கோள் ஈர்ப்பு விசை (அறிமுகம்)

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களும் ஈர்ப்பு விசையால் இயங்குகிறது என்பதை அறிவோம். கோளின் ஈர்ப்பு விசை பொதுவாக இரண்டு வகைப்படும்.
1. கோள் சுழற்சி ஈர்ப்பு விசை
2. கோளிற்குள் ஈர்ப்பு விசை ஆகும்.

1. கோள் சுழற்சி ஈர்ப்பு விசை:

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இயங்கும் ஒவ்வொரு கோள்களும் இயங்கும் இயக்கமானது பொதுவாக இரண்டு விதமான சுழற்சி இயக்க நிலைகளில் இயங்குகிறது.

  1. நின்று கொண்டே சுழலும் இயக்க முறையாகும். இதற்கு தன்னை தானே சுற்றி வருதல் என்ற பெயரிலும் அழைக்கிறோம்.
  2. சுழன்று கொண்டே சுழன்று வரும் முறையாகும். இதற்கு தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல் என்ற பெயரிலும் அழைக்கிறோம்.

இவ்விரு முறைகளும் ‘ஈர்ப்பு விசை’ முறையில் இயங்குகிறது. இதற்கு ‘கோள் சுழற்சி ஈர்ப்பு விசை’ என்றும் அழைக்கலாம்.

கோள் சுழற்சி ஈர்ப்பு விசையானது பிரபஞ்ச ஈர்ப்பு விசையின் துணையோடு இயங்குகிறது.

கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் இயக்கத்தினால்,

  1. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் வேகம்
  2. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் கால அளவு
  3. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் திசைகள்
  4. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் இயக்கத்தினால் உருவாகும் பகல் – இரவு நிகழ்வுகள்
  5. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் இயக்கத்திற்கு ஆதரமாக விளங்கும் மைய அச்சின் இயக்கம்
  6. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் வட்டப்பாதையோடு தொடர்பு கொள்ளும் துணைகோள் தொடர்பான நிகழ்வுகள் (தொடர்புகள்)
  7. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் இயக்கத்திற்கு பாதுகாப்பாக விளங்கும் பாதுகாப்பு வளையத்தை பற்றி அறிதல்.
  8. கோள் சுழற்சி ஈர்ப்பு விசையின் இயக்கத்திற்கு தொடர்பு ஆதாரமாக விளங்கும் பஞ்ச பூதங்களின் தொடர்புகளை அறிதல்.
  9. கோள் சுழற்சி ஈர்ப்பு விசை இயக்கத்தின் தொடர்புகளால் பிற கோள்களின் தொடர்பு இயக்கங்கள் ……. போன்றவற்றை அறியவும், உயிரியல் வாழ்வாதார வளர்ச்சிக்கு வித்திடவும் உதவிகரமாக அமையும் என்பதை அறியலாம்.

2. கோள் ஈர்ப்பு விசை:

நாம் பொதுவாக கோள் ஈர்ப்பு விசை என்று குறிப்பிடுவது கோளிற்குள் உள்ள ஈர்ப்பு விசையைத்தான் குறிப்பிடுகிறோம். அதாவது இதை மேலும் விரிவாக கூற வேண்டும் என்றால் ‘மண்ணிற்கு உள்ளும், வெளியும் – ஆகாயத்திற்கு மேலும், கீழும் உள்ள ஈர்ப்பு விசையைத்தான் குறிப்பிடுகிறோம்.

மேலும் தெரிந்து கொள்வோம்:

கோளிற்குள் ஈர்ப்பு விசை என்பது கோளிற்குள் இணைந்து இயங்கும் (பஞ்ச பூதங்களின் இயக்கங்கள்) இயக்கங்களின் தொடர்பு முறைகளை குறிப்பதாகும்.
அதாவது,

  • கோளின் மண் அமைப்போடு ஆகாயம் இணைந்து இயங்கும் இயக்க முறைகள்.
  • கோளின் மண் அமைப்போடு வெப்பம் இணைந்து இயங்கும் இயக்க முறைகள்.
  • கோளின் மண் அமைப்போடு காற்று இணைந்து இயங்கும் இயக்க முறைகள்.
  • கோளின் மண் அமைப்போடு நீர் இணைந்து இயங்கும் இயக்க முறைகள்
  • கோளின் மண் அமைப்போடு மண் இணைந்து இயங்கும் இயக்க முறைகள்

என இவ்வைந்தும் தனித்தனியாகவும், இணைந்து இயங்கும் இயக்க முறைகள்.

  • கோளின் மண் அமைப்போடு இணைந்து இயங்கும் கோளின் சுழற்சி இயக்க முறைகள்

என தொடர்ந்து இயங்கும் இயக்க முறைகளாக இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது என்பதை அறியவேண்டும்.

இவ்வாறு நாம் கோளிற்குள் இணைந்து இயங்கும் ஈர்ப்பு விசையை (கோள் ஈர்ப்பு விசை) முறையாக அறிந்து கொள்ள முற்படுகிற போது தான் கோள் ஈர்ப்பு விசையை முழுமையாக அறிய இயலும். அதேசமயம் நமது வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் பயன்படுத்தி கொள்ள இயலும். அல்லது வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக மாற்றி அமைத்து கொள்ள இயலும் என்பதை அறிவோம்.

கோள் ஈர்ப்பு விசையின் முரண்பாடு
சந்திரனில் வெப்ப ஈர்ப்புவிசையால் (மின்காந்த அலைகள்) கோள் ஈர்ப்பு விசை மாறுபடுகிறது (முரண்படுகிறது).

நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of