அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் சுழற்சி முறையில், ஈர்ப்பு விசையில் இயங்குகிறது.
பிரபஞ்சத்தின் சுழற்சி இயலும், ஈர்ப்பு விசையின் தன்மையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. அதாவது பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் (கோள்கள், துணை கோள்கள், நட்சத்திரங்கள்) குடும்ப அமைப்புகள் அனைத்தின் சுழற்சி இயலுக்கும், ஈர்ப்பு விசையின் தன்மைக்கும் அடிப்படை அமைப்பாக அமைந்திருக்கிறது. அதேசமயம் கோள் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுழற்சி இயல் முறையும், ஈர்ப்பு விசையின் தன்மையுமாக அமைந்திருக்கிறது.
பஞ்ச பூத ஈர்ப்பு விசையின் துணை கொண்டு தான் கோள் ஈர்ப்பு விசை நிகழ்கிறது. அதாவதுகோள் ஈர்ப்பு விசை நிகழ்வதற்கு அக்கோளில் அமைந்துள்ள பஞ்ச பூத கலவைகளின் உள் – வெளி இயக்கமே ஆதார அமைப்பாக அமைந்திருக்கிறது.
கோள் ஈர்ப்பு விசையின் துணை கொண்டு தான் கோள் மைய அச்சின் சுழற்சி இயல் நடைபெறுகிறது.
இருவகை இயக்கம்:
கோள் மைய அச்சு சுழற்சி இருவகை அமைப்பு இயக்கமாக அமைந்திருக்கிறது.
1. கோள் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளுதல்.
2. கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல் என இருவகை பிரிவுகளில் ஒரே அச்சில் இயங்குகிறது.
1. கோள் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளுதல்:
கோள் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு பஞ்சபூதங்களின் உள்கட்டமைப்பும், மைய அச்சின் ஈர்ப்பு தன்மையும் (விசை) காரணமாக அமைகிறது.
2. கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்:
கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்கு பஞ்சபூதங்களின் வெளிகட்டமைப்பும், மைய அச்சின் ஈர்ப்பு தன்மையும் காரணமாக அமைகிறது.
மைய அச்சு சுழற்சி இயல்:
கோள் மைய அச்சு சுழற்சி இயல் என்பது இலகுதல், இருகுதல் எனும் இருவகை தன்மையில் நிகழ்கிறது.
அதாவது,
1. இலகுதல் முறையில் சுழற்சி இயல்:
கோள் மைய அச்சு சுழற்சி இயல் இலகுதல் முறையில் சுழற்சி நிகழும். இம்முறையில் உயிரியல் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வாதாரம் அமைக்கப்படுவதற்கு உரிய அனைத்து சாத்திய கூறுகளும் அமைந்திருக்கும்.
இம்முறையில் பஞ்ச பூத கலவையின் ஈர்ப்பு விசை தன்மை மண்ணின் மேற்பரப்பிலும் – உட்பரப்பிலும் கோள் ஈர்ப்பு விசைக்கு தேவையான அளவு அமைந்திருக்கும்.
2. இருகுதல் முறையில் சுழற்சி இயல்:
கோள் மைய அச்சு சுழற்சி இயல் இருகுதல் முறையில் சுழற்சி நிகழும். இம்முறையில் உயிரியல் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வாதாரம் அமைக்கப்படுவதற்கு உரிய அனைத்து சாத்திய கூறுகள் அமைந்திருக்காது. மாறாக இம்முறையில் பிரபஞ்ச நுண்ணுயிர்கள் மண்ணின் ஆழமான பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
இம்முறையில் பஞ்ச பூத கலவையின் ஈர்ப்பு விசை தன்மை மண்ணின் மேற்பரப்பிலும் – உட்பரப்பிலும் கோள் ஈர்ப்பு விசைக்கு தேவையான அளவு அமைந்திருக்காது.
கோள் மைய அச்சின் துணை கொண்டு தான் கோள் சுழற்சி இயல் நடைபெறுகிறது.
மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
வணக்கம், இம்மகத்தான வெளியீட்டிற்கு நன்றி, மைய அச்சின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு ஒரு கோள், தன்னை தானேவும், தன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி கொள்வதற்கும், அடிப்படையாக அமையும் கட்டமைப்பை விளக்குவது விஞ்ஞான உலகத்திற்கு பேருதவியாக அமைகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், “ஈர்ப்பு விசையின் துணை கொண்டு தான் கோள் மைய அச்சின் சுழற்சி இயல் நடைபெறுகிறது” இக்கருத்தும், பின் தொடர்ந்து எழக்கூடிய, கருத்தின் வடிவமாக, “கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்கு பஞ்சபூதங்களின் வெளிகட்டமைப்பும், மைய அச்சின் ஈர்ப்பு தன்மையும் காரணமாக அமைகிறது.” கோள் மைய அச்சு சுழற்சி தன்மையை தெளிவாக விளக்கி, பஞ்சபூதங்களின் மகத்துவ பணியை தெளிவுடன் வெளிப்படுத்துகிறது. இதன் வழி, பஞ்சபூதங்களின் மறுபரிணாம நிலை ஒன்று உள்ளதென்று தெரிகிறது, அதற்கான நிலையை பூமியில் இருந்து அறியப்படும் விஞ்ஞான பார்வைக்கொண்டு முழுமையும் அறிந்து கொள்ள இயலாதென்றும் புரிகிறது. அதற்கான பதிலின் நிலை ஒன்று உள்ளதென்பதை குறித்த பல்வேறு… Read more »