காந்த ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

காந்தம்:
காந்தம் என்பது ஈர்த்து இயக்கும் – இயங்கும் தன்மைக்கு உதவுவது ஈர்ப்பு விசை ஆகும்..

காந்த உருவ அமைப்புகள்:

* காந்தம் புற கண்களுக்கு தெரியும் பொருளாக அமைந்திருக்கிறது.
* காந்தம் புற கண்களுக்கு தெரியாத வடிவமாக அமைந்திருக்கிறது. (விண் வெளியில் இருந்து மண் வெளி வரை அமைந்திருப்பது – பாதுகாப்பு அமைப்பு முறை , கோள் அமைப்பு சூழலில் பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பது)
* காந்தம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாவது. (இயற்கை தொடர்பில் ஏற்படும் முரண்பாடுகளில் வெளிப்படுவது)

காந்த ஈர்ப்பு விசை:
காந்தம் என்பது ஈர்க்கும் விசை தன்மை உடையது.
காந்தம் என்பது தமது சக்தியால் தம்மோடு இணையும் பொருளை ஈர்ப்பது, இயங்குவதற்கு துணையாக அமைவதும் ஆகும்.

காந்த ஈர்ப்பு விசையின் முக்கிய தொடர்புகள்:
கோளிற்கும் – கோள் பாதுகாப்பு வலயத்திற்குள் இடையில் பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பது காந்த ஈர்ப்பு விசையாகும். இக்காந்த ஈர்ப்பு விசை இயற்கை கட்டமைப்பில் அமைந்திருப்பதாகும்.

கோளிற்கும் – கோள் சுழற்சி இயலுக்கும் இடையில் பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பது காந்த ஈர்ப்பு விசை ஆகும்.

கோள் பாதுகாப்பு வலயத்திற்கும் – கோள் குடும்ப பாதுகாப்பு வலயத்திற்கும் இடையில் பாதுகாப்பு கவசமாக காந்த ஈர்ப்பு விசை அமைந்திருப்பதாகும்.

கோள் குடும்ப பாதுகாப்பு வலயத்திற்கும் – பிரபஞ்ச பாதுகாப்பு வலயத்திற்கும் இடையில் பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பது காந்த ஈர்ப்பு விசை ஆகும்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை அறிவோம். பஞ்ச பூதங்களுக்குள் ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்கிறோம். பஞ்ச பூதங்களில் மண்ணை முதன்மையாக கொண்ட கோளில் தான் மனிதர்கள் வாழ இயலும் என்பதையும் அறிகிறோம்.

மண்ணை முதன்மையாக கொண்ட கோளில் தான் மனிதர்கள் வாழ இயலும் என்பதற்கு காரணம் எது என்பதை அறிவோமா?
மண்ணை முதன்மையாக கொண்ட கோளில் தான் பஞ்ச பூதங்களின் கூட்டு கலவை அமைந்திருக்கிறது. அதாவது பஞ்ச பூத தொடர்பில் அமைந்திருக்கிறது.

மண் – பஞ்ச பூத தொடர்பு:
* மண்ணில் உள் – வெளி அமைப்பில் வெப்பத்தின் தொடர்பு அமைகிறது.
* மண்ணில் உள் – வெளி தொடர்பில் நீரின் தொடர்பு அமைகிறது.
* மண்ணில் உள் – வெளி தொடர்பில் காற்று தொடர்பு அமைகிறது.
* மண்ணில் உள் – வெளி தொடர்பில் இடைவெளி ( ஆகாயம்) தொடர்பு அமைகிறது.

மண் அமைப்பு:
மண் துகள் தன்மையாக அமைகிறது.
உதாரணமாக:
* மண் – மண் துகளாக அமைகிறது.
* மண் – மணல் துகளாக அமைகிறது.
* மண் – கல் துகளாக அமைகிறது.
* மண் – கெட்டி (பாறை) தன்மையாக அமைகிறது.

மண்ணின் தன்மை:
* மண் நீரில் நனையும் தன்மை உடையது.
* மண் வெப்பத்தில் உலரும் தன்மை உடையது.
* மண் இருகும் தன்மை உடையது.
* மண் தீயில் எரியும் தன்மை உடையது.
* மண் தீயில் எரிந்து கருகும் தன்மை உடையது.
* மண் பனியோடு இணைந்து கெட்டியாகும் பனிபாறையாக (பனி கட்டிக்குள் மண் இணைந்திருந்தால்) இணையும் தன்மை உடையது.

மண்ணில் கலவை:
* மண்ணில் மண் அமைந்திருப்பது போலவே நிலக்கரி ….. போன்ற எரியும் தன்மை கொண்ட பொருள்கள் அமைந்திருக்கிறது. மேலும் உலோகங்கள் (கனிம வளங்கள்) அமைந்திருக்கிறது.
*மண்ணில் நீர் அமைந்திருப்பது போலவே எண்ணெய் வளங்கள் அமைந்திருக்கிறது.
* மண்ணில் காற்று இணைந்திருப்பது போலவே வாயுக்கள் அமைந்திருக்கிறது.
* மண்ணில் வெப்பம் இணைந்திருப்பது போலவே நெருப்பும் (எரிமலை குழம்புகள்) அமைந்திருக்கிறது.

