நிறைவின்மை ஆய்வு தொடர்பு

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் முழுவதும் மனிதர்களின் வாழ்வாதாரத்திற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவோமா!

பூமியில் மனிதர்களின் வாழ்வாதாரம் துவக்க காலத்தில்
உணவும், நீரும் இருந்தால் போதும் என நினைத்தார்கள்.
பிறகு
பாதுகாப்பான இருப்பிடம் இருந்தால் போதும் என நினைத்தார்கள்.
பிறகு
இரவில் வாழ்வதற்கு வெளிச்சம் தேடினார்கள்.
பிறகு
உணவை சேமிக்க பாதுகாப்பான இடம் தேடினார்கள்.
பிறகு
உயிரினங்களோடு இணைந்து வாழ முயற்சி செய்தார்கள்.
பிறகு
தம்மோடு இணைந்து வாழும் உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இடம் தேடினார்கள். ……
இப்படியே தொடரும் வாழ்வில் மேலும் மேலும் விரிவாக வாழ்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டனர். அம்முயற்சியே ஆய்வியல் என்றழைக்கப்படுகிறது.

ஆய்வுகள்:
ஆய்வுகள் பல விதமான முறைகளில் துவங்கியது.
அவை
* தனி ஒரு மனிதனின் சிந்தனையில் வெளிப்பட்டது.
* தனி மனிதனின் சிந்தனை பிற மனிதர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டது.
* சிந்தனையின் செயல் வடிவங்கள் இயற்கையில் அமைப்பு முறையில் அமைந்தது.
* இயற்கையின் செயல் வடிவங்கள் செயற்கை வடிவமைப்பு முறையில் உருவாக துவங்கியது.
இவ்வாறு ஆய்வுகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மனித பெருக்கத்திற்கு ஏற்ப ஆய்வுகளில் பற்பல முன்னேற்றங்கள் உருவாகி கொண்டே வருகிறது. இதில் போட்டியும், பொறாமையும் கலந்து ஆய்வுகளின் தரத்தை சீர் குழைக்க ஆரம்பித்தது.

தரம் குறைந்த ஆய்வுகளினால் உருவான பொருட்களின் விளைவுகள் மனிதர்களின் வாழ்வாதாரத்தை சீர் குழைக்க செய்தது.
அழிவுகளை உண்டு பன்னும் ஆய்வுகளால் மனித சமுதாயம் அழிவிற்கு காரணமாக அமைகிறது.
மனித சமுதாயம் மாத்திரம் அல்லாது உயிரினங்களும், தாவரங்களும் அழிந்து போவதற்கு காரணமாக அமைகிறது.
மேலும் இயற்கை கட்டமைப்புகளில் உருவாகும் சூழ்நிலை அமைப்புகள் இயற்கையில் பேரிடர் நிகழ்வுகள் உருவாக்கிட காரணமாக அமைகிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of