உலக விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று கூடுவோம் (சந்திரன்)

மனித வாழ்வு மகத்தானது.

மனித வாழ்வு மகத்துவம் பெற, மனிதர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

மனிதர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட விஞ்ஞானிகளின் ஆய்வுகளும், மிக உயர்ந்த கண்டுபிடிப்புகளும், சேவைகளும், தியாகங்களுமே அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விவசாய நிலங்களும், நீர் ஆதார பகுதிகளும், மலை பகுதிகளும் வெகுவாக பாதிக்கப்படுவதால் உணவு பற்றாக்குறையும், இருப்பிட பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால் மனித வாழ்வாதாரத்திற்கு தேவையான, அடிப்படையாக அமைந்திருக்கும் நிகழ்வுகள் அணைத்தும் பாதிக்கப்படுகிறது.

மேலும் தேவையற்ற பரிசோதனைகளும், சுத்திகரிப்பு இல்லாத கழிவுகளும் பாதகமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது.

இதனால் பூமியில், “இயற்கையில் சிறு, சிறு அழிவுகள் துவங்கி பேரழிவுகள் வரை தொடர்ந்து நடைபெறும் செயலாகவே” நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் மனிதர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட பூமிக்கு அருகில், பூமியின் துணைகோளாக விளங்கும் சந்திரனுக்கு செல்ல வேண்டிய அவசிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனவே சந்திரனில் மனித வாழ்வாதாரத்தை உருவாக்கிட உலக விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று கூடுவோம்.

“இயற்கை உருவாகும், இயற்கையை உருவாக்கும் முறைகளை எல்லாம் இயல்பாக சிந்தித்து செயல்பட” வாருங்கள், ஒருங்கினைவோம்.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒருங்கினைந்தால் உயர்வு நிச்சயம்” எனும் வாழ்வியல் தத்துவத்தை (விதிகள்) செயல்படுத்தி வாழ்வாதாரத்தை உருவாக்குவோம்.

வாழ்வாங்கு வாழ வழி சொல்வோம்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of