பிரபஞ்ச ஈர்ப்பு விசை 2 வகை

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பல்வேறு இயற்கை கட்டமைப்புகளில் இணைந்து இயங்கி கொண்டிருக்கிறது. இந்த இணைப்பு இயக்கங்களுக்கு மிக முக்கியமான காரணமாக அமைவது ஈர்ப்பு விசையாகும். இந்த ஈர்ப்பு விசையை தான் பிரபஞ்ச ஈர்ப்பு விசை என்கிறோம்.
பிரபஞ்ச ஈர்ப்பு விசை என்பது பிரபஞ்ச பாதுகாப்பு வலயத்தின் துணையோடு பிரபஞ்சம் முழுவதையும் தமது ஈர்ப்பு விசையின் வாயிலாக தாங்கி நிற்பதற்கும், சுழற்சி இயல் முறையில் இயங்குவதற்கும் உதவுகிறது.

பிரபஞ்சத்தின் மூல இயக்கங்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்ச ஈர்ப்பு விசையோடு இணைந்தும் – பிரிந்தும் இயக்குதலாக – இயங்குதலாக இயங்கி கொண்டிருக்கிறது.

பிரபஞ்ச இயக்கத்தில் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து இயங்கும் மூல இயக்கங்களுள் மிக முக்கியமானவையாக கருதப்படுவதே கீழ் காணும் 8 வகையான ஈர்ப்பு விசைகளாகும். பிரபஞ்ச இயக்கங்களுக்கு மூலமாக அமைந்திருக்கும் ஈர்ப்பு விசைகளை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

பிரபஞ்ச ஈர்ப்பு விசை 2 வகைப்படும்.
1. முறை சார்ந்த ஈர்ப்பு விசை.
2. முறை சாராத ஈர்ப்பு விசை
என இரு பெரும் பிரிவுகளாக இயங்குகிறது.

1. முறை சார்ந்த ஈர்ப்பு விசை:
முறை சார்ந்த ஈர்ப்பு விசையில்
1. பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை
2. பஞ்ச பூத ஈர்ப்பு விசை
3. வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை
4. ஒளி – இருள் ஈர்ப்பு விசை
என நான்கு பிரிவுகளில் இயங்குகிறது.

2. முறை சாராத ஈர்ப்பு விசை:
முறை சாராத ஈர்ப்பு விசையில்:
1. கோள் ஈர்ப்பு விசை
2. கோள் சுழற்சி ஈர்ப்பு விசை
3.. கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை
4. மின் காந்த ஈர்ப்பு விசை
என நான்கு பிரிவுகளில் இயங்குகிறது.

பிரபஞ்ச ஈர்ப்பு விசையின் இயக்கம்:
பிரபஞ்ச ஈர்ப்பு விசை இணைந்து இயங்குதலை முறைசார்ந்த இயக்கம் என்றும், பிரிந்து – இணைந்து இயங்குவதை முறை சாராத இயக்கம் என்றும் அழைக்கலாம்.

முறை சார்ந்த ஈர்ப்பு விசை:
முறை சார்ந்த ஈர்ப்பு விசை என்பது பிரபஞ்சத்தின் துவக்கத்தில் இருந்து – இறுதி வரை மாறாத இயக்கத்தில் இருந்து மாறி இயங்குகிற இயக்கத்திற்கு துணையாக அமைத்திருப்பதாகும்.

முறை சார்ந்த ஈர்ப்பு விசையில் முதலாவதாக அமைந்திருக்கும் பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையை அறிவோம்.

1. பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை:
முறை சார்ந்த இயக்கத்தில் தான் பிரபஞ்சத்தில் பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையானது முதன்மையாகவும், முழுமையாகவும் அமைந்திருக்கிறது.

பிரபஞ்ச பாதுகாப்பு வலயமானது பிரபஞ்ச கட்டமைப்போடு இணைந்து இருக்கிறது.

பிரபஞ்ச பாதுகாப்பு வலயமானது பிரபஞ்சத்தின் வெளி கட்டமைப்பிற்கும் – பிரபஞ்சத்தின் உள் கட்டமைப்பிற்கும் பாதுகாப்பு கவசமாக அமைந்திருக்கிறது.

பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையானது பிரபஞ்சத்தின் வெளி கட்டமைப்பில் இருந்து பிரபஞ்ச உள் கட்டமைப்பிற்குள் எதுவும் செல்ல இயலாதவாறு தடுப்பு மையமாக அமைந்திருக்கிறது. அது போலவே பிரபஞ்சத்தின் உள் கட்டமைப்பில் இருந்து பிரபஞ்சத்தின் வெளி கட்டமைப்பை கடந்து எதுவும் செல்ல இயலாதவாறு தடுப்பு மையமாக அமைந்திருக்கிறது.

முறை சார்ந்த ஈர்ப்பு விசையில் இரண்டாவதாக அமைந்திருக்கும் பஞ்சபூத ஈர்ப்பு விசையை அறிவோம்.

2. பஞ்சபூத ஈர்ப்பு விசை:
பஞ்ச பூதங்களால் அமைந்திருப்பது தான் பிரபஞ்சம் என்பதை நாம் அறிவோம்.
பஞ்சபூதங்கள் ஐந்தும் பிரபஞ்ச கட்டமைப்போடு இணைந்து இருக்கிறது.

பரிணாம வளர்ச்சி:
முறை சார்ந்த ஈர்ப்பு விசை இயக்கங்களும், முறை சாராத ஈர்ப்பு விசை இயக்கங்களும் இணைந்து இயங்குகிற முறைகளில் தான் “இயற்கை பரிணாம வளர்ச்சி இயலும், உயிரியல் பரிணாம வளர்ச்சி இயலும்” உருவெடுக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Livin Senan Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Livin Senan
Guest

Hello Sri M. Mathiyalagan sir, Thank you very much for a simplified research article with a deep perspective. It simplifies the understanding of Universe Gravity, Thank you for sharing many articles related to gravity. When reading the article, I can come to an understanding of the importance of Method dependent Gravity. As the understandings of Method dependent Gravity shows and explores the possibilities of changes in Gravity that does not depend on Method. Better knowledge of Method dependent Gravity helps in exploring the science behind Gravity that does not depend on Method. For instance, Day – Night happens and a… Read more »