நீர் நுண்ணுயிர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பூமிக்கு மாத்திரம் சொன்ன வாழ்வாதார கருத்து அல்ல. சந்திரனுக்கும் இதுவே வாழ்வாதார கருத்தாகும். ஏன் இந்த கருத்தானது பிரபஞ்ச வாழ்வியலுக்கே பொறுத்தமான கருத்தாகும்.

நீரானது காற்றோடும், வெப்பத்தோடும், மண்ணோடும் (மண்ணின் உட்பரப்பிலும் – மேற்பரப்பிலும்), ஆகாயத்தோடும் தொடர்பு கொள்கிற போது தான் இயற்கை கட்டமைப்பு சீராக இருக்கிறது என்பது அர்த்தமாகும். இந்த சீரான அமைப்பில் தான் நீர் நுண்ணுயிர்கள் பஞ்ச பூத கலவைகள் அணைத்திலும் வாழ்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.

சந்திரனில் மண்ணின் மேற்பரப்பில் தற்போது உள்ள சூழ்நிலையில் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு உரிய சாத்திய கூறுகள் எதுவும் இல்லை. ஏனெனில் சந்திரனை பொறுத்தவரை தற்போது உள்ள சூழ்நிலையில் தொடர்ச்சியாக நிகழும் கூடுதலான வெப்பத்தின் தாக்கமே (மின் காந்த அலைகள்) மேற்பரப்பில் உள்ள மண்ணின் மூலக்கூறுகளை பாதிப்படைய செய்கிறது. அது போலவே தொடர்ச்சியாக அங்கு நிலவும் கடும் குளிரும் மண்ணின் மூலக்கூறுகளை மேலும் பாதிப்படைய செய்கிறது. இதனால் சந்திரனை பொறுத்தவரை வெப்பத்திலும், வெப்பம் சார்ந்த மண்ணிலும் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு உரிய வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.

மேலும் அங்குள்ள நீரமைப்பும் தொடர்ந்து நிகழும் கடும் குளிரின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதால் நீரின் மூலக்கூறுகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் அங்கு நீரிலும் நுண்ணுயிர்கள் வாழ இயலாமல் போகிறது.

சந்திரனில் தொடர்ச்சியாக நிகழும் கூடுதலான வெப்பத்தால் எவ்வாறு நுண்ணுயிர்கள் வாழ இயலாதோ அதுபோலவே தொடர்ச்சியாக நிகழும் கூடுதலான குளிரிலும் நுண்ணுயிர்கள் வாழ இயலாது.
எனவே சந்திரனில் முதலில் வெப்பத்தாலும், குளிராலும் ஏற்படுகிற மண்ணின் பாதிப்பை சீரமைக்க வேண்டும். மேலும் சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சுழற்சி முறைகளை சீரமைக்க வேண்டும்.

சீரமைப்பு முறைகள்:
சந்திரனில் இயற்கை இயங்கும் விதங்கள் பூமியில் உள்ளது போல் வெப்பம், குளிர், காற்று, மண், பகல், இரவு, கோள் ஈர்ப்பு விசை, சுழற்சி இயக்கங்கள் …… போன்றவை உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய நிலையில் இல்லை என்பதை முதலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொள்ளுதலில் உள்ள முரன்பாடுகளே பல்வேறு செயல்கள் சீராக நடைபெற இயலாமல் போகிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of