சந்திரன் + பூமி = சுகமான மாற்றங்கள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் சந்திரன் + பூமியோடு இணைந்து தொடர்பு கொள்ளும் முறைகள் பூமியில் பல்வேறு சுகமான மாற்றங்களை தந்து கொண்டிருக்கிறது. நாம் இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விபரம் என்னவென்றால் சந்திரன் + பூமி இணைந்து தொடர்பு இயற்கை கட்டமைப்பு வாழ்வியல் முறைகளில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு எந்த தீங்கும் (தீய விளைவுகள்) நிகழ்ந்தது இல்லை என்பதை நாம் அறிய வேண்டும். இதனை நமது முன்னோர்கள் பிரபஞ்ச இரகசியத்தை அறிந்ததன் காரணத்தால் “சந்திரனை பூமியின் துணை கோள்” என்று கூறி இருக்கின்றனர்.

மேலும் அறிய வேண்டியது:
பூமியின் துணை கோளாக சந்திரனை நமது முன்னோர்கள் முன் கூட்டியே கூறியதாலோ என்னவோ நாம் மிக நீண்ட காலமாக பார்த்து கொண்டிருக்கும் கோள் சந்திரனாகவே இருக்கிறது. இதனால் தானோ என்னவோ நாம் முதலில் சேட்டிலைட் அனுப்பிய கோளும் சந்திரனாகவே இருந்தது. முதலில் விஞ்ஞானிகளை அனுப்பிய கோளும், தொடர்ச்சியாக விஞ்ஞானிகளை அனுப்பி கொண்டிருக்கும் கோளும் சந்திரனாகவே இருந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். பூமியில் ‘உயிரியல்’ வாழ்வாதார நிலை அறிந்து தான் சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிறது.

வாழ்வியல் சிறப்பு:
பூமியும், சந்திரனும் இணைந்து தொடர்பு கொள்ளும் இயற்கை கட்டமைப்பில் நிகழும் நிகழ்வுகள் அற்புதமானது. எவ்வாரெனில் ஒரு கோளில் வாழ்வாதாரம் துவங்குகிற நிலையில் (அறிவின் சிறப்பு தன்மை வெளிப்படாத நிலையில்) பகலில் வெளிச்சம் (சூரிய ஒளி) இருந்து இரவில் வெளிச்சத்தின் துணை இல்லாது இருந்தால் அந்த வாழ்க்கையில் உயிரினங்களின் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) வாழ்க்கை என்பது கேள்வி குறியாகிவிடும். அதாவது இருளில் சிறு துளி ஒளி இல்லை என்றால் உயிரியல் வாழ்வாதாரம் நிகழாது போகும் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். அறிய வேண்டியதை அறிந்தால் இயற்கை கட்டமைப்பில் உள்ள வாழ்வாதார கோட்பாடுகள் புரியவரும். அதாவது பிரபஞ்சத்தில் ஒளி தர கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கிறது என்பதை அறிவோம். இவை அனைத்தும் கோளுக்கு சிறு சிறு துளி வெளிச்சத்தை கொடுத்து கொண்டிருப்பது என்பது இரவில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் என்பது மறுக்க முடியாத விசயமாகும். அதேசமயம் மனித வாழ்வாதார (பூமியில் ஆதி மனித வாழ்வு) அமைப்புகள் உருவாக்கத்திற்கு போதிய அளவு உதவாது என்பதை நாம் அறிவோமா?. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பூமிக்கு சந்திரனின் ஒளி வரபிரசாதமாக அமைந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவோம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of