அனைவருக்கும், வணக்கம்.
சந்திரனில் மனிதன் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போது தெரிந்து கொண்ட முதல் விசயம் இது. சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை பூமியில் இருப்பது போல் இல்லை என்று தெரிந்து கொண்டது. அதுபோலவே வெப்பம் அதிகமாக இருந்தது, வெப்பக்காற்று வீசியது. காற்று சுவாச இயலுக்குஏற்புடையதாக இல்லாது இருந்தது, நீர் நிலைகள் கண்களுக்கு எட்டிய வரை தெரியாது இருந்தது போலவே தாவரங்கள், உயிரினங்கள் எதுவும் தெரியவில்லை. இது போன்ற சூழ்நிலையில் தான் சந்திரனில் இருந்து மண்ணை ஆய்வியலுக்காக எடுத்து வந்தனர்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் எங்கு வாழ நிணைத்தாலும் அதற்கு முதல் தேவையானதாக இருப்பது,
நாம்
நிற்பதற்கு,
நடப்பதற்கு,
உட்காருவதற்கு,
உறங்குவதற்கு …… என தேவையானதாக இருப்பது மண் எனும் இருப்பிடமே ஆகும்.
மண் எனும் இருப்பிடம்,
* மேடு – பள்ளமாக இருக்கலாம்.
* குண்டும் – குழியுமாக இருக்கலாம்.
* மண்ணால் நிறைந்த இடமாக இருக்கலாம்.
* மணலால் நிறைந்த இடமாக இருக்கலாம்.
* பாறைகள் நிறைந்த இடமாக இருக்கலாம். …… ஆனால் நடந்தால், ஓடினால் ……. அம்மண்ணானது நம்மை இயல்பாக தாங்குகிற நிலையில் அமைந்திருக்க வேண்டும். அதாவது நாம் நடக்கிற போது, ஓடுகிற போது (அடி மேல் அடி எடுத்து வைக்க) அம்மண்ணானது இயல்பாக உதவ வேண்டும். அவ்வாறு இயல்பாக தாங்குகிற மண்ணின் நிலையானது மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்லாது உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் ஏற்புடையதாக அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு மண்ணின் ஈர்ப்பு விசையே காரணமாக அமைகிறது.
மண்ணின் ஈர்ப்பு விசையானது பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளுக்கும், மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் உதவியாக அமைய வேண்டும். அவ்வாறு அமைந்திருக்கும் ஈர்ப்பு விசையை கோள் ஈர்ப்பு விசை என்கிறோம்.
கோள் ஈர்ப்பு விசை:
கோளின் மண்ணில் அமைந்திருக்கும் (மண்ணின் மேற்பரப்பிலும், உட்பரப்பிலும்) ஈர்ப்பு விசையானது பஞ்ச பூதங்களின் தொடர்புகளோடு இனைந்து கோளுக்கு உள்ளும், வெளியும் இயங்குகிற தன்மையை கோள் ஈர்ப்பு விசை” என்கிறோம்.
கோள் ஈர்ப்பு விசை இரு வகை தொடர்புகளில் இயங்குகிறது.
1. ஜட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை.
2. ஜட – ஜடமற்ற உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை
என இரு வகை இயக்க தொடர்புகளில் கோள் ஈர்ப்பு விசை இயங்குவதை அறியலாம்.
ஜட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை:
பஞ்ச பூதங்களால் இணைந்து இயங்குகிற கோள்களில் பஞ்ச பூதங்கள் ஐந்தும், அக்கோள் நுண்ணுயிர்கள் மட்டுமே உள்ள இயற்கை கட்டமைப்பை ஜட- உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை என குறிப்பிடலாம்.
ஜட – ஜடமற்ற உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை:
பஞ்ச பூதங்களால் இணைந்து இயங்குகிற கோள்களில் பஞ்ச பூதங்கள் ஐந்தும், கோள் நுண்ணுயிர்களும், ஜட மற்ற உயிரினங்களும் (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) இணைந்து உள்ள இயற்கை கட்டமைப்பை ஜட – ஜடமற்ற உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை என குறிப்பிடலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஜட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசையே கோள்கள் முழுவதிலும் (பூமியை தவிர) இருப்பதாக நினைக்கிறோம்.
நாம் வாழும் இந்த பூமியில் மட்டும் ஜட – ஜடமற்ற உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை அறிய இயலும்.
இந்நிகழ்வை (ஜட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை) தான் சந்திரனில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் வாயிலாக அறிய இருக்கிறோம். அதாவது இதுவரை சந்திரனில் நடந்திருக்கிற ஆய்வுகளில் பஞ்ச பூத இயற்கை தொடர்பு கட்டமைப்பில் கோள் ஈர்ப்பு விசை (சந்திர மண்ணின் மேற்பரப்பில்) குறைவு, சுவாச இயல் காற்று பற்றாக்குறை, மண், வெப்பம், குளிர், சுழற்சி இயல் கால அளவுகள் போன்றவற்றை அறிந்து கொண்டிருக்கிறோம்.
