அனைவருக்கும் வணக்கம்,
பஞ்ச பூதங்களின சிறப்பு
- ஆகாயம் இடைவெளி தருவதில் சிறப்பு.
- காற்று சுழலும் தன்மையில் சிறப்பு
- வெப்பம் வெளிச்சம் – இருளுடன் இணைந்திருப்பது சிறப்பு.
- நீர் முப்பரிமாண நிகழ்வின் தன்மையில் சிறப்பு
- மண் ஈர்ப்பு விசையின் தன்மையில் சிறப்பு.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தையே உலகம் என்று அழைக்கிறோம்.
பஞ்ச பூதங்கள் என்பது ஆகாயம், காற்று, வெப்பம், நீர், மண் என ஐந்தாக ஜடம் எனும் நிலையிலும், தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என ஜடமற்றது எனும் நிலையிலும் குறிப்பிடுகிறோம். பிரபஞ்ச கட்டமைப்பு என்பது மிக பெரும்பாலான நிலையில் பூமி எனும் கோள் அமைப்பை உலகம் என்று அழைக்கிறோம். பூமியையும் சேர்த்து இங்குள்ள அனைத்து கோள்கள், துணை கோள்கள், நட்சத்திரங்கள் என அணைத்தையும் சேர்த்து பிரபஞ்சம் என்று அழைக்கிறோம். இங்கு நாம் பூமியை உலகம் என்று அழைப்பதற்கு காரணமே நாம் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வதற்கு தேவையான அணைத்தும் இங்கு (பூமியில்) அமைந்திருப்பதால் அவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தோம். சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் இப்போது மட்டும் இங்கு மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.அதாவது பூமியை மட்டும் உலகம் என்று சொல்லாமல் அணைத்தையும் பிரபஞ்சம் அல்லது உலகம் என்று சொல்வோம் என்றால் அதற்கு உரிய காரணம் இருக்கிறது. எவ்வாரெனில் சந்திரனின் ஒளி பூமியின் வாழ்வாதாரத்திற்கு அவசியம் தேவைபடுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
https://soundcloud.com/liv-in-490729355/universeresearch-m4a