மண்ணில் மேற்கூறிய கலவைகள் இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று கலக்காத நிலையில் அமைந்திருக்கிறது. இதற்கு காரணமே காந்த ஈர்ப்பு விசை ஆகும். இதை மண் காந்த ஈர்ப்பு விசை என்றும் அழைக்கலாம்.

காந்த ஈர்ப்பு விசை :
இரும்பை ஈர்க்கும் காந்தம்:
மண்ணில் எத்தனை வகையான மண் அமைப்புகள் இருந்தாலும், மண்ணில் எத்தனை வகை உலோக அமைப்புகள் இருந்தாலும் மண்ணில் உள்ள இரும்பு துகளை மாத்திரமே ஈர்ப்பது.

மண் பாதுகாப்பு காந்தம்:
மண்ணின் மேற்பரப்பிலும் – மண்ணின் உட்பரப்பிலும் பஞ்சபூத கலவைகளின் தொடர்புடையதாக மண் பாதுகாப்பு காந்தம் அமைகிறது.

மண் காந்த ஈர்ப்பு விசை:
மண்ணின் மேற்பரப்பிலும் – மண்ணின் உட்பரப்பிலும் கோளின் ஈர்ப்பு விசைக்கும், மைய அச்சின் ஈர்ப்பு விசை தொடர்பிற்கும் கோள் சுழற்சி இயலுக்கும், உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பிற்கும் தொடர்பு சாதனமாக அமைவதுவே மண் காந்த ஈர்ப்பு விசை ஆகும்.

மண் சுழற்சி ஈர்ப்பு விசை:
மண்ணிற்கும் – மண்ணோடு தொடர்பு கொண்டு சுழலும் பஞ்ச பூத கலவைகளின் தொடர்பிற்கும் உரிய ஈர்ப்பு விசையை மண் சுழற்சி ஈர்ப்பு விசை என்கிறோம்.
மண் சுழற்சி ஈர்ப்பு விசை என்பது மண் சுழற்சி இயக்கத்திற்கு துணையாக அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். அதாவது மண் சுழற்சி இயல் என்பதை கோள் சுழற்சி இயலில் மண்ணோடு தொடர்பு உடைய நிகழ்வை குறிக்கிறது.

காந்தம் இரு வகை:
1. இயற்கை காந்தம்
2. மின் காந்தம் என இரு பெரும் பிரிவுகளில் அமைந்திருக்கிறது.

இயற்கை காந்தம்
இயற்கை காந்தம் இரு வகை
1. புற கண்களுக்கு தெரிவது (கல் வடிவமைப்பு கொண்டது)
2. புற கண்களுக்கு தெரியாதது (இயற்கையில் பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பது)

மின் காந்தம்
மின் காந்தம் இரு வகை:
1. இயற்கை மின் காந்தம்
2. செயற்கை மின் காந்தம் என இரு வகை தொடர்புகளில் மின் காந்தம் பயன்படுகிறது.

இயற்கை மின் காந்தம்:
ஒவ்வொரு கோளிலும் வெப்ப அலைகள் குறிப்பிட்ட அளவில் பயன்டுவதற்கு இயற்கை மின் காந்தம் உதவுகிறது.

இயற்கை மின் காந்த பாதிப்பு:
கோள் சுழற்சி முறையில் வாழ்வாதார பயன்பாடுகளில் முரண்பாடுகள் நிகழ்கிற போது இயற்கை மின் காந்த அலைகள் பாதிக்கப்படும் என்பதை அறிய வேண்டும்.

வெப்ப சுழற்சி ஈர்ப்பு விசை:
ஒரு கோளில் பஞ்ச பூத கலவை பயன்பாட்டில் நீர் ஆதாரம் தவிர இதர நான்கு பூதங்களின் பயன்படும் சுழற்சி முறைகளை குறிப்பதே வெப்ப சுழற்சி ஈர்ப்பு விசை ஆகும்.
வெப்ப சுழற்சி ஈர்ப்பு விசை என்பது கோளில் பஞ்ச பூத தொடர்புகளில் ஏற்படுகிற முரண்பாடுகளை குறிப்பதாகும். அதாவது ஒரு கோளில் வெப்பமும், வெப்ப காற்றலைகளும் மிக கூடுதலான அளவில் பயன்படுகிற நிலையாகும். அதேசமயம் அக்கோளில் நீர் ஆதாரம் பயன்படாத நிலையாகும் என்பதை குறிப்பதாகும்.

நீர் சுழற்சி (சுழல்) ஈர்ப்பு விசை:.
நீர் சுழற்சி ஈர்ப்பு விசை என்பது நீரில் பஞ்ச பூத கலவைகளின் தொடர்புகள் முரண்படுகிற போது உருவாகிற நிகழ்வு ஆகும். இவை
நீர அதிர்வுகளில் இணைந்திருப்பது ஆகும்.

காந்த ஈர்ப்பு விசை பாதிப்பு:
வெப்ப சுழற்சி ஈர்ப்பு விசையும், நீர் சுழற்சி ஈர்ப்பு விசையும் எங்கு முரண்படுகிறதோ அங்கு காந்த ஈர்ப்பு விசை பாதிப்பு அடையும் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அறிவோம், வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of