அனைவருக்கும் வணக்கம்,
மழை:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பிரபஞ்ச இயற்கை பரிமாற்ற அற்புதங்களுள் ஒன்று மழையாகும். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் பஞ்ச பூதங்களோடு இணைந்து இயங்குகிறது என்பதை அறிய வேண்டுமானால் அக்கோளில் மழை, பனி, மேகம், தென்றல் போன்ற இயக்கங்களின் செயற்பாடுகள் நடைபெறுதல் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
மழை பொழிதலின் அவசியம்:
ஒரு கோளில் மழை பொழிதல் என்பது அக்கோளின் இயற்கை கட்டமைப்பு பாதுகாப்பை மையப்படுத்தியே நிகழ்கிறது. கோளில் நிலவும் வெப்பத்தை சீரமைப்பதற்கு மழை பொழிகிறது. கோள் கட்மைப்பு பாதுகாப்பை கருதியும், சுழற்சி இயக்க பாதுகாப்பை கருதியும் மழை பொழிகிறது. கோளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரியல் (நுண்ணுயிர்கள், பிரபஞ்ச நுண்ணுயிர்கள்) வாழ்வாதார பாதுகாப்பை கருதியும் மழை பொழிகிறது. கோளில் இயற்கையாக அமைந்திருக்கும் தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதார பாதுகாப்பை கருதியும் மழை பொழிகிறது. கோள்களுக்கு இடையிலும், கோள்களை சுற்றிலும் உள்ள இடைவெளிகளில் தட்ப – வெப்பம் சம நிலை உருவாகிட மழை பொழிகிறது.
ஒவ்வொரு கோளுக்கும், கோளின் சுற்று வட்ட பாதை அமைப்புகளுக்கும், கோள் பாதுகாப்பு கவச அமைப்புகளுக்கும், கோள் ஈர்ப்பு விசை, பிரபஞ்ச ஈர்ப்பு விசை, மின்காந்த அலைகளின் சீரமைப்பு முறைகள் …. போன்ற பல்வேறு இயற்கை பாதுகாப்பு கட்டமைப்புகளின் தேவைகளை கருதியும் மழை பொழிகிறது. இயற்கை கட்டமைப்பில் இணைந்து இயங்கும் பாதுகாப்பு தன்மைகளுக்கு பாதுகாப்பாக மழை பொழிகிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்தும் இணைந்து இயங்கும், இயக்கும் வெளிப்பாடாகவே மழை பொழிகிறது.
பிரபஞ்ச கட்டமைப்பில் கோள்கள் வெப்ப தாக்கத்தால் சிதைந்து போகாமல் பாதுகாக்கும் நிகழ்வாகவே மழை பொழிகிறது.
மழை கால அளவில் மாற்றங்கள்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் மழை பொழியும் கால அளவுகள் என்பது கோடை காலம், மழை காலம், குளிர் காலம், பனிக்காலம் என்றில்லாமல் மாறி மாறி அமையும் என்பதை அறிவோமா!
மழை கால அளவுகள் மாறி அமைவதற்கு மூல காரணமாகவும், முதன்மை காரணமாகவும் அமைவது பிரபஞ்ச சுழற்சி இயலில் பஞ்ச பூத சுழற்சி இயலே காரணமாக அமைகிறது.
பிரபஞ்ச சுழற்சி இயலில் கோள் சுழற்சி இயலோடு பஞ்ச பூத சுழற்சி இயலுக்கு, சுழற்சி இயல்புக்கு ஏற்றவாறு மழை பொழிகிறது.
பிரபஞ்சத்தில் மழை காலம் மாறி அமைவதற்கு கோள் சுழற்சி இயலோடு பஞ்ச பூத சுழற்சியின் இயக்கமும், (கோள் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும், தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதும்) இணைந்து இயங்குவதுமே மேலும் காரணமாக அமைகிறது.
நாம் மிக நீண்ட காலமாக பூமியில் வாழ்ந்து வருகிறோம். பூமியில் வாழ்ந்து வரும் மனித வாழ்வியலுக்கு இயற்கையில் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் ….. என இயற்கை கட்டமைப்பு பரந்து விரிந்து இருக்கிறது. துவக்க கால மனித வாழ்வியலுக்கு நீர் ஆதாரத்தின் தேவைகள் மிகவும் பிரமாண்டமானது என்பதை அறியும் சூழ்நிலைகளும், அவசியமும் அவ்வளவாக வெளிப்படவில்லை.
மனிதனது துவக்க கால நீர் ஆதாரமாக மழையே பூமியில் தேவையான அளவு இருந்தது.
மக்கள் தொகை அதிகரிப்பு உருவாகிற போது மழை நீர் சேகரிப்பு உதவியாக அமைந்தது. அதேசமயம் மழை கால அளவில் மாற்றங்கள் உருவாகிற போது நீர் ஆதார தேவைகளை பயன்படுத்தும் முறைகளை துரிதபடுத்துவோம்.
கோளை சுற்றிலும், கோள் பாதுகாப்பு கவசத்தை சுற்றிலும் உள்ள மாசுக்களை சுத்திகரிப்பு செய்திடவும் மழை பொழிகிறது. இயற்கை கட்டமைப்பு தம்மை தாமே சீரமைத்து கொள்வதற்கும் மழை பொழிகிறது.
நீரின் பரவலாக்கம் கோளை சுற்றிலும் பரவிட மழை பொழிகிறது.
இயற்கை கட்டமைப்பில் உயிரியல் வாழ்வாதாரம் தொடர்ந்து வாழ்ந்திட இயற்கை தரும் அற்புத பரிசு மழையாகும்.
மழை நீரே உயிரியல் வாழ்வாதாரத்தின் உயிர் நீராக அமைவதால் நீரின் முக்கியத்துவத்தை அறிந்து, பயன்படுத்தும் முறைகளை முறையாக அறிவோம். முறையாக பயன்படுத்துவோம்.
நன்றி வணக்கம்.
Leave a Reply