துணைக்கோள்கள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் மிகவும் பிரமாண்டமானது. இந்த பிரபஞ்சத்தில் ஆகாயத்தின் விரிவு அளவு, வெப்பம், வெளிச்சம், இருள், காற்று, நீர், மண் ஆகியவற்றின் நீளம், அகலம், சுற்றளவு, சுழற்சி முறை, உயரம், எடை, நிறம், நுணுக்கம், நுட்பம், ……… போன்றதன் நிகழ்வுகளை மனிதர்களால் இதுவரை நினைத்து கூட பார்க்க இயலாத அளவில் அமைந்திருக்கிறது. மேலும் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், கோள்களும் உள்ளது.

துணை கோள்கள்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளுக்கும் துணை கோள் உள்ளது.
துணை கோள்கள் இல்லாத கோள்களே இல்லை என்பதை தீர்க்கமாக அறிய வேண்டும்.

துணை கோள்களின் தேவை:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் அனைத்திலும் துணை கோள்கள் அமைந்திருப்பதன் அவசியத்தை அறிய வேண்டும்.
கோள்கள் & துணை கோள்கள் அனைத்திலும் உயிரியல் அமைப்பு முறைகள் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) வாழ வேண்டியிருக்கிறது. உயிரியல் அமைப்பு முறைகள் வாழ வேண்டும் என்றால் பகல் – இரவு தேவைப்படுகிறது. உதாரணமாக சூரிய குடும்பத்தை எடுத்து கொள்வோம். சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளுக்கும் பகலில் வெளிச்சத்தை தருவது சூரியனே ஆகும். அதுபோலவே இரவில் வெளிச்சத்தை தருவது அந்தந்த கோளின் துணை கோளாகும்.

உயிரியல் வாழ்வாதாரம் நிகழாது:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளில் துணை கோள் இல்லையோ அந்த ஒரு கோளில் உயிரியல் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) வாழ்வாதாரம் நிகழாது என்பதை அறிய வேண்டும். ஏனெனில் துணை கோள் இல்லாத கோளில் இரவில் வெளிச்சம் இருக்காது என்பதை அறிய வேண்டும். அதாவது துணை கோள் இல்லாத கோளில் இரவில் முழு இருளாக இருக்கும் ‌

உயிரியல் வாழ்வின் அவசிய தேவை:
கோள்கள், துணை கோள்கள் அனைத்திலும் உயிரியல் வாழ்வு தேவை என்றால் அங்கு பகல் – இரவு சுழற்சி நிகழ்வுகள் அவசியம் தேவையாகிறது.
எந்த ஒரு கோளில் அல்லது துணை கோளில் பகல் – இரவு சுழற்சி நிகழ்வுகள் இல்லையோ அங்கு உயிரியல் வாழ்வாதாரம் வாழ இயலாது என்பதை அவசியம் அறிய வேண்டும்.
ஒரு கோளில் அல்லது துணை கோளில் உயிரியல் வாழ்வாதாரம் நிகழ பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைப்பு இயக்கம் அவசியமாகிறது. அதில் கோள் ஈர்ப்பு விசை, கோள் சுழற்சி இயல், தட்ப -வெப்ப பரிமாற்றம்…….‌. போன்ற அவசிய நிகழ்வுகளோடு பகல் – இரவு நிகழ்வும் அவசியம் என்பதை அறிய வேண்டும்.

பிரபஞ்சத்தில்: பகல் – இரவு
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பகல் – இரவு உருவாக வெப்பமே பிரதானமாக அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

வெப்பத்தினால் உருவாகும் வெளிச்சமே பகல் தன்மையை பெறுகிறது.
வெப்பத்தினால் உருவாகும் வெளிச்சத்தின் குறைவான தன்மையே இரவு உருவாக காரணமாக அமைகிறது.

நட்சத்திரங்கள் & நட்சத்திரங்களில் துணை நட்சத்திரங்கள் பற்றி மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of