அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் இயங்கும் விதங்களை அறிந்தால் இயற்கையியல், உயிரியல் வாழ்வாதார நிகழ்வுகளை புரிந்து கொள்ள இயலும்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பிரபஞ்சம் முழுவதும் இயற்கையியல், உயிரியல் வாழ்வாதாரம் உருவாக வேண்டும் என்றால் பிரபஞ்ச இயல் விதிகளை அறிய வேண்டும். பிரபஞ்ச விதிகளை கொண்டு பிரபஞ்ச வாழ்வியல் சூத்திரத்தை உருவாக்கிட வேண்டும்.
பிரபஞ்ச இயல் விதிகள்:
நாம் வாழும் பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களின் தொடர்பினால், பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் இயக்க – இயற்கை தொடர்பு முறைகளால் இயங்குகிறது. ‘பிரபஞ்ச நுண்ணுயிர்களின் வாழ்வாதார கூட்டமைப்போடு இயங்கும்’ முறைகளாகவும், ‘உயிரினங்களின் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) கூட்டமைப்போடு இயங்கும்’முறைகளாகவும் என இரு பிரிவுகளாக அமைந்திருக்கிறது. இந்த மகத்தான இயற்கை தொடர்பு முறைகளை நிறைவாக அறிகிற பொழுது பிரபஞ்ச இயலில் வாழ்வியல் முறைகளை பற்றிய இரகசியங்களை அறியலாம்.
பிரபஞ்ச வாழ்வியல் சூத்திரம்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இயற்கையில் மற்றும் உயிரியல் வாழ்வாதாரம் இயல்பாக நிகழ வேண்டும் என்றால் பிரபஞ்ச வாழ்வியல் சூத்திர அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
இந்த பிரபஞ்ச வாழ்வியல் சூத்திரத்தை எளிமையாக மற்றும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது,
பிரபஞ்ச இயக்க இயலில் தொடர்புடைய மிக முக்கியமான சாரம்சங்களை அறியலாம்.
இந்த பிரபஞ்ச வாழ்வியல் சூத்திரமானது பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் முறைகளை குறிக்கிறது. எந்த ஒரு கோளில் பஞ்ச பூதங்களின் இயக்கங்கள் இயற்கை கட்டமைப்புகளுக்கு ஏற்ப இயங்குகிறதோ அந்த கோளில் “வாழ்வாதார இயற்கை கட்டமைப்பும், வாழ்வாதார உயிரியல் கட்டமைப்பிற்கு” ஏற்புடையதாக அமைந்திருக்கும் என்பதை அறியலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் “வாழ்வாதார இயற்கை கட்டமைப்பும், வாழ்வாதார உயிரியல் கட்டமைப்பிற்கு” ஏற்புடையதாக அமைந்திருக்கும் கோள் பூமி ஒன்றேயாகும்.
மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply