இந்திய சுதந்திர தினம்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பூமியில் மனிதர்கள் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து மனித வாழ்வு சென்று கொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்களது துவக்க காலத்தில் வாழ்வாதாரத்தை உருவாக்கிட பல்வேறு முயற்சிகளையும், அனுபவங்களையும் மேற்கொண்டனர். அதில் மனிதர்களின் வாழ்வாதாரம் ஒருங்கிணைந்த நிலையில் மேம்பட பல்வேறு ஆய்வுகளை இயற்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. அதாவது நிலத்தில் இருந்து, நீரிலிருந்து, கருங் கல்லில் இருந்து, மண்ணில் இருந்து, காற்றில் இருந்து, ஆகாயத்தில் இருந்து, வெப்பத்தில் இருந்து, குளிரில் இருந்து, பகல் சூரியனின் வெப்ப வெளிச்சத்தில் இருந்து, இரவில் சந்திரனின் மென்மையான வெப்பம் மற்றும் குளிர் வெளிச்சத்தில் இருந்து, இயற்கையின் இயல்பை காற்று கொண்டும், வாழ்வாதார வாழ்வியலுக்கு தாவரங்களில் இருந்தும், உயிரினங்களில் இருந்தும், மண், இயற்கை பரிமாற்றங்களில் இருந்தும், உயிரியல் பரிணாம பரிமாற்றங்களில் இருந்தும், இயற்கையில் இருந்தும், இயற்கையின் துணையோடு செயற்கை கட்டமைப்பு முறையிலுமாக மனித வாழ்வாதாரத்தை உருவாக்க மனிதனின் சிறப்பறிவான பகுத்தறிவின் துணைகொண்டு பூமியை தமது வாழ்வாதாரமாக்கி கொள்கிற முயற்சியில் தான் தேவையானது தேவையற்றது என வாழ்வாதார கற்றலில் போட்டியும், பொறாமையும் தலைதூக்கிய போது தான் வாழ்வாதார கட்டமைப்பில் பிரிவும் பிளவும் ஏற்பட்டது. இதன் வாயிலாக உருவான விளைவுகள் பூமியில் வாழ கற்று கொள்கிற முறையில் இருந்து ஆள கற்று கொண்டதன் விளைவே பூமி முழுவதும் தனக்கு தனக்கு என அதிகார வர்கத்தால் ஒருவருக்கு ஒருவர் மோதி கொண்டு வாழ்வாதாரத்தில சந்தோசத்தையும், நிம்மதியையும் இழக்க நேரிட்டது. அறிவியலில் உச்ச கட்டத்தை அடைந்து மனித வாழ்வாதாரத்தின் விசால தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிற அதே வேளையில் மனித வாழ்வாதாரத்தை , மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழவே வாழ்ந்து காட்டிய வாழ்வாதாரமே அஹிம்சை வாழ்வாதாராமாகும்‌ அஹிம்சை வாழ்வாதாரம் என்பது ஐம்புலன்களின் இயக்கங்கள் மனதையும், அறிவையும், புத்தியையும் சமநிலையில் ஆத்மார்த்த அர்பனிப்போடு மனித நேயத்தில் இயற்கையோடு இயல்பாக இணைந்து வாழ்வதே ஆகும். மனிதர்கள் தங்களது உலக ஆதிக்கத்தை அதிகார போக்கில் ஆளுமை படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிற போது மனிதர்களின் சுதந்திர வாழ்வாதாரம் அஹிம்சை வாழ்வாதாரமே சிறப்பான வாழ்வாதாரம் என வாழ்ந்து காட்டியது இந்திய சுதந்திரம். அஹிம்சை வாழ்வியலை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு கோளில் பஞ்சபூத இயக்கங்கள் தேவையான அளவு பரிமாறினால் கோளின் கட்டமைப்பும், கோள் கட்டமைப்பில் வாழும் உயிரியல் வாழ்வாதாரமும் செழிப்பையும், உயிரியல் கட்டமைப்பு அனைத்தும் சுகமாக வாழும். அதுபோலவே மனிதனின் ஐம்புலன்களின் இயக்கங்கள் முழுமையானால் தேவையான அளவு நிறைவானால் பூமியில் சுகமான மற்றும் செழிப்பான வாழ்வு நிறைவாக அமையும்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of