அனைவருக்கும் வணக்கம்,
மனித சமுதாயம் நலமாக, வளமாக, உயர்வாக வாழ வேண்டும் என்று எல்லோருக்கும் விருப்பமாகவே இருக்கிறது.
மனித சமுதாயம் சிறப்பாக வாழ்வதற்கே கல்வி, அனுபவம் என்பது
நினைத்தல்,
சிந்தித்தல்
செயல்படுத்தல்,
அனுபவம்,
பகிர்ந்து கொள்ளுதல் எனும் இந்நிகழ்வுகளின் தொடர் அனுபவங்களே ஆகும்.
நினைத்தல் துவங்கி பகிர்ந்து கொள்ளுதலின் தொடர் அனுபவங்களின் தொடர் நிகழ்வுகளின் வெளிப்பாடே ஆய்வு முறை ஆகும். இந்த ஆய்வு முறைகள் இரு முறைகளில் வெளிப்படுகிறது.
1. அனுபவ ஆய்வு
2. விஞ்ஞான ஆய்வு
3. கலப்பின ஆய்வு எனும் மூன்று பெரும் பிரிவுகளாக நடைமுறையில் உள்ளது.
இம்மூன்று ஆய்வுகளிலும் நிறைவு, நிறைவின்மை எனும் இரு வகை நிகழ்வுகளிலும் ஆய்வுகள் வெளிப்படுகிறது.
அனுபவ ஆய்வு இருவகை ஆய்வு முறைகளில் வெளிப்படுகிறது.
1. நேரடி அனுபவ ஆய்வு
2. சூட்சும ஆய்வு (Unreachable Research)
நேரடி அனுபவ ஆய்வு:
மனித உலகம் துவங்கிய காலத்தில் இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கிற மனித சமுதாயம் அனுபவ ஆய்வுகளின் துணை கொண்டே நிகழ்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம்.
அனுபவ ஆய்வுகளுக்கு நாம் (மனித சமுதாயம்) முக்கியத்துவம் தருகிறோமோ அப்போது தான் விஞ்ஞான உலகம் தமது ஆய்வுகளை மேற்கொள்வதற்கு எளிமையான வழிமுறைகள் உருவாகும் என்பதை அவசியம் அறிய வேண்டும்.
நேரடி அனுபவ ஆய்வுகளை எளிமையாக விளக்கினால் அதிலிருந்து விஞ்ஞான ஆய்வுகள் உருவான விதம் புரியவரும். அதாவது
* நினைவில் இருந்து செயல்படுதல்
* நினைவில் இருந்து பழகி கொள்ளுதல்
* நினைவில் இருந்து பழகி கொண்டதில் தேவையானதை கற்று கொள்ளுதல்.
* நினைவில் இருந்து கற்றல் –
கற்றலில் இருந்து செயல்படுதல்.
* கற்றலில் இருந்து நினைத்தல் – கற்றலில் இருந்து செயல்படுதல்.
* கற்றலில் இருந்து அனுபவித்தல்
* கற்றலில் இருந்து பகிர்ந்து கொள்ளுதல்
* கற்றலில் இருந்து அனுபவித்தல் – பகிர்ந்து கொள்ளுதல்.
நேரடி அனுபவ ஆய்வுகளை நிறைவு ஆய்வு தொடர்புகளாக நிறைவாக மேற்கொள்ள இயலும்.
ஆய்வுகள் அனைத்திற்கும் மூலாதார ஆய்வு என்றும் ஆதார ஆய்வு என்றும் அழைக்கலாம்.
சூட்சும ஆய்வுகள்:
புறக்கண்களுக்கு தெரிந்தும், புறக்கண்களுக்கு தெரியாமலும் இயங்குகிற – இயக்குகிற விஞ்ஞான, மெய்ஞான ஆய்வுகளில் உருவாகும் இயக்கங்களை சாதாரண அறிவு கொண்டு அறிந்து கொள்ள இயலாத விசயமாகும்.
மோட்டார் வாகனம் ஓடுதல், கப்பல்/நீர் மூழ்கி கப்பல் கடலில் வேகமாக செல்லுதல், ஆகாய விமானம் பரந்து செல்லுதல், வேறு கோளில் சேட்டிலைட் இயக்குதல், ரேடியோ பாடுதல், தொலைபேசியில் பேசுதல், கம்யூட்டர், ரோபாட் இயக்குதல் ……….. என பல்வேறு செயல் முறை இயக்கங்களை குறிப்பிடலாம். மேலும் சூட்சும ஆய்வுகள் விஞ்ஞானத்தில் வெளிப்படுவதை அறியலாம்.
வேதங்கள், யோகம், ஞானம், தத்துவம் …….. போன்றவை உருவாவதும், அவற்றிற்கு விளக்கம் அறிவிப்பது போன்ற காரியங்களும், மெய்ஞான பயிற்சி அளித்தல், உடல் – மனம் – உயிர் ……… மற்றும் பிரபஞ்ச இயக்கங்களை அறிதல் போன்றவை மெய்ஞானத்தின் வாயிலாக வெளிப்படுவதை மெய்ஞானத்திலும் அறியலாம்.
விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் உருவாக்கப்படும், செயல்படும் சூட்சுமங்கள் மற்றும் அதன் இயக்கங்களை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாத நிகழ்வுகளாகவே அமைந்திருப்பதை அறிவோம்.
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply