அனைவருக்கும் வணக்கம்,
இயற்கையில் ஒளி வெள்ளம்
பூமியில் நிகழ இருக்கும் மாற்றங்கள் என்பது நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய வாழ்வியல் முறைகளைப் பற்றி இங்கு நாம் குறிப்பிடவில்லை. அதேசமயம் பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை பேரிடர்கள், புதிய புதிய நோய்கள், மழையால் உருவாகும் பேரழிவுகள், நீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை, இருப்பிட பற்றாக்குறை…… போன்ற காரணங்களினால் உருவாகும் வாழ்வாதார இழப்புகள் மனித சமுதாயத்தை காப்பாற்றிட, மனிதனை பூமியை கடந்து சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிற சூழ்நிலை உருவாகும் என்பதை அறிவோமா!
சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாகும் சூழலில் பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி இங்கு நாம் குறிப்பிடுகிறோம். சூரிய குடும்பம் எனும் ஒரு மாபெரும் இயற்கை கட்டமைப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய உயிரியல் சமுதாய அமைப்பானது மற்றும் இயற்கை கட்டமைப்பு முறையில் இயங்கும் இயற்கை முறைகள் ஆனது தற்போது சந்திரனின் சுழற்சியால் முழு மாற்றங்களை பெற வேண்டியிருக்கிறது. அதாவது இயற்கை கட்டமைப்பு முறைகள் இயங்குகிற விதங்களை நாம் கூர்ந்து கவனித்தால் இதற்குரிய தீர்வுகள் நன்கு புலப்படும். பஞ்ச பூதங்களால் இணைந்து அமைந்தது பூமி என்பதை நாம் நன்கு அறிவோம் அதேவேளையில் பஞ்ச பூதங்களில் அமைந்துள்ள வெப்பத்தின் வாயிலாகவே வெளிச்சம், இயற்கை வழி காட்டுதல் என்பது உயிரியல் அமைப்புகள் தொடர்ந்து வாழ்ந்திடவும், பரிணாம வளர்ச்சியை பாதுகாப்பாக அமைந்திட, அமைத்திட இயற்கையில் நிகழும் ஒளி வெள்ளமே மூல முழு முதற் காரணமாக அமைகிறது என்பதை இயற்கை கட்டமைப்பின் கூட்டமைப்பு (கோள் கட்டமைப்பு) இயக்கங்களை அறிந்தால் மாத்திரமே புரிந்து கொள்ள இயலும்.
கோள் கூட்டமைப்பு:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பல கோடிக்கணக்கான கோள்கள் கோள் வடிவில் பிரபஞ்ச கட்டமைப்பு அமைந்திருக்கிறது. கோள் கூட்டமைப்பு என்பது இல்லாது போனால் பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வு என்பது இல்லாது போகும். ஏனென்றால் பஞ்சபூத அமைப்பில் கூட்டமைப்பு கோள் வடிவமாக அமைந்திருக்கிறது. பஞ்ச பூத அமைப்புகளால் அமைந்திருக்கும் ஒரு கோளில் மண் கூட்டமைப்பும், நீரோடு இணைந்த கூட்டமைப்பும், மண், நீர், வெப்பம் என அம்மூன்று கூட்டமைப்பும், அவற்றின் கலவை இயக்கங்களுக்கு காற்றின் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பும், அவை மிக நீண்ட காலம் கோள வடிவில் அமைந்து இருப்பதற்கு காற்றால் இணைந்து இயங்கும் இயற்கை கட்டமைப்பில் கூட்டமைப்பும், இவை எல்லாமும் தொடர்ந்து இயங்குகிற இயக்க நிலையில் இருப்பதற்கு வெப்ப – இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள் அமைப்பிற்கும், பஞ்ச பூதத்தில் உள்ள ஐவகை இணைப்பு முறைகளாகவும், இணைந்து இயங்கும் இயக்க முறைமைகளாகவும் அமைந்திருக்கிறது. நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் தாம் இயங்கும் கால அளவு மட்டும் தொடர்ச்சியாக நிகழ்கால மற்றும் இயற்கை கட்டமைப்பாக அமைந்திருக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
கால அளவுகள்:
நமது வாழ்வியல் அமைப்பில் காலம் என்பது மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். அவை இயற்கையில் தாவரங்களாக இருந்தாலும், உயிரினங்களாக இருந்தாலும், மனிதர்களாக இருந்தாலும், கால அளவு அமைப்பு என்பது அவசியமாக இருக்கிறது என்பதை காலம் காலமாக அறிந்து வருகிறோம்.