சந்திரனில் பிற பஞ்ச பூதங்களின் தொடர்புகள், சந்திரனில் உள்ள நுண்ணுயிர்கள் போன்றவற்றை அறிய வேண்டியிருக்கிறது. இந்நிலையில் தான் சந்திரனில் ஜட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை என்பதன் ஆய்வுகள் நிறைவு அடையும்.
சந்திரனில் மேற்கண்ட ஆய்வுகளை (ஐட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை) முறையாக மேற்கொண்ட பிறகு தான் சந்திரனில் வாழ்வாதாரத்திற்கு உரிய இயற்கை கட்டமைப்பை பற்றிய முழு விபரங்களும் புரியவரும். எனவே சந்திரனில் வாழ்வாதார இரகசியத்தில் உள்ள சாதக, பாதக, தீர்வுகளை அறிவோம்.
சாதகம்:
பூமியில் இருந்து சந்திரனை காணுகிற போது வாழ்வது எளிமை என்று தோன்றுகிறது. சந்திரனில் விஞ்ஞானிகள் நேரடியாக ஆய்வுகள் மேற்கொள்கிற போது சந்திரனில் மனிதர்களின் (விஞ்ஞானிகள்) கால் பதிந்தது சாதகமான விஷயம் தான் என்பதை அறிவோம். அது போலவே வெப்பம், குளிர், சுழற்சி கால அளவுகள் போன்றவற்றை அறிந்ததும், விஞ்ஞானிகள் வாயிலாகவும், சேட்டிலைட் வாயிலாகவும் ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்வது சிறப்பானது (பல்வேறு விஷயங்கள் அறியும் வாய்ப்புகள்) என்பதை அறிவோம்.
பாதகம்:
சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்குவதற்கு முயற்சி செய்கிற நாம் அங்குள்ள இயற்கை கட்டமைப்புகளை கவனிக்க வேண்டும். அதில் நமது கற்றலும், நமது அனுபவமும் பூமியின் இயற்கை கட்டமைப்பு முறைக்கும், சந்திரனின் இயற்கை கட்டமைப்பு முறைக்கும் உள்ள முறைகளை, முரன்பாடுகளை கவனிக்காமல் ஆய்வுகளை மேற்கொள்வதும், தீர்வுகளை நாடுவதும் நிறைவான விளைவுகளை தராது என்பதை அறியாதிருப்பது பாதகமான செயலாகும். உதாரணமாக பகல் – இரவு கால அளவுகள், வெப்பம் – குளிர் சீதோஷ்ண நிலைகள், கோள் ஈர்ப்பு விசையின் தன்மைகளை அறிந்தும் அதை சீரமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளமல் அங்கு வேறு சில ஆய்வுகளை மேற்கொள்வது…… போன்றவற்றை அறிவோம்.
தீர்வுகள்:
சந்திரனில் நமது (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) வாழ்வாதாரத்தை உருவாக்கிட முயற்சி செய்கிறோம் என்றால் முதலில் அங்குள்ள தடைகளை அறிவோம், அதை சீரமைக்க முயற்சி செய்வோம். அதில் முதலில் கோள் ஈர்ப்பு விசையை சீரமைப்போம். அதாவது
கோள் ஈர்ப்பு விசை இரு வகை தொடர்புகளில் இயங்குகிறது.
1. ஜட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை.
2. ஜட – ஜடமற்ற உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசை
என இரு வகை இயக்க தொடர்புகளில் கோள் ஈர்ப்பு விசை இயங்குவதை அறியலாம். அதில் முதலில் ஜட – உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசையை சீரமைக்க இயற்கை இயல் கட்டமைப்பை முறைபடுத்துவோம். பிறகு ஜட – ஜடமற்ற உயிரியல் தொடர்பு கோள் ஈர்ப்பு விசையை சீரமைக்க உயிரியல் வாழ்வாதாரத்திற்கான முறைகளில் ஈடுபடுவோம்.
எனவே நாம் இங்கிருந்தே நமது ஆய்வுகளை தொடர்கிறோம்.
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
வணக்கம் சுவாமி,
சந்திரனில் நுண்ணுயிர்களும் கோள் ஈர்ப்பு விசைக்குமான மிக மிக முக்கியமான தொடர்பு இன்று தோன்றி, புரிய வந்தது.
வழிகாட்டுதலுக்கு, நன்றி நன்றி சுவாமி.
நன்றி வணக்கம்,
லிவின்
சந்திரன் துணை ஆராய்ச்சியாளர்
ourmoonlife.com