இயற்கை மாற்றங்களில் தொடர்பு

விசாலம்
இயற்கை மாற்றங்கள் மனித அறிவை மேலும் மேலும் விசாலமாக்குகிறது. அதில் மனித சமுதாயத்திற்கு மேலும் மேலும் வாழ்வியல் அனுபவம் எனும் விலாசத்தை தேடுகிறது.

அனைவருக்கும் வணக்கம்,

மனிதர்களது துவக்க காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையும் அதில் மனிதர்கள் அனுபவித்த அனுபவங்களும், அறிந்து கொண்ட விபரங்களுமே இன்றைய நவீன உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது.

மனிதர்களது துவக்க கால அவசிய தேவையாக துவக்க நிலையில் இருந்தது உணவும், நீருமே ஆகும். இயற்கை மாற்றங்களினால் உருவான நிகழ்வுகளே உணவையும், நீரையும் கடந்து பாதுகாப்பான இருப்பிடம் தேட வேண்டிய சூழ்நிலைகள் உருவானது.

இயற்கை மாற்றங்கள்:
* உணவிலிருந்து (உணவு- மருந்து – விஷம் – கலப்பினம் அறியாத நிலையில்) பாதுகாப்பு
* பகல் – இரவு முதல் காரணம்
* மழை – பனி இரண்டாம் காரணம்
* உயிரினங்களிடம் இருந்து பாதுகாப்பு
* நோயிலிருந்து பாதுகாப்பு
* உணவிற்கு இருப்பிட பாதுகாப்பு
* உயிரினங்களுக்கு இருப்பிட பாதுகாப்பு
* வாழ்வாதார பொருட்களுக்கு பாதுகாப்பு
* புயல் காற்றில், பெரிய வெள்ளப்பெருக்கில் இருந்து ……… என பாதுகாப்பு என்பது இயற்கை மற்றும் செயற்கை கட்டமைப்புகளுக்கு மிகவும் சிக்கலான சூழ்நிலையில் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.

இயற்கை மாற்றங்கள் இயற்கையில் இருந்து வரும் பேரிடர்கள் என்றால், செயற்கை சாதன உற்பத்தியில் வெளிப்படும் கழிவுகள் மற்றும் மறுசுழற்சி முறையில் உருவாகும் சிக்கல் என இயற்கை கட்டமைப்பை மாசுபடுத்துதலும், அதனால் உருவாகும் இயற்கை மாற்றங்களையும் அறிய வேண்டியிருக்கிறது.

இயற்கையில் இருந்து உருவாகும் வாழ்வாதார பாதிப்பில் நம்மை பாதுகாத்து கொள்ளுதல் என்பதை சிந்தித்து செயல்படுதல் ஒரு வகை பாதுகாப்பு முறையாகும்.

இயற்கை கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் சில நேரங்களில் மனித வாழ்வாதாரத்திற்கு வழி காட்டுதலையும் உருவாக்குகிறது. சில நேரங்களில் வாழ்வாதாரத்திற்கு சிக்கலையும் உருவாக்குகிறது.

இயற்கை கட்டமைப்பு என்பது ஆக்கமும் – வளர்ச்சியும் – முடிவும் கொண்டது. இவை இயல்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் மனிதர்கள் இந்த முடிவை மாற்றி அமைக்க நிணைக்கிற போது இயற்கையில் மேலும் பல்வேறு நன்மைகளையும், பல்வேறு சோதனைகளையும், பல்வேறு அழிவுகளையும் சந்திக்க நேரிடுகிறது.

இயற்கை மாற்றங்களினால் மனிதனுக்குள் சில சமயம் இயல்பு அறிவும் வெளிப்பாடு நிகழ்கிறது. சில சமயம் விபரீத அறிவும் வெளிப்படுகிறது. இயற்கை மாற்றங்களினால் உருவாகும் இயல்பு அறிவினால் வாழ்வாதார மேம்பாடு மிகச்சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவு வரை உருவாகிறது. இவ்வாறு ஏற்படுகிற அறிவின் வெளிப்பாடு தான் மண்ணிற்குள்ளும், நீருக்குள்ளும், வெப்பத்திற்குள்ளும், ஆகாயத்திற்குள்ளும், காற்றிற்குள்ளும் தனித்தனியாகவும், ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் வெளிப்பாடுகளையும், அதில் மறைந்திருக்கும் வாழ்வாதார இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது.

விஞ்ஞானமும், மெய்ஞானமும் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்ததே இயற்கை மாற்றங்களினால் உருவாகும் தொடர்புகள் என்பதை அறிய வேண்டும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of