நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பல்லாயிரம் கோடி கட்டமைப்புகளை உடையது. இதில் பல இயற்கை கட்டமைப்புகளும், உயிரியல் கட்டமைப்புகளும் பல பல கால அமைப்புகளும், சூழ்நிலை அமைப்புகளும் கோள்கள் கட்டமைப்புகளும் , நட்சத்திர கட்டமைஅமைப்புகளும், பல பல உயிரியல் அமைப்புகளும் அதில் பல பல வகையான பரிணாம வளர்ச்சியல் முறைகளும் பல பல சுழற்சியல் முறைகளும் பிரபஞ்ச சுற்றுவட்ட பாதையில் சுழன்று இயங்கும் இயக்கும் முறைகளாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வாதார முறைகளில் பல பல வகைகள், பல பல விதங்களில் அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட கால சூழ்நிலைகளில் மாத்திரமே வாழ்பவைகள், குறிப்பிட்ட இயற்கை சார்ந்த சூழ்நிலைகளில் மாத்திரமே வாழ்பவைகள், பிரபஞ்சத்தில் உள்ள கோள்களில் சில வகை கட்டமைப்புகளில் மாத்திரமே வாழ்பவைகள் என பல வகையான மாறுபாடுகளில் பலவகையான முரண்பாடுகளில் வாழ்பவைகள் எனவும், எல்லா வகையான சூழ்நிலைகளிலும், எல்லா வகையான இடங்களிலும் வாழ்பவைகள் என உயிரியல் கட்டமைப்புகள் இயற்கை கட்டமைப்பில் பல பல வகைகளாக பல பல முறைகளாக என இயற்கை கட்டமைப்பில் ஏராளமான அடிப்படையில் பிரபஞ்ச இயக்கம் அமைந்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கை கட்டமைப்பில் சுழற்சி சுழல் ஈர்ப்பு விசையின் வாயிலாக பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும், ஒவ்வொரு நட்சத்திரமும் தத்தமது சுற்றுவட்ட பாதையில் தத்தமது மைய அச்சில் சுழன்று வருகிறது. அது போலவே ஒவ்வொரு உயிரினமும் தத்தமது வாழ்வியலுக்கு இயல்பறிவு எனும் சக்தி (உயிரியல் வாழ்வாதார இயல்பறிவு சக்தி) அமைப்பானது இயற்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயல்பறிவின் துணை கொண்டு உயிரியல் அமைப்புகள் ஒவ்வொன்றும் தத்தமது இருப்பிட இயல், வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இயல், தத்தமது வாழ்வாதார துணை இயல் என தத்தமது பரிணாம பரிமாற்ற வாழ்வாதார வாழ்வியல் முறைகளை தாவரங்கள் மற்றும் பஞ்ச பூதங்களின் துணையோடு இயற்கை கட்டமைப்பில் இயல்பாக மேற்கொள்கிறது. இவற்றில் சில வகை உயிரியல் ( பிரபஞ்ச உயிரியல்) அமைப்புகள் உருமாறும், உருமாறா தன்மையில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகிறது. இவ்வகை உயிரியல் உயிரினங்களே பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கோள் கட்டமைப்புகளிலும் , எல்லா காலங்களிலும் மரனம் தாண்டி வாழ்ந்து வருகிறது. இவற்றின் ஆயுட்காலம் பிரபஞ்ச ஆயுட்காலமாக தொடர்ந்த வண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் எனும் இயற்கை கட்டமைப்பே உயிரியல் வாழ்வாதாரத்திற்காகவே அமைந்திருக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள உயிரியல் அமைப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த, மாபெறும் சிறப்பு மிக்க, சர்வத்தையும் அறிந்து கொள்ளும் சர்வ வல்லமையும், சர்வ அதிகாரமும் கொண்டு பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வாழ்ந்து அனுபவிக்க கூடிய மகா மகத்துவம் வாய்ந்த உயிரியல் அமைப்பாகவே மனித உயிரியல் அமைந்திருக்கிறது.
இவ்வாறு மகத்துவம் வாய்ந்த மனிதர்கள் தாங்கள் மாத்திரமே வாழ்ந்துவிடாமல் இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் ……… போன்றவையும் வாழ்வாங்கு வாழ வழியாகவும், வாழ்வியலுக்கு தேவையான துணையாகவும் அமைய மனிதர்களுக்கு மாத்திரமே தொடர்ந்து வாழ்ந்திட, தொடரும் வாழ்வியலுக்கு தொடர் ஈர்ப்பு விசை சக்தியாக பகுத்தறிவு எனும் மகாமகா சக்தி இயற்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இம்மகா சக்தி வாய்ந்த மனிதர்கள் தங்களது வாழ்வியல் முறைகளில் சிறப்பான சிறப்பை வெளிபடுத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினத்தை நினைவில் கொண்டு சீர்திருத்தம் மிக்க சிறப்பான வாழ்வியல் தினமாக கொண்டாடி மகிழ்ந்து வாழ வழிகாட்டும் நாளாக உருவாக்கினர். அம்மாபெரும் தினத்தில் இன்றைய தினமாக கொண்டாடபடுவதன் முக்கியத்துவம் எதுவெனில் பகுத்தறிவை உயிரியல் நேயத்தோடு தாமும் வாழ்ந்து பிறரும் வாழ வழியும் உதவியுமாக இருப்பதை சமச்சீரான முறையில் வாழ்வதற்கும், அவ்வாறு இல்லாமல் வாழும் வாழ்வியலை சமச்சீரற்ற முறையில் வாழ்வதற்கும் ஏற்புடைய அறிவை பயன்படுத்தி வாழ்வோம் வாருங்கள். வாழ்வியலில் மனிதர்கள் தாங்கள் பிறந்த இரகசியத்தையும், தாங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் வாழும் இரகசியத்தையும் அறிய மனிதர்களின் சிறப்பறிவான பகுத்தறிவை அறிந்து உயிரியல் நேயத்தோடு வாழும் வாழ்வே சிறப்பான வாழ்வாகும். மேலும் மனித சமுதாயம் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும்தினமே மகத்தான வாழ்வியல் தினமாகும். மேலும் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் சமுதாயத்தில் முட்டாள் என்று யாருமே இல்லை என்பதை அறிய வேண்டும். அதேசமயம் பகுத்தறிவை முழுமையாக பயன்படுத்தாதவர் இருக்கிறார் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். எனவே மனிதர்கள் வாழ்வியலில் வாழ்வாதார இரகசியம் அறிந்து வாழ்வோம். மேன்மை தங்கிய வாழ்வியலை வாழ்ந்து வாழ்வியலாக்குவோம் வாருங்கள்.
நன்றி வணக்கம்.
Leave a Reply