கோள் சுழற்சி ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

பிரபஞ்சம் முழுவதும் பஞ்ச பூதங்களால் ஆனது என்றாலும் நாம் வாழ்வது மண்ணை மையப்படுத்தி அமைந்திருக்கும் கோள் என்பதை அறிவோம்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் சுழற்சி ஈர்ப்பு விசையில் இணைந்து சுழல்வது போல சூரிய குடும்பமும் சுழல்கிறது. அதுபோலவே ஒவ்வொரு கோளும் கோள் சுழற்சி ஈர்ப்பு விசையில் இயங்குகிறது.

கோள் சுழற்சி ஈர்ப்பு விசையானது கோளின் மைய அச்சு சுழற்சிக்கும் – கோளின் சுற்று வட்ட பாதையின் மைய புள்ளிக்கும் நடுவில் அமைந்துள்ளது.
அதாவது,
கோள் ஈர்ப்பு விசையானது கோளின் மைய அச்சு ஈர்ப்பு விசையோடு இணைந்திருக்கிறது.
கோளின் மைய அச்சு ஈர்ப்பு விசையானது கோள் சுழற்சி ஈர்ப்பு விசையோடு இணைந்திருக்கிறது. கோள் சுழற்சி இணைப்பு ஈர்ப்பு விசையானது கோளின் சுற்று வட்ட பாதையோடு இணைந்திருக்கிறது.

கோள் சுழற்சி ஈர்ப்பு விசை: இரு செயல்:
1. தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல்
2. சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்
என ஒவ்வொரு கோளும் இரு வகையான சுழற்சி முறைகளில் சுழல்கிறது.
1. தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல்:
பஞ்ச பூதங்களின் உள் – வெளி இயக்கங்களினால் – கோள் ஈர்ப்பு விசையின் துணை கொண்டு – கோள் மைய அச்சின் துணையாலும், சுற்று வட்ட பாதையில் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் தன்மையில் இயங்குகிறது.

2. சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்:
பஞ்ச பூதங்களின் வெளி – உள் இயக்கங்களினால் – கோள் ஈர்ப்பு விசையின் துணை கொண்டு – கோள் மைய அச்சின் துணையாலும், சுற்று வட்ட பாதையில் சுற்றிக் வரும் தன்மையில் இயங்குகிறது.

“கோள் சுழற்சி ஈர்ப்பு விசையானது” பஞ்ச பூத கலவை இயக்கங்களினால், கலவை ஈர்ப்பு விசையால் நடைபெறுகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வோம்.

பஞ்ச பூதத்தில் ஈர்ப்பு விசை:
மண்ணால் ஆன கோளை பஞ்ச பூத கலவையாக்கி ஆகாயத்தில், வெப்பத்தில், காற்றில், குளிரில்(நீர்) சுற்று வட்ட பாதையை உருவாக்கி அதில் சுழலும் தன்மையில் இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of