சந்திரன் – பூமி இருப்பிடம்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சூரிய குடும்பம் என்பதை அறிவோம். சூரிய குடும்பத்தில் சூரியனை சேர்த்து 9 மிக முக்கியமான கோள்கள் உள்ளது.
1. சூரியன்
2. புதன்
3. வெள்ளி
4. பூமி
5. செவ்வாய்
6. வியாழன்
7. சனி
8. யுரேனஸ்
9. நெப்டியூன்
என் 9 கோள்களோடு புளுட்டோ எனும் கோள் அமைப்பும் உள்ளது. ஒவ்வொரு கோளும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருகிறது.

பூமியின் இருப்பிடம்:
சூரிய குடும்பத்தில் 4வது கோளாக பூமி உள்ளது. அதாவது வெள்ளி எனும் கோளுக்கும், செவ்வாய் எனும் கோளுக்கும் நடுவில் உள்ளது.

பூமி – சுழற்சி கால அளவு:
பூமி தனது சுற்று வட்ட பாதையில் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. பூமி தன்னைத்தானே சுற்றி வரும் கால அளவை (24 மணி நேரம்) ஒரு நாள் என்கிறோம். பூமியில் ஒரு நாள் என்பது பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரமாக அமைந்துள்ளது.

பூமி தனது சுற்று வட்ட பாதையில் ஒரு முறை சுற்றி வருவதற்கு தோராயமாக 365 நாட்கள் ஆகிறது.

சந்திரனின் இருப்பிடம்:
சூரிய குடும்பத்தில் 4வது கோளாக பூமி உள்ளது. பூமியை மையப்படுத்தி சந்திரன் உள்ளது. அதாவது பூமியின் சுற்று வட்ட பாதையில் சந்திரனின் சுற்று வட்ட பாதை அமைந்துள்ளது.

சந்திரனின் சுழற்சி கால அளவு:
சந்திரன் தனது சுற்று வட்ட பாதையில் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கு தோராயமாக 28 நாட்கள் ஆகிறது.

சந்திரன் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்கு தோராயமாக 28 நாட்கள் ஆகிறது.

சந்திரனின் சிறப்பு:
சந்திரன் பூமியின் சுற்று வட்ட பாதையோடு இணைந்து இருப்பதன் சிறப்பே பூமிக்கு இரவில் ஒளியை தருவதாகும். சந்திரன் தனது ஒளியின் வாயிலாக வாழும் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் வழி காட்டுவதாக அமைந்திருக்கிறது. மேலும் பூமியில் வாழும் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறு வழிகளில் உதவியாக அமைந்திருக்கிறது.
ஆகையால்
சந்திரனை பூமிக்கு துணை கோள் என்று அழைப்பதை விட “பூமியின் துணைவன்” என்றே அழைக்கலாம்.

பூமியில் வாழ்வாதாரம்:
சூரிய குடும்பத்தில் பூமி எனும் கோள் அமைப்பில் மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள் எனும் உயிரியல் அமைப்புகளோடு இணைந்து பஞ்சபூதங்களின் துணையோடு வாழ்ந்து வருகிறோம்.

பூமியில் வாழும் உயிரியல் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) அணைத்திற்க்கும் பகலில் சூரிய ஒளியும், இரவில் சந்திர ஒளியுமே பிரதானமாக அமைந்திருக்கிறது.

கவர்ந்திழுத்தல்:
பூமியில் வாழும் உயிரியல் அமைப்புகள் அணைத்துமே பகலில் சூரியனை நோக்க அண்ணாந்து (தலை உயர்த்தி) பார்ப்பதுண்டு. அதுபோல் இரவில் சந்திரனை நோக்கி (தலை உயர்த்தி) பார்ப்பதுண்டு. அவ்வாறு காலையில் சூரியனையும், மாலையில் சூரியனையும் பார்ப்பதில் மகிழ்ச்சி ஆக இருக்கும். மதிய வேளையில் பார்பதற்கு கடினமாக இருக்கும். ஏனென்றால் சூரியனின் ஒளி வெப்பம் கூடுதலாக அமைந்திருக்கும். அதேசமயம் இரவில் சந்திரனை எப்பொழுதும் (மாலை, இரவின் துவக்கம், நள்ளிரவு, அதிகாலை) அண்ணாந்து பார்க்க மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதன் காரணமாகவோ என்னவோ மனிதர்களின் துவக்க காலத்தில் இருந்தே சந்திரனுக்கு செல்ல வேண்டும். சந்திரனில் வாழ வேண்டும் என்ற எண்ணம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே இருக்கிறது.

சந்திரனின் அழைப்பிதழ்:

மேலும் அறிவோம் வாருங்கள்,

நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of