பிரபஞ்சத்தின் கால அளவை அறிந்து கொள்வதற்கு பிரபஞ்சத்தைப் பற்றி நாம் நன்கு அறிய வேண்டியிருக்கிறது. பிரபஞ்சம் என்பது ஜட இயற்கை அமைப்பிலும், ஜட மற்ற இயற்கை அமைப்பிலும் அமைந்திருக்கிறது. என்பதை நாம் அறிவோம். இயற்கை அமைப்பில் அமைந்திருக்கும் வாழ்வாதார நிகழ்வுகளுக்கு நாம் பெரும்பாலும் கால அளவுகளை அனுபவ ரீதியாகவும் விஞ்ஞான இயல் ரீதியாகவும் அறிந்திருக்கிறோம். ஆனால் ஜட அமைப்பில் அமைந்திருக்கும் நிகழ்வுகளுக்கு நாம் இதுவரை கால அளவுகளை அறிவதற்கு அறிவியல் ரீதியாக முற்படுகிறோம் என்பதுவே நிதர்சனமானது. கால அளவுகள் என்பது சுழற்சி இயக்கம், தட்ப – வெட்ப இயக்கம் போன்ற அமைப்புகளால் அறிந்து கொள்ளக் கூடியதாகும். வெப்பத்தின் வாயிலாக கால அளவுகளை நாம் அறிந்து கொள்ளக்கூடிய முறைகள் ஆனது வெளிச்சத்தின் அடிப்படையில் பகல் – இரவு முறைகளில் அமைத்திருக்கிறோம். அதாவது சூரிய ஒளியின் தன்மையை கொண்டு பகல் – இரவு எனும் கால சூழ்நிலைகளை, வைத்து கால அளவுகளை உருவாக்கியிருக்கிறோம். அதுபோலவே சந்திர ஒளியின் தன்மையை கொண்டு கால அளவுகளை நாம் உருவாக்கியிருக்கிறறோம். இதில் பெரும்பாலும் நமது விஞ்ஞான மற்றும் அனுபவ வாழ்வியல் அடிப்படைகளை மையமாக கொண்டு இருக்கிறது என்பதை அறிவோம். சமீபகாலங்களாக சந்திரனின் உருவத் தோற்றம், அதனால் பூமியில் நிகழும் குளிர்ச்சியின் சிறப்பம்சம் போன்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தால் புரியவரும் என்பதை நாம் சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். சந்திரனின் வெளி தோற்ற அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை நமது புற கண்களுக்கு வெளிப்படும் நிலையில் அமைந்து இருக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம்.
சந்திரனில் மனித வாழ்வாதாரம்:
சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்படுகின்ற அதே வேளையில், சந்திரனின் சுழற்சி இயக்கத்தில் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும், அல்லது உருவாக வேண்டும் என்பதை பொறுத்துதான் சந்திரனில் மனித வாழ்வாதாரம் நிகழும் என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் சந்திரனில் பூமியைப்போல இயற்கை கட்டமைப்பு நிகழ்ந்தால் மாத்திரமே அதாவது வெப்பம், காற்று, நீர் இம்மூன்றும் பஞ்சபூத இயக்கங்களோடு இணைந்து இயங்கும் இயக்க அமைப்பாக நிகழ்கிற பொழுதுதான் சந்திரனில் மனித வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும் என்பதை அறியவேண்டும். எனவே சந்திரனின் இயக்கம் என்பது பூமியின் இயக்கத்திற்கு நிகராக நிகழ வேண்டும் என்பது அவசியமாகிறது. அப்பொழுது பூமியில் நிகழும் தட்ப – வெப்ப நிகழ்வானது தற்பொழுது அமைந்திருக்கக் கூடிய வளர்பிறை, தேய்பிறை எனும் இயற்கை இயக்க அமைப்புகளை கடந்து பூமியின் மேற்பரப்பில் இயற்கையின் ஒளி வெள்ளம் என்பது குளிர்ச்சி மாயமானதாக மாறி அமையும் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு அமைந்தால் பூமியின் வாழ்வாதாரம் மென்மேலும் சிறக்கும் என்பது இயற்கை கட்டமைப்பால் நிகழும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
எனவே மனித ‘வாழ்வாதார சீரமைப்பு’ என்பது பூமியில் துவங்கி சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகின்ற காலகட்டங்கள் தொடர்கிற வரை சீரமைத்தல் என்பது சிறப்பாக அமைந்திட வேண்டும் அப்பொழுதுதான் சந்திரனின் சுழற்சி இயக்கம் அதாவது பூமியின் இயக்கத்திற்கு நிகராக இயக்குகிற அமைப்பை நாம் உருவாக்குவது அல்லது இயற்கை கட்டமைப்பில் நிகழ்கிற பொழுது இவை எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும் என்பதை நமது கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே சந்திரனின் சுழற்சி இயக்க முறைகள் பூமியின் இயற்கை கட்டமைப்பில் ஒளிவெள்ளமாக திகழும் நிகழ்வுகள் நிகழும்.
எனவே பூமியில் தற்போது அமைந்திருக்கின்ற கூடுதல் வெப்பத்தால் ஏற்படுகின்ற மாசுகள், வெப்பத்தால் ஏற்படுகின்ற நீர் பற்றாக்குறை, மழை நீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு நிகழ்வுகள் மாறி அமைந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பூமியில் சூரிய வெப்பத்தின் இறுக்கத்தில் வாழ்கிற உயிரியல் அமைப்புகள் ஒளி வெள்ள குறைவு தன்மையால் சிதைந்து போகும் என்பதும், பஞ்ச பூத அமைப்பில் அமைந்திருக்கும் பஞ்சபூத இணைப்புகளும், அதாவது இணைந்திருக்கும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது இருள் வெப்பத்தில் இருக்கின்ற இறுக்கங்கள் சந்திரனின் இயக்க மாற்றங்களால் – குளிர் ஒளி அமைப்புகளால் பிரகாசிக்க படுகின்ற பொழுது வெப்பத்தில் இருக்கக்கூடிய இறுக்கம் என்பது குறைந்து போகிறது. அதே வேளையில் வெப்ப தாக்கம் குறைந்து குளிர்சி நிலை என்பது அதாவது குளிர்ச்சியின் கால அமைப்புகள் என்பது பூமியின் இயற்கை கட்டமைப்புக்கு ஏற்ப அமையும் என்பதையும் அறிய வேண்டும்.
எனவே சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாகிற போது பூமியில் இயற்கை கட்டமைப்பின் இயற்கை இயல்பு மாற்றத்தினால் வாழ்வு வளம் பெறும். அனைத்தும் நலம் பெறும் என்பதை அறியலாம்.
நன்றி, வணக்கம்.
நாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வாதாரம் தொடர்ந்து வாழ வேண்டியதிருக்கிறதால், இயற்கையில் இவ்வாறான மாற்றம் அவசியமாகிறது.
The English Article link can be found here,
https://ourmoonlife.com/flood-of-light-in-nature/