வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகும்.
பஞ்ச பூதங்கள் ஐந்து :
1. ஆகாயம்
2. வெப்பம்
3. காற்று
4. நீர்
5. மண்
என்பதை அறிவோம்.

ஆகாயம்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சமே ஆகாயத்தை முழுமையாக உள்ளடக்கியது.
ஆகாய ஈர்ப்பு விசை:
பிரபஞ்சத்தில் ஆகாய ஈர்ப்பு விசையே அனைத்து கோள்களையும் தனது ஈர்ப்பு விசையோடு இணைத்து இயக்குகிறது.

வெப்பம்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஆகாயத்தை ஒளி மயமாக்க, வெப்பத்தை கொடுத்து வழங்கிட வெப்பம் துணையாகிறது.
வெப்ப ஈர்ப்பு விசை:
பிரபஞ்சத்தில் வெப்ப ஈர்ப்பு விசையே அனைத்து பஞ்ச பூதங்களில் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் பிரதிபலிப்பதற்கும் துணையாகிறது. மேலும் நீரிலிருந்து குளிரை தன்னகத்தே ஈர்த்து பிரபஞ்சத்திற்கு பரவலாக்கம் செய்கிறது.

காற்று:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தை சுழல வைப்பதற்கும், வெப்பம், குளிரை இயல்பு நிலைக்கும் – உச்சகட்ட நிலைக்கும் கொண்டு செல்ல காற்று துணையாகிறது.

காற்றின் ஈர்ப்பு விசை:
பிரபஞ்ச சுழற்சி இயக்கத்திற்கு மூலமாக காற்று அமைந்திருக்கிறது.

நீர்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் நீரானது திரவ, திட, வாயு (நீர், மேகம், குளிர், மழை, பனி, வெந்நீர்) என உருமாறும் தன்மையில் இயங்கிட துணையாக அமைகிறது.

மண்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் கோள் அடிப்படையில் அமைந்திருப்பதை அறிவோம். கோள் அமைப்புக்கள் அனைத்தும் மண்ணை பிரதானமாக அமைந்திருக்கிறது. மண்ணே பஞ்ச பூத கலவைகளே தன்னோடு இணைந்து இயங்கும் இயக்க அமைப்பை இயற்கை கட்டமைப்பாக கொண்டிருக்கிறது. மண்ணோடு பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் தன்மைகளை பொருத்து தான் உயிரியல் வாழ்வாதாரத்தின் அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள இயலும்.

மண் ஈர்ப்பு விசை:
பிரபஞ்சத்தில் மண்ணின் ஈர்ப்பு விசையே பஞ்ச பூத இயக்கங்களை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி உடையதாக அமைந்திருக்கிறது. மண்ணின் ஈர்ப்பு விசையை பொருத்து தான் கோள் ஈர்ப்பு விசை நிகழ்கிறது. கோள் ஈர்ப்பு விசையை பொருத்து தான் கோளின் மைய அச்சு ஈர்ப்பு விசையும், கோள் சுழற்சி இயலும், உயிரியல் வாழ்வாதார அடிப்படை நிகழ்வுகள் அனைத்திற்கும் ஆதாரமாக அமைந்திருப்பதை அறிய முடியும்.

வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை:
வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசையே பிரபஞ்சத்தில் கோள்களின் இயக்கங்களுக்கும், உயிரியல் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை ஆதார அமைப்பாக அமைந்திருக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of