சுவாச இயல் காற்றின் தொடர்புகள்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் வாழ்வாதாரம் அமைப்பதற்கு மிகப்பெரும் சவாலாய் அமைவது சுவாச இயல் காற்று பற்றாக்குறையே ஆகும். அதாவது சந்திர மண் அமைப்பில் உள்ள காற்றில் ஆக்ஸிஜன், பிராண வாயு ……. சக்திகள் மிக மிக குறைந்த அளவில் காணப்படுகின்றன. மாறாக கரியமில வாயுக்களின் சங்கமங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

சுத்திகரிப்பும், சங்கமித்தலும்:
சந்திர மண்ணில் நீர் ஆதார அமைப்புகளை பயன்படுத்திய உடனோ அல்லது மண் சுத்திகரிப்பு பணிகள் பயன்படுத்தப்பட்ட உடனோ சுவாச இயல் காற்றின் தொடர்புகள் நிறைவு நிலையை பெற்றுவிடாது. ஆனால் இது துவக்க நிலையை உருவாக்கித்தரும் (முடிவு நிலை ஆகாது).

நீர், மண் சுத்திகரிப்பின் உச்ச கட்ட பராமரிப்பு சூழ்நிலையில் மண்ணை தாக்குகிற வெப்பக்காற்றின் தன்மை சீரான நிலையை அடைய வேண்டும். மண் மீதுள்ள வெப்பக்காற்றின் தன்மை தேவையான அளவு குறைகிற போது மின் காந்த அலைகளின் வெப்பத்தாக்கம் குறைய ஆரம்பிக்கும். இந்நிகழ்வுகளுக்கு பிறகு தான் கோள் ஈர்ப்பு விசை, கோள் மைய அச்சின் சுழற்சி இயல் முறைகள், நுண்ணுயிரிகளின் சங்கம அமைப்புகள் அரங்கேறும். கோளின் மைய அச்சின் சுழற்சி அசைவுகளுக்கு (சீரமைப்புகளுக்கு) பிறகு தான் நீர் ஆவியாகுதல், மழை பொழிதல் போன்ற நிகழ்வுகள் உருவாகும். இதன் பிறகு தான் சுவாச இயல் காற்றின் தொடர்புகள் சந்திர மண்ணில் சுழற்சி அமைப்புகளின் அரங்கேற்றம் ஆரம்பமாகும்.

வாழ்வாதாரம் உருவாகுதல்:
“சுவாச இயல் காற்று ஒரு கோளில் சுழன்றிட பஞ்ச பூத (ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண்) கலவைகள், தட்ப – வெப்ப பரிமாற்றம் ஆகியவை கோள் காந்த சுழற்சியோடு இணைந்திருப்பது வேண்டும்”. இவ்வாறு சுவாச இயல் காற்றின் தொடர்புகளை இயற்கை கட்டமைப்பில் நாம் உருவாக்குவதற்கு உரிய வழி முறைகளை உருவாக்கினால் தான் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான சுவாச இயல் முறைகளோடு தொடர்பு கொள்ள இயலும் என்பதை அறிய வேண்டும்.

சுவாச இயல் காற்றின் தொடர்புகளால் தென்றல், பசுமை, மழை, பனி, விதைகள் முளைத்தல் (செடிகள், கொடிகள், மரங்கள்), உயிரினங்கள் (ஊர்வன, மிதப்பன, பரப்பன, நடப்பன), மனிதர்கள் என உயிரியல் வாழ்வின் அனைத்து பரிணாம சுழற்சி இயல் முறைகளும் அரங்கேறும்.

அரங்கேற்றத்தில் பங்கு பெற்று வாழ்வாதாரம் உருவாக்குவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of