பூமியெங்கும் வசந்த காலம்

அனைவருக்கும் வணக்கம்,

பூமியில் மனிதர்களது துவக்க காலத்தில் அணைத்து விதமான இயற்கை வளங்களும் நிறைந்து இருந்தது. ஆனால் மனிதர்கள் அந்த இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்திடும் முறைகளை முறையாக அறியாது இருந்தனர். ஆனால் காலப்போக்கில் மனித அறிவின் விசால தன்மையால் இயற்கை வளங்களை பயன்படுத்தி கொள்ளக்கூடிய தேவைகளும், சூழ்நிலைகளும் உருவானது.

மனித பெருக்கத்தின் காரணத்தாலும், இயற்கை வளங்கள் பற்றாக்குறையாலும் மனித தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது சிக்கலான விசயமாகிறது.

மனித வாழ்வாதார தேவைகள் பற்றாக்குறையாலும், விஞ்ஞான வளர்ச்சியின் மேம்பாட்டாலும் சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக இருக்கிறது. சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாகிற காலகட்டத்தில் சந்திரனின் சுழற்சி இயக்கத்தின் மாற்றத்தினால் பூமியில் பல்வேறு நலமான சூழ்நிலைகள் உருவாகிறது. அதில் தேவையான அளவு மழை, தேவையான அளவு வெப்பம் – குளிர்ச்சி, இயற்கையில் பசுமை, தேவையான அளவு நீர் ஆதாரம், தென்றலின் தொடர்ச்சி, உணவு தானியத்தில் நிறைவு ……. போன்ற பல்வேறு சுகமான, சுகாதார மாற்றங்கள் உருவாகிறது.

சுத்திகரிப்பு முறைகளை பொருத்த வரை கழிவுகள், மாசுக்கள் போன்றவை இயற்கை வள மேலாண்மையின் தன்மையால் உருவாவது குறையும் என்பதும், குறைந்த அளவில் உருவாகும் நிகழ்வுகளும் இயற்கையின் இயக்க தன்மையில் சுத்திகரிப்பு முறையாக நிகழும் என்பதையும் அறியலாம்.

பூமியில் இது வரை நாம் கேள்விப்பட்ட பல்வேறு நலம் தரும் நிகழ்வுகள் நடக்க இருக்கிறது.

பூமியில் பகலில் வெப்பமும் – குளிர்ச்சியும் தேவையான நிறைவுகளை தருவது போல் இரவில் வெளிச்சமும் – குளிர்ச்சியையும் தினசரி 10 மணி நேரம் கிடைக்க இருக்கிறது. அதுபோல் மாலை நேர முடிவில் துவங்கும் இரவும், அதிகாலைக்கு முன்பு உள்ள இரவும் (பூமி முழுவதும் இரவு) பூமியின் சிறப்பம்சம்த்தை மேலும் புதுமைகளை உருவாக்கி தர இருக்கிறது.

சந்திரனின் சுழற்சி சீரமைப்பால் வெள்ளியில் ஏற்படுகிற உருவ மாற்றத்தால் பூமியில் ஒளியின் தன்மை மேலும் பிராகாசத்தை பிரமாண்டமான, நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியும் தரக்கூடிய நிகழ்வாக அமையும் என்பதை அறியலாம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of