அனைவருக்கும் வணக்கம்,
“மனித அறிவின் இரண்டாம் நிலை வெளிப்பாடு”
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் மிக நீண்ட காலமாக பூமி எனும் கோள் அமைப்பில் வாழ்ந்து வருகிறோம். பூமி எனும் கோள் அமைப்பு பகல் – இரவு அமைப்பில் வெளிச்சமும் – இருளுமாக அமைந்திருக்கிறது. பூமியில் வாழ்ந்து வருகிற உயிரியல் (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) சமுதாயத்திற்கு பகலில் சூரிய வெளிச்சமும், இரவில் சந்திரனின் வெளிச்சமுமே வாழ்வாதார ஒளி மயமாக, வழி காட்டியாக, ஆதார சக்தி மயமாக விளங்குகிறது.
கோள் சுழற்சி நிகழ்வு:
சந்திரனின் ஒளி சுழற்சி நிகழ்வு: சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை மையப்படுத்தி சுற்றி வருகிறது. சூரியனை சுற்றிலும் அமைந்திருக்கும் ஒவ்வொரு கோளும் தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதலும் அதேசமயம் தம்மை தாமே சுற்றி வருதலுமாக அமைந்திருக்கிறது. சூரியனை சுற்றி வருகிற ஒவ்வொரு கோளும் வேறு வேறு கால அளவுகளில், வேறு வேறு தூர அளவுகளில் சுற்றி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
இரு வகை கோள் சுழற்சி நிகழ்வு:
சூரியனை சுற்றி வருகிற கோள்கள் அமைப்பில் கோள்கள், துணை கோள்கள் என இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. இதில் கோள்கள் என்பது மாபெரும் இயற்கை கட்டமைப்பு ஆகும். துணை கோள் என்பது கோள் சுற்று வட்ட பாதையோடு இணைந்து சுற்றி வருகிற கோள் அமைப்பு ஆகும். கோள் சுற்று வட்ட பாதையோடு இணைந்து சுற்றி வருவதால் இக்கோள் அமைப்பை துணை கோள் என்கிறோம்.
சந்திரன் (கோள்) சுழற்சி நிகழ்வு:
பூமியின் சுற்று வட்ட பாதையோடு இணைந்து சந்திரன் சுற்றி வருவதால் சந்திரனை பூமியின் துணைக்கோள் என்கிறோம்.
சந்திரன் தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருகிற அதேசமயம் தம்மை தாமே சுற்றி வருகிறது.
சந்திரன்: சுழற்சி கால அளவில் சிறப்பு.
சூரியனை சுற்றி வருகிற கோள்கள்/துணை கோள்கள் அமைப்பில் பூமியோடு இணைந்து சுற்றி வருகிற சந்திரனும் தம்மை தாமே முழுமையாய் சுற்றி வருகிறது.
மனித அறிவின் பிரமாண்ட அமைப்பில் பூமியை கடந்து சந்திரனே முதலில் அறிந்த கோள் (துணை கோள்) அமைப்பாகும். நடைமுறை மனித விஞ்ஞான அறிவிற்கு சவாலாக அமைந்திருக்கிற விசயமாகும். அதேசமயம் பிரபஞ்சமாய் அமைந்திருக்கும் பேரண்டத்தில் மனிதனின் பேரறிவை வெளிப்படுத்துகிற முதல் நிகழ்வாகும்.
சந்திரனை அறிவது மிகப்பெரிய சவாலாக இருப்பதற்கு காரணம் பூமியின் இயற்கை கட்டமைப்பை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளாதிருப்பதுவே காரணமாகும். ஏனெனில் பூமியின் இயற்கை கட்டமைப்பில் பஞ்ச பூதங்களின் தொடர்புகள் (மண்ணின் உட்புறம் – மேற்புறம்) தொடர்பு கொண்டிருக்கும் முறைகளை முழுமையாக அறியாதிருப்பதாகும். மேலும் பஞ்ச பூதங்களின் தொடர்புகளால் உருவாகும் இயக்கங்களின் இயக்கங்களால் நிகழும் புவி ஈர்ப்பு விசையின் முறையை அறியாததும் ஒரு காரணமாகும்.
இரண்டாவதாக புவி ஈர்ப்பு விசையின் தொடர்புகளோடு பூமியின் மைய அச்சு தொடர்பு கொண்டிருப்பதை அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை அறிவது அவசியமாகும்.
மூன்றாவதாக வெப்பத்தின் ஈர்ப்பு விசை நீரின் இயக்கங்களோடு தொடர்பு கொண்டிருக்கும் முறையானது போல் சந்திரனின் தொடர்புகளை நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாதிருப்பதும், ….. ஆகும்.
சந்திரனின் ஒளி சுழற்சி நிகழ்வு:
சந்திரனின் சுழற்சி கால அளவுகளின் இரு நிகழ்வுகளும் ஒரே அளவாக அமைந்திருப்பது என்பது சூரியனை சுற்றி வருகிற கோள்கள் அமைப்பில் சந்திரனின் கால அளவில் மாத்திரமே இருப்பது தனிச்சிறப்பாகும். அதாவது சந்திரன் தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருகிற கால அளவும், தம்மை தாமே சுற்றி வருகிற கால அளவும் (தோராயமாக 28 நாட்கள்) ஒரே அளவாக அமைந்து இருக்கிறது. மேலும், பூமியில் இரவு நேர வழி காட்டுதலுக்கும், உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக அமைந்திருப்பது போல் சந்திரனில் அமையாதிருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா என்பதை அறிவது அவசியம் ஆகிறது.
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
இப்பகுதியை படிக்கும் பொழுது, என்னிடம் தோன்றிய நினைவுகளை பதிவிடுகிறேன் “சந்திரனை அறிவது மிகப்பெரிய சவாலாக இருப்பதற்கு காரணம் பூமியின் இயற்கை கட்டமைப்பை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளாதிருப்பதுவே காரணமாகும். ஏனெனில் ………..” “எளிமையாக புரிந்து கொள்ளாதிருப்பது, இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து கொண்டிருப்பது, இங்கு பூமியில் உருவெடுக்கும் அறிவியல் வளர்ச்சி மனித சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி அமைகிறது. எளிமை படுத்திக்கொள்ள வேண்டிய பயன் இக்கட்டமைப்பில் உருவெடுக்கவில்லை. ஒரு கோள் கட்டமைப்பை விட்டு சென்று வாழ்வாதாரத்தை உருவாக்க முயலும் பொழுது, எளிமை படுத்த படவேண்டிய அவசியமும் தேவையும் உணர இயலுகிறது. இதை உங்கள் ஆராய்ச்சி முறை வழியே நான் அறிந்துகொண்டேன். அதாவது, எளிமையாக குறிப்பிட வேண்டும் என்றால், வாழ்வாதாரத்தின் அடிப்படையான வாழ்வியலின் இருப்பிடத்தை புரிந்து கொண்டு உருவாக்கிட, இயற்கையின் அடிப்படையான, மண், நீர், காற்று இவையோடு ஆகாயமும் வெப்பமும் இணைந்து பணியாற்றும் முறைகளை எளிமையாக அறிந்து. அக்கட்டமைப்போடு இணைந்து பணியாற்றும் முறையை… Read more »