மண் நுண்ணுயிர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளில் வாழ நினைத்தாலும் அதற்கு அக்கோளின் மண் அமைப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். கோளின் மண் அமைப்பும், மண் அமைப்போடு இணைந்து இருக்கிற பஞ்ச பூத கலவைகளின் இயக்கங்களுமே உயிரியல் வாழ்வாதாரத்திற்கு காரண, காரனிகளாய் அமைந்திருக்கிறது.

சந்திரனில் மண்ணை நீர் வாயிலாக சுத்திகரிப்பு செய்தால் தான் அம்மண்ணானது வளமும், நலமும் பெற்றதாக அமையும். ஆகையால் சந்திரனில் மண் சுத்திகரிப்பு செய்தால் மண்ணின் உட்பரப்பில் உள்ள நுண்ணுயிர்களை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வர இயலும்.

மண் நுண்ணுயிர்கள்:
சந்திரனில் உயிரியல் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வாதாரத்தை உருவாக்கிட மண் நுண்ணுயிர்களை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வர வேண்டும்.

  • சந்திரனில் மண் நுண்ணுயிர்களை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வர முதலில் சந்திரனில் நீர் – மண் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
  • சந்திரனில் நீர் – மண் சுத்திகரிப்பால் காற்றில் ஈரப்பதம் உருவாகும்.
  • சந்திரனில் ஈரப்பதம் உள்ள காற்றினால் வெப்ப தாக்கம் குறையும். சந்திரனில் மின் காந்த அலைகளின் தாக்கம் குறையும்).
  • சந்திரனில் ஈரப்பதம் உருவாகி, வெப்ப தாக்கம் குறையுமே ஆனால் நீர் ஆவியாகுதல், மேகம், மழை, பனி போன்ற இயற்கை நிகழ்வுகள் உருவாகும். இந்நிகழ்வில் நீர் நுண்ணுயிர்கள் வெளிப்படுகிறது.
  • சந்திரனில் ஈரப்பதம் உடைய காற்று வெளிப்படுகிற போது காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் வெளிப்படுகிறது.
  • சந்திரனில் நீரின் இயற்கை பரினாம நிகழ்வுகள் மண்ணின் மேற்பரப்பில் நிகழ்கிற போது, பாதிக்கப்பட்ட மண்ணின் தன்மைகள் (தாது சத்துக்கள், ஒட்டும் பசை) சீரமைக்கப்படுகிறது.
  • சந்திரனில் மண்ணின் தன்மைகள் சீரமைக்கப்படுகிற போது தான் மண்ணின் உட்பரப்பில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு வெளிப்படுகிறது.
  • மண்ணின் மேற்பரப்பிற்கு நுண்ணுயிர்கள் வெளிப்படுகிற வேளையில் தான் சுவாச இயல் காற்று மண்ணின் மேற்பரப்பிற்கும் – உட்பரப்பிற்கும் தடையில்லா தொடர்புகள் உருவாகிறது. அதே வேளையில் காற்றுடன் வெப்பமும் – குளிர்ச்சியும் கலந்து மண்ணின் உட்புறத்திலும் – வெளிப்புறத்திலும் தொடர்பு கொள்கிறது.
    சுவாச இயல் காற்று சுழற்சி இயல் நடைபெறுகிற மண்ணில் தான் பஞ்ச பூத கலவையில் உள்ள நுண்ணுயிர்கள் வசிக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்,

நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of