இயல்பு நிலை ஆகுதல்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் மனிதர்கள் இயல்பாக வாழ வேண்டும் என்றால் கோள் ஈர்ப்பு விசை சீராக அமைந்திருக்க வேண்டும். கோள் ஈர்ப்பு விசை சீராக அமையவில்லை என்றால் மனிதர்கள் மாத்திரம் அல்ல தாவரங்கள், உயிரினங்கள் என உயிரியல் வாழ்வாதாரத்திற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை என்பதை நாம் அவசியம் அறியவேண்டும். ஏனென்றால் சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்க பஞ்ச பூதங்கள் சந்திர மண்ணோடு இணைந்து இயங்கும் தன்மை உடையதாக அமைந்திருக்க வேண்டும்.

கோள் ஈர்ப்பு விசை சீராவதற்கு:

சந்திர மண்ணில்,

  • நீர் பயன்படுத்த வேண்டும்.
  • மண் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
  • சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை இயல்பு நிலை ஆகவில்லை என்றால் உடைந்து போன மண்ணின் மூலக்கூறுகள் ஒருங்கினைவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை அறிய வேண்டும்.
  • சந்திரனில் மண்ணின் மூலக்கூறுகள் ஒருங்கினைந்த இயற்கை கட்டமைப்பு உருவாகவில்லை என்றால் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் எவ்வகையிலும் இல்லை என்பதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
  • மின் காந்த அலைகளின் தாக்கம் குறைய வேண்டும். அவ்வாறு குறையவில்லை என்றால் சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சமச்சீரான முறையில் அமையாது.
  • காற்றின் தன்மை சுவாச இயல் தன்மைக்கு ஏற்றவாறு உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகிற போது தான் சந்திரனில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஏற்புடைய வாய்ப்பு உருவாகும்.
  • சந்திர மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் சங்கமம் உருவாக வேண்டும்.
  • மழை, மேகம், பனியின் நிகழ்வுகள் சந்திர மண்ணில் தொடர வேண்டும்.
  • சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை இயல்பு நிலைக்கு திரும்பாத வரை சந்திரனின் மைய அச்சு சுழற்சியை சீரமைக்க இயலாது.
  • சந்திரனின் மைய அச்சின் சுழற்சி இயக்கம் பூமியில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் சுழல வேண்டும். அவ்வாறு சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை பூமியில் வாழும் உயிரிணங்களுக்கு ஏற்புடையதாக மாற்றி அமைக்கப்படவில்லை என்றால் சந்திரனில் பகல் – இரவு சுழற்சி சீராக அமையாது.
  • பகல் கால அளவுகள் சீராகத வரையில் சந்திரனில் பூமியை விட பலமடங்கு கூடுதலாக நிலவும் கடுமையாக வெப்பத்தால் எவ்வகையான உயிரினங்களும் வாழ இயலாமல் போய்விடும் என்பதை அறிய வேண்டும்.
  • சந்திரனில் இரவு கால அளவுகள் சீராகத வரையில் பூமியை விட பலமடங்கு கூடுதலாக நிலவும் கடுமையான குளிரால் எவ்வகையான உயிரினங்களும் வாழ இயலாமல் போய்விடும் என்பதை அறிய வேண்டும்.
  • சந்திரனின் கோள் ஈர்ப்பு விசையின் தன்மை பூமியில் வாழும் உயிரிணங்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்புடைய நிலையில் அமைகிற போது பூமியில் வாழும் உயிரிணங்கல் சந்திரனில் வாழ்வாதற்கு ஏற்புடையதாக அமையும் என்பதை அறிய வேண்டும்.
  • சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை சீரமைக்க இயலாத சூழ்நிலையில் வின்கற்கல் விழுதலை நிறுத்த இயலாது. எனவே சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை இயல்பு நிலையாகுதல் உருவாகிட வேண்டும்.

சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை இயல்பு நிலை ஆகுதலுக்கு பன்முக ஆய்வுகள் தேவை என்பதை முழுமையாக உணர வேண்டும்.

நன்றி, வணக்கம்.

மேலும் அறிவோம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of