ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்

ஈர்ப்பு விசையை அறிவோம் தொடர்வோம்

அனைவருக்கும் வணக்கம்

பொருளின் பருமனை (எடை) பொருத்து தான் கோள் தமது ஈர்ப்பு விசையை வெளிப்படுத்துகிறது. இதுவே இயற்கை கட்டமைப்பில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு கோளுக்கும் அதனதன் இயல்பு அளவில் அமைந்திருக்கிறது.

மனித வாழ்வியலை பொறுத்தவரை மிக நீண்ட காலமாக பூமியிலேயே வாழ்ந்து பழகியதால் பிற கோள்களுக்கு செல்கிற போது பூமியில் உள்ள அனைத்து முறைகளையே அங்கும் எதிர் பார்க்கின்ற நிலை உள்ளது.

மேற்கூறிய இயற்கை கட்டமைப்பை நாம் புரிந்து கொண்டால் இப்பிரபஞ்சத்தில எங்கு வேண்டுமானாலும் காலடியை எடுத்து வைக்க இயலும்.

உதாரணமாக இயற்கை மண் அமைப்பில் அதாவது அம்மண்ணில் உள்ள ஈரமான அல்லது உலர்ந்த மண்ணில் கால் பதிக்கிற போது அம்மண்ணிற்கும் நமக்கும் உள்ள ஈர்ப்பு விசையை அறியலாம். அதாவது

  • ஈரமான களிமண்,
  • ஈரமான செம்மண்,
  • ஈரமான மணல்,
  • ஈரமான பாறை

போன்றவற்றில் கால் பதிக்கிற போது உள்ள வித்தியாசங்களை உணருவோமா ! அதுபோலவே

  • உலர்ந்த களிமண்,
  • உலர்ந்த செம்மண்,
  • உலர்ந்த மணல்,
  • உலர்ந்த பாறை

போன்றவற்றில் கால் பதிக்கிற போது உள்ள வித்தியாசங்களை உணருவோமா!

இந்நிகழ்வு பூமியில் நாம் அறிந்த, அனுபவித்த நிகழ்வுகள் என்பதை அறிவோம். மேலும் ஈர்ப்பு விசையின் வெளிப்பாடுகளை அனுபவ பூர்வமாக புரிந்து கொண்டால் இயற்கையின் இரகசியத்தை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

புரிந்து கொள்ளவோம் வாருங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of