அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்ச இயக்க கட்டமைப்பில், நம்மை சுற்றி உள்ள நிகழ்வுகளை அறிந்தால் தான் நமது அடிப்படை தேவைகள் என்ன என்பதும் அவற்றை பூர்த்தி செய்து கொள்ளும் முறைகள் எவ்வாறு என்பதையும் அறிய இயலும்.
ஆதி கால மனிதர்களின் வாழ்வாதாரம் என்பது தங்களது ஒவ்வொரு தேவைகளையும் உயிரினங்களிடம் இருந்தும், இயற்கையிடம் இருந்தும் கற்றவை என்பதை அறிவோம்.
மனிதர்களது தேவைகளாய் அமைந்திருந்தது,
- ,தாகத்திற்கு நீரும் – நீர் அருந்தும் முறைகளும்,
- பசிக்கு உணவும் – உணவு அருந்தும் முறைகளும்,
- உட்காருதலும், நடத்தலும், ஓடுதலும் – தமது இயக்கமும், தேவைகளும்.
- உறங்கிட இடமும் – உறங்கிடும் முறைகளும்,
- இரவில் பார்வையும் – வெளிச்சத்தை தேடிய முறைகளும்,
- காயத்திற்கும், நோய்க்கும் மருந்து – தேடிய, பயன்படுத்திய முறைகளும்,
- காதல்/காம வசப்பட்டதும் – குழந்தைகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ததும்,
- மழை/பனியில்/நணைந்ததும் – பாதுகாப்பான இடம் தேடியதும்,
- உயிரினங்களின் போராட்டமும், சமாதானமும் – ரசித்ததும், பயந்ததும், தைரியத்தை வளர்த்து போராடியும் வாழ முயற்சிப்பதும்,
- மனிதர்கள் – மனிதர்களோடு போராடியதில் – வெற்றியும்/தோல்வியும்/சமாதானமும் மேற்கொள்ள அறிந்ததும்,
- சிரித்தலும், அழுதலும் – உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் அறிந்து கொண்டதும்,
- பேசுதலும், எழுதுதலும் – தொடர்புகளை அறிவதும், தொடர்வதும்,
- பகலில் சூரியன் தோன்றுதலும், மறைதலும் – கூடுதலான/குறைவான வெப்பத்தில் தற்காத்து கொள்ளும் முயற்சிகளை அறிதலும்,
- இரவில் சந்திரனும், நட்சத்திரங்களும், இருலும் – பயமும் – தைரியமும், வெளிச்சம் தேடி முயற்சி செய்ததும்,
- இயற்கையும், செயற்கையும் – வாழ்தலும் – வாழ்வாதாரத்தை கற்றலும், கற்றுக்கொடுத்தலும்,
- கலைகளும், தொழில் நுட்பங்களும் – அறிவியலாய் (விஞ்ஞானம்) வாழ்வாதாரத்தை விரிவாக்கியது.
- பக்தியும், ஞானமும் – தம்மையும், உலகையும், உலகை படைத்தவரையும் அறியவும், அமைதியாய், அன்புடன் வாழவும் முயற்சிப்பதும்,
- இயங்கா நிலையும், இயங்கும் நிலையும், இறந்த நிலையும் – துவக்கத்தையும் (பிறப்பு), வாழ்வியலையும் (வளர்ச்சி), முடிவையும் (இறப்பு) அறிவது …….. .
உயிரினங்களிடம் வாழ கற்றுக்கொண்ட மனிதர்கள், தங்களது அறிவின் துணை கொண்டு வாழ்வதும், வாழ வழி காட்டுவதாமாக பூமியில் வாழ்ந்து பழகிய மனிதர்கள் முதல் முறையாக சந்திரனில் வாழ முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.
“தேவைகளின் கற்றலோடு எப்புறமும் இணைதலே விஞ்ஞானமாகும்”.
நன்றி, வணக்கம்.
Leave a Reply