அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஜடம், ஜடமற்றது எனும் இரு மாபெரும் பிரிவுகளாக வாழ்வாதார கட்டமைப்புகள் இயற்கையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஜடம் எனும் கட்டமைப்பில் பஞ்ச பூதங்கள் அடங்கிய இயற்கை கட்டமைப்புகளும், ஜடமற்றது எனும் கட்டமைப்பில் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் அமைப்பு முறைகளாக ஒருங்கினைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ நமக்குள் இருக்கும் தொடர்பு அமைப்பே அறிவாகும்.
பகுத்தறிவு:
நாம் (மனிதர்கள்) இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் வாழ்வதற்கு ‘பகுத்தறிவு’ எனும் மகத்துவம் வாய்ந்த அறிவு வழங்கப்பட்டிருக்கிறது.
மனிதனது அறிவு வளர்ச்சி என்பது 4 (நான்கு) கட்ட பிரிவாக உயர் நிலையை நோக்கி முன்னேறிச் செல்கிறது.
1. சாதாரண மனித அறிவு நிலை.
2. சராசரி மனித அறிவு நிலை.
3. விஞ்ஞான மனித அறிவு நிலை.
4. மெய் ஞான மனித அறிவு நிலை என நான்கு நிலைகளில் வாழ்வியல் கற்றலுமாக, அனுபவித்தலுமாக உயர் நிலையில் வளர்ச்சி அடைகிறது.
1. சாதாரண மனித அறிவு நிலை:
பழக்க வழக்கத்தில் தொடர்பு கொள்ளும் அறிவு.
2. சராசரி மனித அறிவு நிலை:
பழக்க வழக்கத்தில் தொடர்பு கொள்ளும் அறிவை தன்நிலையில் சீரமைக்கும் அறிவு.
3. விஞ்ஞான மனித அறிவு நிலை:
தன்நிலையில் சீரமைத்த அறிவை இயற்கை கட்டமைப்போடு தொடர்பு கொண்டு இயங்கிடும் – இயக்கிடும் அறிவு.
4. மெய் ஞான மனித அறிவு நிலை:
இயற்கை கட்டமைப்போடு இயங்கிடும் – இயக்கிடும் அறிவை இயற்கை கட்டமைப்பாளரோடு இணைத்திடும் அறிவு என கற்றலுமாக, அனுபவித்தலுமாக நான்கு நிலைகளில் வெளிபடுகிறது.
அறிவின் துவக்கமும் – வளர்ச்சியும்:
நமது துவக்க காலத்தில் (ஆதி மனிதர்களின் துவக்க காலம் துவங்கி…… ) உயிரினங்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பழக்கங்களில் இருந்து தான் மனிதர்கள் தங்களது தேவைகளை பழகி பழக்க வழக்கங்களாக மாறி அமைய ஆரம்பித்தது. அவ்வாறு தொடரும் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து தொடரும் போது அவரது தொடர்பு அறிவில் பதிவாகிறது. இவ்வாறு தொடர்ந்து இயங்கும் தொடர்பு அறிவை சாதாரண மனித அறிவு நிலை அல்லது அறிவின் துவக்க நிலை என்று அழைக்கிறோம்.
அறிவின் வளர்ச்சியில் சீர்திருத்தம்:
நமது வாழ்வில் தொடர்ந்து தொடரும் பழக்க வழக்கங்களில் வாழ்வியலுக்கு தேவையான மாற்றங்கள், முன்னேற்றங்கள் போன்றவற்றில் உள்ள திருத்தங்கள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றால் வாழ்வு வளம் பெற உதவுகிறது. இதனால் விவசாயம், உணவு பாதுகாப்பு, இருப்பிட வசதிகள், மருத்துவ பாதுகாப்பு, சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், …… போன்ற பல்வேறு நிகழ்வுகளில் முன்னேற்றம் காண இயலுகிறது. இதனால் மனித நேயம், இயற்கை பாதுகாப்பு …… என மனித வாழ்வாதாரம் முன்னேற்றம் காண்பதற்கு பேருதவியாக அமைகிறது. இந்நிகழ்வுகளின் தொடர்பு அறிவை சராசரி மனித அறிவு நிலை அல்லது அறிவின் நடு நிலை என்று அழைக்கிறோம்.
