சந்திர கிரகணம் மாறி அமைதல்

அனைவருக்கும் வணக்கம்,
பூமியில் பல நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறு வாழ்கிற நாம் வாழ்வியல் முறைகளை முறை படுத்துவதற்கு பல்வேறு கட்டமைப்புகளை இயற்கையோடு இணைந்து உருவாக்கி இருக்கிறோம். அதில் மிக முக்கியமாக திசைகள், காலங்களை உருவாக்கியிருக்கிறோம். இவற்றிற்கு மிக முக்கியமாக இயற்கையில் துணையாக அமைந்து இருப்பது சூரியனும் சந்திரனும் என்பதை அறிவோம்.

பூமியில் வாழ்கிற நமக்கு (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) சூரியனே வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தருகிறது. இந்நிகழ்வை பகல் வேளை என்றும் இதன் உதய நிகழ்வையும் மறைவு நிகழ்வையும் காலை – மாலை என்றும், உதய நிகழ்வின் துவக்கத்தை கிழக்கு திசை என்றும், மறைவின் துவக்கத்தை மேற்கு திசை என்றும் மற்ற இரு புறங்களை வடக்கு – தெற்கு என்றும் திசைகளாக பிரிக்கிறோம்.

சந்திரனின் நிகழ்வுதான் இரவிற்கு பூமியில் வெளிச்சத்தையும், குளிர்ச்சி நிறைந்த வெப்பத்தையும் தருகிறது. மேலும் சந்திரனின் சுழற்சி முறையே இதுவரை அமாவாசை, வளர்பிறை, பவுர்ணமி, தேய்பிறை எனும் நிகழ்வுகளை தருகிறது. பூமியில் இரவின் காலத்தை சந்திரன் தனது ஒளியின் வாயிலாக வெளிச்சத்தாலும், வெளிச்சமின்மையாலும் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது.

மனிதனது துவக்க காலத்தில் இரவில் வாழ்வதற்கு சந்திர ஒளியே பேருதவியாக அமைந்தது. இந்நிகழ்வு இன்று வரை பூமியின் வாழ்வாதாரத்திற்கு தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.

சந்திர கிரகணம்:
சந்திரனின் சுழற்சி மையத்தில் ‘சூரியன் – பூமி – சந்திரன்’ எனும் சந்திப்பு சுழற்சி இயக்க நேர சந்திப்பை தான் சந்திர கிரகணம் என்பதை அறிவோம்.

சந்திரனில் நமது (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) வாழ்வாதாரத்தை துவங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இம்முயற்சியை நாம் நன்கு தெளிவாக அறிய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பூமியின் இயற்கை கட்டமைப்பை போல் சந்திரனின் இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கவில்லை. அதாவது கோள் ஈர்ப்பு விசை, கோள் மைய அச்சு சுழற்சி, சுற்றுவட்ட பாதையில் இரு வகை சுழற்சியின் கால அளவு, பகல் – இரவு கால அளவு, வெப்பம் – குளிர் போன்றவை யின் அளவுகள், மண், நீரின் தன்மைகள் ….. போன்றவை பூமியின் இயற்கை கட்டமைப்புகளோடு இணைந்திருக்கவில்லை. இவ்வாறு உள்ள சூழ்நிலையில் பூமியில் வாழும் சூழ்நிலையோடு இணைந்து வாழும் உயிரியல் அமைப்புகள் சந்திரனில் வாழ இயலாமல் போய்விடும் என்பதை அறிய வேண்டும். எனவே சந்திரனில் உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்பு சந்திரனின் இயற்கை கட்டமைப்பை சீராக்குதல் என்பது அவசியமாகிறது. நாம் சந்திரனின் இயற்கை கட்டமைக்கப்பை சீரமைக்கப்படுகிற போது சந்திரனின் சுழற்சி வேகம் தற்போது உள்ள நிலை இதைவிட பல மடங்கு அதாவது 28 மடங்கு அதிகரிக்க வேண்டி இருக்கிறது.

சந்திரனின் சுழற்சி இயக்கம் பூமியில் வாழும் வாழ்வாதார அமைப்பிற்கு தேவையான அளவு மாறுபடுகிறது. இதனால் சந்திரனின் சுழற்சி இயக்கம், பூமியின் சுழற்சி இயக்கம் சூரியனின் சுழற்சி கால அளவில் மாறுபடுகிறது எனவே தற்போது உள்ள நிலையில் ஏற்படுகிற சந்திரகிரகண கால அளவுகள், சூழ்நிலை கால அளவுகள் முற்றிலும் மாறுபடுகிறது.

மேலும் விரிவாக விளக்க வேண்டுமென்றால் தற்போது உள்ள சூழ்நிலையில் சந்திரன் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு தோராயமாக 28 நாட்கள் ஆகிறது. ஆனால் சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிற காலகட்டத்தில் சந்திரனின் சுழற்சி இயக்கம் 28 மணிநேர அளவாக மாறுகிறது. இதற்காகவே 28 மணிநேர கடிகாரம் உருவாக்கப்படுகிறது. இதில் 14 மணிநேரம் பகல், 14 மணிநேரம் இரவு என அமையும் என்பதை அறிய வேண்டும். சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாகிற காலகட்டத்தில் பூமியிலும் இயற்கை கட்டமைப்பில் சுகமான மாற்றங்களும், பகல் – இரவு கால அளவில் மாற்றங்களும் உருவாகும் என்பதை அறிய வேண்டும். பூமியில் உள்ள 24 மணி நேர அளவில் 10 மணி நேரம் பகல் என்றும், 14 மணிநேரம் இரவு என்ற சூழலில் அமையும். பூமியில் பிறை அளவுகள் சந்திரனின் சுழற்சி வேகத்தால் ஒருநாள் இரவில் அமைந்துவிடும். அதாவது பூமியில் ஒவ்வொரு நாள் இரவிலும் அமாவாசை, வளர்பிறை, பவர்ணமி, தேய்பிறை என்பது நிகழும் வண்ணமாக அமையும். ஆகவே சந்திர கிரகணம் என்பது தற்போது உள்ள நிகழ்வு போல் அல்லாது மாறி அமையும். அதாவது மாற்றி அமைக்கப்படுகிறது என்பதை அறிவோம்.

நன்றி, வணக்கம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of