலும்,
மண் – மூல அமைப்புகளில் ஒருங்கிணைதலும் வேதியியல் ஆய்வு முறைகளில் பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மண் – நீர் சுத்திகரிப்பு முறையில் உருவாக்கப்படுகிற மண்ணில் இருந்து வெளியேறும் நீர் ஆவியின் நிலை
முதல் சுத்திகரிப்பு,
இரண்டாம் சுத்திகரிப்பு,
மூன்றாம் சுத்திகரிப்பு என மண்ணும், நீரும் இணைந்து இயங்கும் தன்மையில் இருந்து அறிந்து கொள்ளும் முறையாகும்.
இதில்
நீரின் சுவை,
நீரின் தன்மை,
நீரின் திடம்
நீரின் நிறம் …….. போன்றவை உயிரியல் வாழ்வாதார தேவைகளுக்கு ஏற்ப இணைந்திருக்கும் தன்மையில் அமைவதாகும்.

நீரின்றி அமையாது உலகு
நீரின்றி அமையாது உலகு.
நன்நீரே உயிர் மண்ணுக்கும்,
உயிர் உடலுக்கும் ஆதாரம்.
“ஆதாரத்தை அறிவோம், ஆனந்தமாக வாழ்வோம்”

சந்திரனில் மண் – நீர் சுத்திகரிப்பு முறையில் நீர் சுத்திகரிப்பு முறைகள் போலவே மண் சுத்திகரிப்பு முறைகளிலும்
முதல் சுத்திகரிப்பு,
இரண்டாம் சுத்திகரிப்பு,
மூன்றாம் சுத்திகரிப்பு முறையில் இருந்து அறிந்து கொள்ளும் முறையாகும்.
இதில்
மண் வாசனை,
மண் ஒட்டும் தன்மை,
மண் ஆரோக்கியம்,
மண் நிற ஒருங்கிணைப்பு,
கலப்பின மண்ணிலும் சுத்திகரிப்பு தேர்ச்சி,
மண் பிற சத்துகளோடு இணையும் தன்மை,
சந்திர நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான ஆரோக்கிய தன்மை,
பிற கோள் (பூமி…) நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அமைப்புக்களை பெற்றிருத்தல் ஆகும்.
நுண்ணுயிர்கள் (சந்திரன் – பூமி) வாழ்வியல் வளர்ச்சி இயலுக்கு பிறகு தாவரங்கள் வளர்வதற்கு உரிய ஆக்கப்பூர்வமான ஆய்வுகளை வேதியியல் ரீதியாக ஆய்வுகளை மேற்கொள்ளுதல் ஆகும்.

வெப்பம் – குளிர் இயல்பு தன்மை:
மண் – நீர் சுத்திகரிப்பு முறைகளில் மண்ணின் மேற்பரப்பிலும் – உட்பரப்பிலும் வெப்பம் – குளிர் பற்றிய ஆய்வுகளை அறிந்து கொள்ளும் முறையாகும்.

மண் – நீர் சுத்திகரிப்பினால் வெப்பம் – குளிர் இயல்பு நிலையால் உருவாகும் மழை நீரின் தன்மைகளை வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறதா என ஆராய்ந்து அறிவதாகும்.
அதாவது
* குடி நீராக பயன்படும் முறையில்,
* தாவரங்களின் வளர்ச்சி இயலுக்கு ஏற்புடைய தன்மையில்,
* விவசாயத்திற்கு ஏற்புடைய முறையில்,
* உயிரினங்களின் வாழ்வாதார அமைப்பியலுக்கு ஏற்புடைய தன்மையில்,
* உணவு தயாரிக்கும் முறையில்,
* மருந்து மற்றும் ஆய்வுகளுக்கு உரிய முறையில்,
நீர் ஆதார சேகரிப்பு முறைகளுக்கு …..
என ஏற்புடையதாக அமைந்திருக்கும் முறைகளுக்கு உரிய ஆய்வுகளுக்கும் ஒத்திருக்க வேண்டும்.

வழி
மண்ணால் உருவெடுத்த கோளிற்க்கு வெப்பமும் – நீரும் தேவையான அளவு இணைந்தால் உயிரியல் வாழ்வுக்கு உயர் வழியாகும்.

சுவாச இயல் காற்று:
சந்திரனில் மண் – நீர் சுத்திகரிப்பு முறைகளோடு வேதியியல் முறைகளின் தீர்வு நிறைவடைகிறது. இதில் வெப்பமும், காற்றும், மண்ணும், நீரும் சுத்திகரிப்பு முறையோடு இணைவதால் இயற்கை கட்டமைப்பு பணி இயற்கை சீரமைப்பு முறையில் கோள் ஈர்ப்பு விசை, மைய அச்சு சுழற்சி பணிகள் தொடர்பு கொள்கிறது. மேலும் இயற்பியல், வேதியியல் ஆய்வு முறைகளோடு உயிரியல் வாழ்வு தொடர்பு முறைகள் பங்களிப்பதை அறியலாம்.

இயற்பியல் முறையில் சுழற்சியும்,
வேதியியல் முறையில் ஆய்வியல் (சுத்திகரிப்பு) முறையும் சமச்சீராக்கப்படுகிறது.

சந்திரனில் இயற்கை கட்டமைப்பியல் சீரமைக்கப்படுகிற போது பூமியில் வாழ்வாதார இயற்கை கட்டமைப்பு போல் இங்கு உருவாகிவிடுகிறது. எனவே சந்திரனில் உயிரியல் வாழ்வாதார பணிகளை துவங்கலாம்.

நன்றி, வணக்கம்.
.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of