அறிவு வளர்ச்சியல் முன்னேற்றம்:
மனிதனது தேவைகள் அதிகமாகிற பொழுது எல்லாம் மனிதனது சிந்தனைகள் விரிவடைகிறது. அதாவது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது அல்லது அதற்கு மாற்றாக வேறு என்ன செய்வது பற்றிய நிணைவுகளும், சிந்தித்தலுமாக தனி முயற்சியும்/கூட்டு முயற்சியும் வெளிப்படுகிறது. இது போன்ற வேளைகளில் தான் மனிதனது ஆழமான சிந்தனையுடன் கூடிய இயற்கை தொடர்பு உருவாகிறது. அதே வேளையில் புதிய வடிவங்களுடன் கூடிய இயற்கை தொடர்புகள் (தொழில் நுட்பங்கள்) வெளிப்படுகிறது. அதாவது
* பஞ்ச பூதங்களின் தனி கலவைகளும்,
* தனி கலவைகளுக்குள் உள்ள கூட்டமைப்புகளின் வெளிப்பாடும்,
* பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு கலவைகளும்,
* தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களின் கூட்டமைப்பின் இணைப்புகளும் வெளிப்படுகிறது. …. இது போன்ற இயற்கை கட்டமைப்புகளில் செயற்கை கட்டமைப்புகளின் உருவாக்க இணைப்பு வெளிப்படுகிறது.
இம்மூன்று வகை அறிவின் வெளிப்பாடுகளையும் அறிவியல்/விஞ்ஞானம்/உயர்நிலை அறிவு/ அறிவின் முதல் பருவம் என்றும் அழைக்கிறோம்.
உயர் நிலை அறிவின் (விஞ்ஞானம்) தொடர்பினால் தான் மக்கள் தொகை பெருக்கத்தினால் உண்டாகும் பற்றாக்குறையை (உதாரணமாக: உணவு, மருந்து ……. ) போக்கிட இயலும் என்பதை அறிய வேண்டும். அது போல் மாசுகள், கழிவுகள் ….. போன்றவற்றை சீரமைத்திடவும் உயர்நிலை அறிவியலால் தான் இயலும் என்பதை அறிய வேண்டும். இதற்கும் மேலாக பூமியை கடந்து பிற கோள்களுக்கு செல்லவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் உயர் நிலை அறிவினால் தான் இயலுகிறது என்பதை அறிய வேண்டும்.
ஆனால்
“பிற கோள்களின் இயக்கங்கள், இயற்கை கட்டமைப்புகள் என்பது பூமியில் உள்ள இயற்கை கட்டமைப்பை போல் இல்லை என்றால் அக்கோள்களில் வாழ்வாதாரத்திற்கு உரிய இயற்கை கட்டமைப்பை உருவாக்குவதற்குரிய முறைகளை மெய் ஞானத்தின் வாயிலாகவே அறிய இயலும். ஏனென்றால் இதுவரை உள்ள விஞ்ஞான மார்க்கம் என்பது பூமியில் நாம் அறிந்து வாழ்ந்த முறைகளை சார்ந்திருக்கிறது என்பதை அறியவேண்டும். எனவே தான் விஞ்ஞானத்தின் உயர் நிலையை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதாவது மெய்ஞானத்தை அறிய வேண்டியிருக்கிறது. மெய் ஞானத்தை அறிந்தவர்களையே மெய் ஞானிகள் என்கிறோம்.
மெய் ஞானிகள்:
நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் எவர் ஒருவர் தன் தொடர்பு நிலை, பிரபஞ்ச தொடர்பு நிலை, பிரபஞ்ச படைப்பாளர் தொடர்பு நிலை என இம்மூன்று தொடர்புகளிலும் தொடர்பு கொண்டிருக்கிறாரோ அவரையே மெய் ஞானிகள் என்கிறோம்.
மேலும் அறிவோம்………
Leave a Reply