நேரடி ஆய்வு தொடர்பு

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் தன் நிலை பற்றி அறிய முழுவதும் வாய்ப்பு இருக்கிறது.

தனது வாழ்நாளில் தனக்கு தேவையான மிக உயர்ந்த அறிவை கற்றலுக்கு உரிய வாய்ப்புகள் அனைத்தும் தன்னிடம் இருக்கிறது என்பதை அறிவது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை என்பதை அறிவது அவசியம் என்பதை அறிவோமா!.

ஒரு மனிதன் தனது/சமுதாய வளர்ச்சியலுக்காக மேற்கொள்ளப்படுகிற ஆய்வியலை பிற மனிதர்களோடு/ஆய்வாளர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். சேர்ந்தும் கூட ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அதேசமயம் அந்த ஆய்வினை நேரடி தொடர்பாக நடத்துவது என்பது எப்பொழுதுமே நலம் தரும் நிகழ்வாக அமையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆய்வுகளின் விளைவுகள்/முடிவுகள் என்பது தன்னோடு அல்லது தனது குழுவினரோடு முடிந்து விடுவதில்லை. அந்த ஆய்வின் தொடர் நிகழ்வுகள் நிகழ்கால மற்றும் வருங்கால மனித மற்றும் உயிரியல் தொடர்பாக அமைவதால் ஆய்வாளர் தமது ஆய்வினை தமது நேரடி தொடர்பில் இருப்பது அவசியமாகிறது. அதுபோலவே பிறருடைய ஆய்வுகளை தாம் சரிபார்க்க வேண்டியிருந்தாலும் தமது நேரடி பார்வையில் சரிபார்த்தல் அல்லது கலந்து கொள்ளுதல் சரியான முறையாகும்.

நேரடி தொடர்பில் ஈடுபடுகிற ஆய்வாளர்கள் தமது ஆய்வு குறிப்புகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை போலவே ஆய்வியல் சுத்திகரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் தருதல் அவசியம் ஆகும். மேலும் சுத்திகரிப்பு முறைகளில் உருவாகிற கழிவுகளை சீரமைத்தல் என்பது மிக மிக முக்கியமானது என்பதை உணர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

கருத்தாய்வியல் அல்லது பொருள் ஆய்வியல் என எதுவாக இருந்தாலும் சீரமைப்பை தெளிவுபடுத்திய பிறகே ஆய்வியலை வெளியிடுவது அனைவரும், அனைத்திற்கும் நலம் தரும் என்பதை உணர்ந்து செயல்படுவது சாலச்சிறந்தது.

உயிரியல் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய ஆய்வுகள் அனைத்துமே ஒரு முறைக்கு பலமுறை நேரடியாக/கலந்து ஆராய்ந்து அறிந்து வெளியிடுவது அல்லது பயன்படுத்துவது என்பது மிக மிக அவசியமானது என்பதை முழுமையாக உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

உயிரியல் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய ஆய்வுகள் உணவு பொருட்களாக இருந்தாலும், மருந்து பொருட்களாக இருந்தாலும் தமது மனித சமுதாயம் நேரடியாக பயன்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். இவற்றில் நாடு, மதம், அரசியல் ….. போன்ற எந்த காரண, காரியங்களுக்காகவும் சீரமைத்தல்/சரிபார்த்தல் இல்லாமல் ஆய்வுகளை அல்லது கண்டுபிடிப்புகளை வெளியிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் நிகழ்கால, வருங்கால மனித மற்றும் உயிரியல் சமுதாயம் பெருமளவில் பாதிப்படையும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆய்வில்/அறிவியல் என்பது அகில உலக மனித சமுதாயத்திற்கு பொதுவானது என்பதை உலக சட்டமாக்க வேண்டும். ஒவ்வொரு ஆய்வாளரும் இந்த சட்டத்தை புரிந்து கொண்டு தமது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of