பஞ்ச பூத தொடர்புகள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பூமியில் நிகழும் நிகழ்வுகளில் புதுமையாக கண்டதும், ஆச்சரியமாக பார்த்ததும் என்றால் அது தான் பஞ்ச பூதங்களின் செயலாக இருந்தது என்பதை அறிவோமா!
ஆம்,
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அறிந்து கொள்ள நினைப்பதும், அறிந்து கொள்ள இயலாததுமாக இருப்பது என்றால் அது தான் பஞ்ச பூதங்களின் செயலாக இருப்பது என்பதை அறிவோமா!

பஞ்ச பூதங்களே (ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண்) பிரபஞ்சமாய் அமைந்திருக்கிறது என்பதை அறிவோமா!

பஞ்ச பூதங்களே பிரபஞ்சமாய், பஞ்ச பூதங்களுக்குள்ளேயே சுழற்சி மயமாய், பஞ்ச பூதங்களுக்குள்ளேயே இயக்கமாய் அமைந்திருப்பதை அறிவோமா!

பஞ்ச பூதங்களின் துவக்கம் எது எனவும், அதன் முடிவு எது எனவும் அறிய முடியாத நிகழ்வுகளாக இருக்கிறது என்பதை அறிவோமா!

பஞ்ச பூதங்களின் உருவாக்கம் எவ்வாறு என்பதை அறிவதில் அன்று துவங்கி இன்று வரை தீர்வு காண இயலாது இருக்கிறது என்பதை அறிவோமா!

பஞ்ச பூதங்கள் தனித்து இயங்குதலும், இணைந்து இயங்குதலும் தொடர்ந்து நடைபெறும் காரண, காரியங்கள் எது என இதுவரை அறிந்திருக்கிறோமா!

பஞ்ச பூதங்களின் அளவுகளில்:
ஆகாயத்தின் விரிவளவு,
ஒளியின் பிரகாச அளவு,
இருளின் அடர்த்தி அளவு,
காற்றின் நகர்தல் அளவு,
நீரின் இயற்கையான கொதிநிலை & குளிர் நிலையின் உச்சகட்ட அளவு,
மண் இறுகுதலுக்கும் – உடைதலுக்கும் உரிய காரண, காரியம் அறிவோமா!

பஞ்ச பூதங்கள் இருவகை என்பதை நாம் அறிவோமா!
1. ஜட உயிராய் அமைந்திருக்கிறது.
2. ஜடமற்ற உயிராய் அமைந்திருக்கிறது.

ஜட உயிர்:
ஜடமாய் அமைந்திருக்கும் பஞ்ச பூதங்கள் ஐந்தும் உயிரியல் (பிரபஞ்ச நுண்ணுயிர்கள்) வாழ்வாதார அமைப்புகளோடு இணைந்து வாழ்வதால் ஜட உயிர் (பஞ்ச பூதங்கள் + பிரபஞ்ச நுண்ணுயிர்கள்) என்றழைக்கப்படுகிறது.

ஜடமற்ற உயிர்:
ஜடமாய் அமைந்திருக்கும் பஞ்ச பூதங்கள் ஐந்தோடு உயிரியல் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) அமைப்புகள் இணைந்து வாழ்வதால் ஜடமற்ற உயிர் (பஞ்ச பூதங்கள் + தாவரங்கள் + உயிரினங்கள் + மனிதர்கள்) என்றழைக்கப்படுகிறது.

ஜடமும் – உயிரியலும் இணைந்து இயங்கும் சக்தியே பிரபஞ்ச இயக்கம் என்பதை அறிவோமா!

பஞ்ச பூதங்களின் தொடர்புகளை அறிய ஆரம்பித்த பிறகு தான் மனித வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவானது என்பதை அறிவோமா!

மனித வாழ்க்கையில் பஞ்ச பூதங்களின் தொடர்புகளும், மனித வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் அறியலாம்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை அனுபவம் மற்றும் ஆய்வியல் தொடர்பு வாயிலாகவே மனிதனால் அறிந்து கொள்ள முடிந்தது. எவ்வாறெனில் பஞ்ச பூதங்களில் உள்ள தொடர்புகளை மனிதர்கள் தெரிந்து கொள்கிற போது,
பார்க்கிற போது,
உணர்ந்து கொள்கிற போது,
அனுபவிக்கிற போது,
நுகர்தல் வாயிலாக அறிகிறபோது
……… என ஒவ்வொன்றாகவும், ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும் இருப்பதை அறிவோம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of