கோளின் சுழற்சி முரண்பாடு

அணைவருக்கும், வணக்கம்.

“கோளின் சுழற்சி முரண்பாடு”

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு “கோளும் உயிரியல் வாழ்வாதாரத்திற்காகவே இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது” என்பதை அறிவோமா! நான் குறிப்பிடுகிற இந்த கருத்து உண்மையா? பொய்யா? எனும் கேள்வி நமக்குள் உருவாகிறதா!

அதற்குரிய பதிலை பார்ப்போம்.

நாம் ஏன் பிற கோள்களை அறிய முற்படுகிறோம்?

அங்கு செல்வதற்குரிய அறிவின் தொடர்பும், அதற்குரிய ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை மிக நீண்ட காலமாக ஆய்வுகளின் தொடர்ச்சியாக பயன்படுத்துகிறோம். அங்கு வாழ ஏன் ஆசைப்படுகிறோம் எனும் விசயத்திற்குள் பதில் மறைமுகமாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம். அதற்கு முன்பு நாம் இந்த பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது துள்ளியமாக தெரியாது. இருப்பினும் மனிதர்கள் வாழும் வாழ்க்கை முறைகளின் தொடர்ச்சியை தொடர்ந்து பார்ப்போம்.

மனித வாழ்க்கையின் துவக்கத்தில் வெளிச்சத்தில் (பகலில்) இருந்த நமக்கு இருளை (இரவில்) கண்டதும் செய்வது அறியாது தவித்திருப்போம். இது நமக்கு அந்த சூழ்நிலையில் இது முரண்பாடாக தோன்றியிருக்கும். இதுவே முதல் முரண்பாடு எனலாம்.

ஆனால் நடந்தது என்ன? இந்நிகழ்வு இயற்கையின் சுழற்சி முறையாகும். அதாவது இரவு – பகல் எனும் இயற்கை சுழற்சி முறையாகும். இந்நிகழ்வு கோளின் (பூமி) சுழற்சி முறையாகும். அதற்கு அடுத்த சமயத்தில் தரையில் பார்த்ததால் இருள், தம்மை சுற்றி பார்த்தால் இருள், தமக்கு மேலே (ஆகாயம்) பார்த்தால் இருள் என எங்கு பார்த்தாலும் இருளாக இருந்தது. அப்போது மனிதர்களுக்கு தோன்றியது என்ன?

இந்த உலகமே (பிரபஞ்சம்) இருளாகிவிட்டது! உலக இயக்கமே முரண்பாடான நிலைக்குள் வந்து விட்டதாக நினைத்து இருக்கலாம். ஆனால் நிகழ்ந்தது ஆகாயத்தில் சந்திரனும், நட்சத்திரங்களும் தெளிவாக தெரியாத காலத்தில் நிகழ்ந்த நிகழ்வாகும்.

அதற்கு அடுத்து சந்திரன் ஆகாயத்தில் மிக தெளிவாக தெரிந்த காலத்தில் இனி இருளே நம்மை (ஆகாயத்தில் ) சுற்றிலும் இல்லை என நிணைத்து இருக்கலாம். இதுவே கோளின் (பூமி) சுழற்சி முரண்பாடா, கோளுக்குள் சுழற்சி முரண்பாடா என நிணைத்த விசயங்களுல் ஒன்றாகவே இருந்திருப்பது போல நோய், மரனம்……. போன்ற விசயங்களும் காரணமாக அமைந்திருக்கலாம்.

ஆனால் அனுபவங்களின் தெளிவு, அறிவியல் வளர்ச்சியாக, விஞ்ஞான ஆய்வுகளாக மாறுகிற வேளையில் முரண்பாடுகளை (புயல், வெப்பம், குளிர், பனி, மழை, நில நடுக்கம் ……) தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது என்றால் இதற்கு இயற்கை சூழ்நிலை தான் காரணம் என நிணைக்கலாமா! அல்லது இந்நிகழ்வுகள் கோளின் (பூமி) சுழற்சி முரண்பாடுகள் எனும் நிலையில் அறிந்து கொள்ளலாமா?

எது எப்படி ஆயினும் கேள்வியில் நிறைவான தெளிவை பெற வேண்டும்.

ஏன் என்றால் பூமியில் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களின் வாழ்வியல் (உயிரியல்) இயற்கையுடன் இணைந்த பரிணாம வளர்ச்சியின் தொடர்பு பரிமாற்றங்களின் விளைவுகளை அறிவோம். இந்த நிலை சந்திரன் போன்ற பிற கோள்களுக்கு எவ்வாறு பொறுந்தும் என்பதை அறிய வேண்டும்.

நாம் ஏன் பிற கோள்களை அறிய வேண்டியிருந்தது, பிற கோள்களுக்கு செல்ல வேண்டிய முயற்சிகள் ஏன் நடைபெறுகிறது என்பதை அறிந்தால் மேற்கூறிய வினாவிற்கான விடை புரியவரும்.

அதாவது பூமியின் சுழற்சி முரண்பாடுகள் இதற்கு காரணமாக அமையுமா? எனும் கேள்விக்கும் விடை அறிந்தால் புரியவரும்.

எனவே கோளின் சுழற்சி முரண்பாடுகள் என்ன என்பதையும் இயல்பு நிலை என்ன என்பதையும் அறிய வேண்டும். நாம் அறிந்த வரை பூமியில் தான் சுழற்சி நிலை, இயக்க நிலை, வாழ்வியல் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பு அமைந்துள்ளது என்பதை அறிவோம்.

எனவே கோளின் சுழற்சி முரண்பாடுகள் பற்றி அறிவோம், அறிந்து கொள்வோம்.

நன்றி, வணக்கம்.