பிரபஞ்சம்

அனைவருக்கும் நன்றி,

பிரபஞ்ச சுழற்சி இயல்

பிரபஞ்சத்தின் சுழற்சி இயல் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசையோடு இணைந்திருக்கிறது.

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசை பிரபஞ்ச கோள் குடும்பங்களோடு இணைந்திருக்கிறது.

பிரபஞ்சத்தில் அமைந்துள்ள பஞ்ச பூத கலவை இயக்க சக்திகளின் உள் – வெளி தொடர்புகளின் சக்தியே பிரபஞ்ச குடும்ப ஈர்ப்பு விசை சக்திக்கு காரணமாக அமைகிறது.

பிரபஞ்ச குடும்ப ஈர்ப்பு விசையே பிரபஞ்ச மைய அச்சு சுழற்சி இயலுக்கு ஆதாரமாக அமைகிறது.

பிரபஞ்ச மைய அச்சு சுழற்சியே பிரபஞ்ச சுழற்சி இயலுக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் முழுவதும் இயற்கை கட்டமைப்புகளால் ஆனது. இயற்கை கட்டமைப்புகள் தனித்தனியான அமைப்புகளாகவும், ஒன்றோடு ஒன்று இனைந்த அமைப்புகளாகவும், ஒன்றில் ஒன்று கலந்து வெளிப்படும் புதுமையான அமைப்புகளாகவும் அமைந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாது ஒன்றின் வெளிப்பாடுகள் நிறத்திலும், உருவத்திலும், செயல் தன்மையிலும் பலவாறு மாறுபட்டு அமைந்திருக்கிறது.
பிரபஞ்சம் சுழற்சி தன்மையிலும், பிரபஞ்சம் இயக்க தன்மையிலும், பிரபஞ்சம் ஈர்ப்பு விசை தன்மையிலும் இயங்கும் விதமாக அமைந்திருக்கிறது.

பிரபஞ்சம் – ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண் என ஐவகை மூல அமைப்புகளால் அமைந்திருக்கிறது.

இதில்,

  • ஆகாயம் – வெப்பத்தையும், காற்றையும், நீரையும், மண்ணையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • வெப்பம் – வெப்பமானது ஆகாயத்திற்குள் அடங்கியும், தாம் இருக்கிற இடத்தில் ஒரு புறம் வெளிச்சத்தையும், அதன் எதிர் புறம் இருளையும், அதன் சுற்றுப்புறம் எல்லாவற்றிலும் வெப்பத்தையும் தருகிறது. வெப்பம் காற்றோடு இணைந்து நீரை ஆவியாக்குதலும், ஆவியாக்கிய நீரை மழையாகவும், பனி நீராக மாற்றி அமைத்தலுமாகவும் இயங்குகிறது.
  • வெப்பம் காற்றோடு இணைந்து காற்றை வெப்ப காற்றாக மாற்றி அமைக்கிறது.
  • வெப்பம் நீரோடு இணைந்து காற்றை குளிர் காற்றாக மாற்றி அமைக்கிறது.
  • வெப்பம் காற்றோடு இணைந்து மண்ணை வெப்ப மயமாக்குகிறது. மேலும் மண்ணை எரிமலை குழம்பாக மாற்றி அமைக்கிறது.
  • வெப்பம் காற்றோடும், நீரோடும் இணைந்து குளிர்விக்கிறது.
  • வெப்பம் காற்றோடும், நீரோடும் இணைந்து மண்ணை உஷ்ண மயமாக்குகிறது.
  • வெப்பம் காற்றோடும், நீரோடும், மண்ணோடும் இணைந்து பிரபஞ்சம் முழுவதும் நுண்ணுயிர்களை வாழ வைக்கிறது.

நன்றி, வணக்கம்.

 

மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்…

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of