பிரபஞ்சம் சராசரி மனிதர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

மனித உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை சராசரி மனிதர்களின் வாழ்வில் இருந்து தான் பல்வேறு நிகழ்வுகள் சீரமைக்கப்பட்டு கொண்டே வருகிறது. அதாவது சராசரி மனிதர்களை எதார்த்த மனிதர்கள் என்று கூட கூறலாம்.

மனித வாழ்வியல் வளர்ச்சியை அறிவோம்.

“சாதாரண மனிதர்களின் அனுபவ வளர்ச்சியே சராசரி மனிதர்களை உருவாக்குகிறது”.

“சராசரி மனிதர்களின் அனுபவ வளர்ச்சியே விஞ்ஞான மனிதர்களை உருவாக்குகிறது”.

“இம்மூவகை மனிதர்களின் அனுபவ வளர்ச்சியே மெய் ஞான மனிதர்களை உருவாக்குகிறது “.

பிரபஞ்சத்தை அறிவதில் சராசரி மனிதர்களை எதார்த்த மனிதர்கள் என்று கூறுகிறோம். இதன் காரணம் யாதெனில் ‘இருப்பதை இருப்பதாகவே அறிபவர்கள்’ ஆவர். அதாவது தாங்கள் காண்பது, கேட்பது, அறிவது, சொல்வது, தெரிந்து கொள்வது உணர்வது ….. என எதுவாக இருந்தாலும் அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உடையதாக அமைந்திருக்கும்.

எதார்த்த மனிதர்கள் அறிந்து கொள்ளும் விசயங்களை ஒரு உதாரணத்தின் வாயிலாக அறியலாம்.

அதாவது,
மேகம் ஆகாயத்தில் செல்கிற காட்சியை காண்கிற போது:

  • ஒருவரது பார்வையில் மேகம் நகர்கிறது என்பார்.
  • ஒருவரது பார்வையில் மேகம் வெளிப்படுவதால் குளிர்சிகரமான சூழ்நிலை உருவாகிறது என்பார்.
  • ஒருவரது பார்வையில் மேகம் பல்வேறு நிறங்கள் (நீலம், கருநீலம், கருப்பு, வெள்ளை …..) என்பார்.
  • ஒருவரது பார்வையில் மேகம் வெளிப்படுவது சூரியனின் கடமை என்பார்.
  • ஒருவரது பார்வையில் நீரின் பரிணாம சுழற்சி இயல் என்பார்.
  • ஒருவரது பார்வையில் மண் மீது சூரியனின் வெப்பம் படருவதால் நிகழ்வதே மேகம் என்பார்.

இது போல் ஒரு நிகழ்விற்கு பல்வேறு காரணங்கள் வெளிப்படும்.

சராசரி மனிதர்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மனித சமுதாய வளர்ச்சிக்கு தேவையான நிணைவுகளின் சங்கமம் இயல்பாகவே உருவாகும்.
சராசரி மனிதர்களின் நிணைவு சங்கமங்களின் வெளிப்பாடுகளில் இருந்து தான் விஞ்ஞான மூலம் பிறக்கிறது. அதாவது நிணைவுகளின் சங்கம செயல்கள் இயற்கை கட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உராய்கிற போது / மோதுகிற போது உருவாவது தான் விஞ்ஞான இயக்கம் உருவெடுப்பதற்கு அடிப்படை காரணமாகும்.

விஞ்ஞான மூலம் என்பது ஒரு செயலுக்குரிய பல்வேறு நிணைவுகளின் கூட்டமைப்பை இயற்கை கட்டமைப்பில் உள்ள உயிரியல் (ஜட உயிர், ஜடமற்ற உயிர்) மூலத்துடன் இணைக்கப்படுகிற போது ஏற்படுகிற மாற்றமே ஆகும்.

சராசரி மனிதர்களின் நிணைவு சங்கமங்களின் ஒருங்கிணைப்பு நிகழவில்லை என்றால் இயற்கையில் விஞ்ஞான கட்டமைப்பு உருவெடுக்காது என்பதை அறிய வேண்டும்.

அறிய வேண்டியதை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of